டெர்ம் இன்சூரன்ஸ் கால்குலேட்டர்
  • term திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

தொலைபேசி எண்
பெயர்
பிறந்த தேதி

1

2

வருமான
நகரம்

தொடர்வதன் மூலம் எங்கள் டி & சிமற்றும் தனியுரிமைக் கொள்கையைஏற்றுக்கொள்கிறீர்கள்

ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் பிளான் கால்குலேட்டர் என்பது உங்களுக்கு விருப்பமான தொகையில் பெறுவதற்கான வகையில் உங்களுக்கு தேவையான லைஃப் கவரை கணக்கிட உதவப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருவியாகும். இந்த கால்குலேட்டர், உங்களுக்கு தேவையான லைஃப் கவரின் சரியான பிரீமியத்தை கணக்கிட உதவுகிறது. நீங்கள் ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் பிளானை வாங்குகிறீர்கள் என்றால் இந்த கால்குலேட்டர் ஆனது அனைத்து லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் வலைத்தளத்திலும் கிடைக்கப் பெறுகிறது மற்றும் கைக்கு அடக்கமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நினைவில் வைத்து கொள்ளுங்கள் டெர்ம் பிளானில், லைஃப் கவர் என்பது மிக முக்கிய பகுதியாகும். இது உங்களின் திடீர் மறைவு போன்ற சந்தர்ப்பங்களில் உங்களின் நாமினிக்கு கிடைக்கக்கூடிய தொகையாகும்.

டெர்ம் பிளான் கால்குலேட்டரின் நன்மைகள்

ஒரே இடத்தில் பல்வேறு பிளான்களை ஒப்பீடு செய்தல்: பொதுவாக இன்சூரன்ஸன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட டெர்ம் பிளான்களை வழங்குகின்றன. டெர்ம் பிளான் கால்குலேட்டரை பயன்படுத்தி, பல்வேறு பிளான்களின் அம்சங்கள் மற்றும் பிரீமியங்களை ஒப்பீடு செய்யலாம் மற்றும் உங்களுக்கு சரியாக பொருந்தும் பிளானை தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் இன்சூரன்ஸ் ஒப்பிடுதல் இணையதளத்தில் நுழைந்தால், டெர்ம் பிளான் கால்குலேட்டரை பயன்படுத்துவதோடு, ஒரே இடத்தில் பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பிளான்கள் மற்றும் பிரீமியங்ளை ஒப்பிடவும் செய்யலாம். 

நேரம் சேமிப்பு மற்றும் தொந்தரவு இல்லை: ஆன்லைனில் டெர்ம் பிளான் பற்றி ஒப்பிடும் பொழுது , நீங்கள் எந்தவொரு ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. சில நிமிடங்களிலேயே மேற்கோள்களை பெற்று  எதை வாங்கலாம் அல்லது எதை வாங்க கூடாது என்பது பற்றி உடனடி முடிவை எடுக்க முடியும். 

பயனுள்ள செலவு: டெர்ம் பிளான் கால்குலேட்டர் பயன்படுத்தி பிரீமியத்தை கணக்கீடு செய்து விட்டீர்கள் என்றால், நீங்கள் ஆன்லைனில் டெர்ம் பிளானை வாங்கலாம். எந்தவொரு இடைத்தரகர்களின் செயல்பாடுகள் அல்லாத பிரீமியங்கள் குறைவாக இருப்பதனால் ஆன்லைனில் வாங்குதல் மலிவானது.

டெர்ம் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை எவ்வாறு பயன்படுத்துவது?

  1. முதலில், உங்களின் பெயர் , பிறந்த தேதி , பாலினம் , வருமானம் , திருமண நிலை மற்றும் உங்கள் குடும்பத்தின் அமைப்பு உள்ளிட்ட உங்களின் தனிப்பட்ட விவரங்களை நீங்கள் அளிக்க வேண்டும். 
  2. அடுத்தப்படியாக, உங்கள் மற்றும் உங்களின் குடும்பத்தின் சுகாதாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இதைத் தவிர, உங்களிடம் பான் , ஆதார் மற்றும் வங்கி விவரங்களை அளிக்க கேட்கப்படலாம். 
  3. மூன்றாவது படியில், நீங்கள் விரும்பும் இன்சூரன்ஸ் தொகை, லைஃ ப் கவரின் காலம் மற்றும் பிரீமியம் செலுத்தும் முறை ஆகியவற்றை அளிக்கவும். உங்களின் பிரீமியம் செலுத்தும் முறையானது மாதாந்திரம் , காலாண்டு , அரை ஆண்டு அல்லது வருடத்திற்கு ஒருமுறை என எது வேண்டுமானாலும் இருக்கலாம். 
  4. பிரீமியம் பற்றி உங்களுக்கு தெரிந்த உடன், உங்களின் நெட் பேங்கிங் வசதி அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி டெர்ம் பிளான்-ஐ நீங்கள் வாங்கி கொள்ளலாம்.   

