ரிலையன்ஸ் ஓய்வூதிய திட்டங்கள்
  • சிறந்த திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

பிறந்த தேதி
வருமான
| பாலினம்

1

2

கைபேசி எண்
பெயர்
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்

இந்தியாவில் முன்னணியில் இருக்கும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுள்   ரிலையன்ஸ் நிப்பான் ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் ஒன்றாகும். ஓய்விற்கு பிறகு உள்ள நாட்களில் தொடர்ச்சியான வருமான பாதுகாப்பு அளிக்கக் கூடிய ஒன்றையே மக்கள் எப்போதும் விரும்புகிறார்கள். ஓய்வூதிய திட்டங்கள் காப்பீடு செய்யபட்ட நபரின் பணி ஓய்விற்கு பின்னர் அவர்களுக்கான பாதுகாப்பை அளிக்கிறது. 2017 மார்ச் 31 கணக்கின் படி, கிட்டதட்ட 10 மில்லியனுக்கும் அதிகமான பாலிசிதாரர்களையும், உறுதியான தொலை தொடர்புகளை வழங்கக் கூடிய 700 க்கும் அதிகமான கிளைககளையும், 75000 அதிகமான ஆலோசகர்களும் கொண்டிருக்கும் மிகப் பெரிய வங்கி ஆதரவு அல்லாத தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் இந்த நிறுவனமும் ஒன்றாகும். மார்ச் 31, 2017 நிலவரத்தின் படி,  தொழில்துறையில் கோரிக்கையை தீர்க்கும் விகிதங்களில் இந்த நிறுவனமானது முதல் இடத்தைப் பிடித்துள்ளது, அதாவது சதவிகிதத்தில் 95.21% என குறிப்பிடப்படுகிறது.

ரிலையன்ஸ் நிப்பான் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் என்பது ரிலையன்ஸ் தலைமயக்கத்தின் ஒரு பகுதியாகும்,  இந்தியாவின் முன்னணி தனியார் துறை நிதி சேவையக நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும் மேலும் நிப்பான் ஆயுள் காப்பீடானது நிஸே என்று அழைக்கபடுவதுடன் மார்ச் 31, 2016 நிலவரத்தின் படி ரூபாய் 3,66,198 கோடி வருமானமும், (அமெரிக்க $ 55 பில்லியன்), ரூபாய் 41,380 கோடி இலாபமும் கொண்ட (அமெரிக்க $ 6 பில்லியன்) ஜப்பானின் மிகப் பெரிய தனியார் ஆயுள் காப்பீடு நிறுவனத்திலிருந்து 25% பங்கினையும் பெறுகிறது.

நீங்கள் இளமையானவர் மற்றும் தனிநபராக சம்பாதிக்கிறீர்கள். உங்களுடைய வருமானம் உங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க அனுமதிக்கிறது, பணி ஓய்விற்கு பிறகும் அதே வாழ்க்கையை வாழ முடியாது என்பது உங்களின் ஒரே கவலையாக இருக்கும். உங்களுடைய பணிஓய்வு வாழ்கைக்காக பணத்தை சேமிக்க இந்த ஓய்வூதிய திட்டமானது உதவுகிறது. உங்களுடைய ஓய்விற்கு பிறகு தொடர்ச்சியாக சில வருமானத்தை நீங்கள் பெற உறுதியளிக்கிறது, இதன் மூலம் வேறு எந்த நபரையும் சார்ந்து இல்லாமல் இருப்பதற்கு அல்லது அதே வாழ்க்கையை விட்டுக் கொடுக்காமல் அதை தக்க வைத்துக் கொள்ள உங்களுக்கு உதவுகிறது.

ரிலையன்ஸ் ஓய்வூதியத் திட்டத்தில் இன்றே முதலீடு செய்து, பணி ஓய்விற்குப் பிறகு உள்ள உங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்.

ரிலையன்ஸ் ஓய்வூதியத் திட்டமானது காப்பீட்டாளரின் வருவாய் நின்ற பிறகும் கூட அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ உதவுகிறது. காப்பீடு செய்யப்பட்ட நபர் பணி ஓய்விற்கு பின்னர் அவர்கள் பிடித்தமான முறையில் வாழ்வதற்கும், அவர் / அவள் சுயமாக வருவாயை பெறுவதற்கும் இந்த ஓய்வூதிய நிதியானது பயனுள்ள ஆதாரமாக இருக்கின்றது.

ரிலையன்ஸ் ஓய்வூதிய திட்டங்களின் வகைகள்

தற்போது இந்த நிறுவனம் மூன்று ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது:-

ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் பென்ஷன் பில்டர்

இந்த ரிலையன்ஸ் ஓய்வூதிய பில்டர் திட்டமானது நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் உங்களுடைய ஒய்வு காலத்திற்காக பணத்தை தொடர்ச்சியாக சேமிக்க உங்களுக்கு உதவுகிறது. பிரீமியத்தை ஐந்து ஆண்டுகளாக, ஏழு ஆண்டுகளாக, பத்து ஆண்டுகளாக அல்லது பாலிசி கால வரையறை வரை செலுத்துவதன் மூலம் மொத்த ஓய்வூதிய தொகையை உங்களால் உருவாக்க முடியும்.

 ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் உடனடி ஆண்டுத்தொகைத் திட்டம்

உங்களுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு தொடர்ச்சியான வருவாயை சம்பாதிக்க இந்த ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் உடனடி ஆண்டுத் தொகைத் திட்டமானது உதவுகிறது. மிகப்பெரிய மொத்த தொகையை நீங்கள் செலுத்தக் கூடிய ஒரு ஒற்றைப் பிரீமிய திட்டமாகும்,  மற்றும் உங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு உங்களின் ஆண்டுத் தொகை விருப்பத்தை தேர்வு செய்யவும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுத்தொகை விருப்பம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட செலுத்தும் முறைகளின் அடிப்படையில் நீங்கள் தொடர்ச்சியாக ஆண்டுத் தொகை வருவாயைப் பெற தொடங்குவீர்கள்.

ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் சிறப்பான ஓய்வூதிய திட்டம்

ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் சிறப்பான ஓய்வூதிய திட்டம் என்பது ஒரு பங்குதாரர் அல்லாத யூனிட் லிங்டு ஓய்வூதியத் திட்டம் ஆகும். உங்களுடைய பணி ஓய்விற்குப் பிறகு தொடர்ச்சியான வருவாயை உங்களுக்கு அளிப்பதற்காக தேவைப்படும் மொத்த தொகையைக் உருவாக்கவும், முறையாக சேமிக்கவும் உங்களுக்கு உதவுகிறது.

ரிலையன்ஸ் ஓய்வூதிய திட்டங்களின் நன்மைகள்

சிறந்த வருவாயை அளிக்கக் கூடிய பாலிசி கால வரையறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் காப்பீடு செய்ய பட்ட நபர் சிறந்த ஓய்வூதிய தொகுப்பை உருவாக்க முடியும். 

காப்பீட்டாளரின் ஒய்வூதிய தொகுப்பை மிகைப்படுத்த கூடுதல் போனஸ் உபயோகப்படுத்தப்படுகிறது. காப்பீட்டாளரின் ஓய்வூதிய நிதியை மிகைப்படுத்துவதற்கு அதிக தொகையை கூடுதலாக சேர்க்கப்படலாம். ரிலையன்ஸ் சிறப்பான ஓய்வூதியத் திட்டத்தில் காப்பீட்டாளர் தனது பணி ஒய்வு வயதைத் தேர்வு செய்ய அனுமதிக்கிறது.

காப்பீட்டாளருக்கு தேவைப்பட்டால் அவரது பணி ஓய்வு பெறும் வயதை அதிகரிக்குமாறு உள்ள விருப்பத்தை தேர்வு செய்யலாம். மேலும், காப்பீட்டாளர்  தான் தேர்ந்தெடுக்கும் ஆண்டுத் தொகையைப் பொறுத்து ஒரு நிலையான வருவாயை அடைவார். காப்பீட்டாளர் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மொத்த ஓய்வூதிய தொகையில் 1/3 அளவு தொகையை பெற்றுக் கொள்வதற்கான உரிமையை அளிக்கிறது.  

காப்பீடு செய்யப்பட்ட நபர் இறக்கும் பட்சத்தில் அவர் செலுத்திய பிரீமியங்களின் எண்ணிக்கை அடிப்படையில் காப்பீட்டாளரின் குடும்பத்திற்கு குறைந்த பட்சமாக உறுதியளிக்கப்பட்ட தொகையை அளிப்பதன் மூலம் அவர்களுக்கு ரிலையன்ஸ் திட்டமானது பாதுகாப்பு அளிக்கிறது.

மேலும், வருமான வரி கொள்கைகளின் படி காப்பீட்டாளர் முதலீடு செய்யும் முதலீட்டிற்கும், அவர்  பெறும் வருவாய்க்கும் வரிசலுகைகள் உண்டு.

ரிலையன்ஸ் ஸ்மார்ட் ஓய்வூதிய திட்டம் எதற்காக?

இந்த ரிலையன்ஸ் ஓய்வூதியத் திட்டமானது காப்பீட்டாளரின் எதிர் காலத்திற்கான ஓய்வூதிய நிதியை உருவாக்குவதற்கும், காப்பீட்டு செய்யப்பட்ட நபர் பணி ஓய்வு வயதை தீர்மானிப்பதற்கும் உதவுகிறது. இது காப்பீடு செய்யப்பட்ட நபர் ஒரு நடுநிலையான வாழ்க்கையை வாழ்வதற்கான சுதந்திரத்தை வழங்குகிறது, மேலும் இது காப்பீடு செய்யப்பட்ட நபரின் வாழ்நாள் முழுவதும் ஒரு தொடர்ச்சியான வருவாயை பெறுவதற்கான உறுதியையும் அளிக்கிறது.