டெர்ம் இன்சூரன்ஸ் என்றால் என்ன ?

டெர்ம் இன்சூரன்ஸ் பிளான்கள் ஆனது பாரம்பரிய வகையிலான இன்சூரன்ஸ் பிளான் ஆகும். இது பாலிசிதாரருக்கு மலிவான ஒன்றாக இருந்து, அவரால் நேசிக்கப்படுபவர்களுக்கு(குடும்பம்) முழுமையான பாதுகாப்பை மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை வழங்குவதோடு, எவ்விதமான எதிர்பாராத நிகழ்வுகளுக்கும் எதிரான கவரை வழங்குகிறது. டெர்ம் இன்சூரன்ஸ், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அல்லது ஆண்டிற்கு கவரேஜை வழங்கும் ஒருவகையான லைஃப் இன்சூரன்ஸ் ஆகும். இன்சூரன்ஸ் செய்தவரின் மரணம் பாலிசி காலத்தில் நிகழ்ந்தால் இன்சூரன்ஸ் தொகையானது செலுத்தப்படும். பாலிசி காலத்தில் இன்சூரன்ஸ் செய்தவர் வாழ்ந்து வந்தால் பாலிசி காலம் முடியும் வரை எந்தவொரு தொகையும் செலுத்தப்படாது. 

லைஃப் இன்சூரன்ஸ் எடுப்பதன்  நோக்கமானது பாலிசிதாரருக்கு லைஃப் கவர் மற்றும் குடும்பத்திற்கு நிதி சார்ந்த பாதுகாப்பு வழங்குவதாகும். 

தனிநபர் ஆயுள் காப்பீடு (லைஃப் இன்சூரன்ஸ்) பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. 

  • டெர்ம் இன்சூரன்ஸ் என்று அழைக்கப்படும் ஃபியூர் லைஃப் கவரை தேர்தெடுக்கலாம். 
  • எண்டவ்மென்ட்(ஆஸ்தி) இன்சூரன்ஸ் எனப்படும் சேமித்து வைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டதுடன் கொண்ட லைஃப் கவரை தேர்ந்தெடுக்கலாம்.  

ஏன் டெர்ம் இன்சூரன்ஸ் சிறந்தது?

டெர்ம் பிளான் ஆனது ஃபியூர் லைஃப் கவரை வழங்குகிறது. இதற்கான அர்த்தம் சேமிப்பு / இலாபக் கூறுகள் இல்லை என்பதாகும். இது பிற விருப்பங்களுக்கு நேருக்கு நேராக மிக மலிவான லைஃப் இன்சூரன்ஸை உருவாக்கும் அடிப்படை பிளான் ஆகும். இது போன்ற எண்டவ்மென்ட் பிளான் உடன் ஒப்பிடும் பொழுது குறைந்த பிரீமியத்தில் பெரிய ஆயுள் பாதுகாப்பை (லைஃப் கவரை) பாலிசிதாரர் தேர்ந்தெடுப்பது சாத்தியமாகும்.     

டெர்ம் பிளானில் உள்ள பிரீமியம் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மற்றும் பாலிசியின் காலம் அதிகரிக்கும் பொழுது, பிரீமியம் செலுத்துவதற்கான அதே இன்சூரன்ஸ் தொகை அதிகரிக்கும் பொழுது மாறுபடும் . டெர்ம் இன்சூரன்ஸ் பிளான் பெறுவதற்கான தகுதி அளவீடுகள் இன்சூரன்ஸ் வாங்குபவருக்கு ஏற்ப மாறுபடும். குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் மற்றும் அதிகப்பட்ச வயது 65 ஆண்டுகளாகும். டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் ஆனது பிற லைஃப் இன்சூரன்ஸ் வகைகளைக் காட்டிலும்  குறைவானதாக இருக்கும். முதலீட்டு கூறுகள் இல்லை என்பதால் பிரீமியம் குறைவானதாக இருக்கும். மேலும் முழு பிரீமியமும் அபாயத்தை கவர் செய்ய செல்கிறது. எனவே, பாலிசிதாரர் இன்சூரன்ஸ் பாலிசியின் காலத்தில் மறைந்து விட்டால், இன்சூரன்ஸ் தொகை வடிவிலான நன்மையானது அவரின் நாமினியை சென்றடையும். ஒருவேளை பாலிசி காலம் காலாவதி ஆகி விட்டால், மேற்கூறிய பயன் ஏதுமில்லை. சில பிளான்கள் இன்சூரன்ஸ் செய்தவர் பாலிசி முடிந்தும் வாழ்ந்து வந்தால் அவர் செலுத்திய பிரீமியம் தொகையை திருப்பி வழங்கலாம்.

டெர்ம் இன்சூரன்ஸ் பிளானின் நன்மைகள்

குறைந்த பிரீமியம்: நீங்கள் டெர்ம் பிளான் கால்குலேட்டரை பயன்படுத்தி கொள்ள மமுடியும். அதன் மூலம் குறைத்த பிரீமியத்தில் அதிகபட்ச இன்சூரன்ஸ் தொகை அல்லது லைஃப் கவரை நீங்கள் பெறலாம். ஆயினும், நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால் , உங்களின் ஹெல்த் ஹிஸ்ட்ரி எப்படி உள்ளது , இன்சூரன்ஸ் தொகை மற்றும் பாலிசியின் காலம் ஆகியவற்றை பொறுத்து பிரீமியம் தொகை இருக்கும். அதனுடன் இணைந்த எந்தவொரு துணை ஆதாயமும் இல்லை என்பதால் டெர்ம் பிளான் உடைய பிரீமியம் மற்ற பிளான்களுடன் மலிவானது. வழக்கமான அல்லது பாரம்பரிய பிளான்களின் பிரீமியங்களுடன் ஒப்பிடுகையில், டெர்ம் இன்சூரன்ஸ் பிரீமியங்கள் ஆனது மலிவானது என கண்டறியப்பட்டுள்ளது.

குறைந்த காலத்திற்கு: குறுகிய காலத்திற்கான டெர்ம் பிளானை எடுத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு - நீங்கள் 15 ஆண்டுகளுக்கு 75 லட்சம் ரூபாய் வீட்டு கடனை எடுத்துள்ளீர்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வீட்டுக் கடன் தொகைக்கு சமமான அளவிற்கு டெர்ம் பிளான் வழியாக கூடுதல் லைஃப் கவரை எடுத்துக் கொள்ளலாம். இது உங்களின் திடீர் மறைவிற்கு பிறகு உங்கள் வீட்டின் கடனை உங்கள் குடும்ப திருப்பி செலுத்துவதையும், அதனை காப்பாற்றுவதையும் உறுதி செய்கிறது. 

நீண்ட காலத்திற்கு: அதிகபட்சமாக 75 ஆண்டுகள் வரையிலான ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவில் வாழும் ஆயுட்காலம் அதிகரித்து வருவதால், நீங்கள் வயது முதிர்ந்த காலத்தில் இறந்தாலும் உங்கள் குடும்பத்தின் நிதி சார்ந்த எதிர்காலத்தை பாதுகாப்பதில் உங்களுக்கு டெர்ம் பிளான்ஸ் உதவுகிறது. 

வருமான வரி நன்மைகள்: வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 80C கீழ் டெர்ம் பிளானுக்கு செலுத்தப்பட்ட பிரீமியத்திற்கான வரி விலக்கில், நிதியாண்டில் 1,50,000 வரையில் பெறப்படலாம். முதிர்வு நன்மைகள் ( ஒருவேளை டெர்ம் பிளான் உடன் பிரீமியம் திரும்பும் விருப்பம்) மற்றும் க்ளைம் தொகை ( உங்களின் நாமினி மூலம்  பெறப்படுபவை) கூட வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 10 (10D) கீழ் வரி விலக்கு பெறுகிறது. 

டெர்ம் பிளான்ஸ் ஆனது உங்கள் குடும்பத்தின் நிதிசார்ந்த எதிர்காலத்தை பாதுகாக்கும் எளிய தயாரிப்பாகும். டெர்ம் பிளான் கால்குலேட்டர் பயன்படுத்துவதன் மூலம், குறைந்த பிரீமியத்தில் நீண்ட காலத்திற்கான சரியான டெர்ம் பிளானை ஒப்பிடவும், வாங்கவும் முடியும். 

சரியான டெர்ம் பிளானை தேர்வு செய்க?

ஓர் டெர்ம் இன்சூரன்ஸ் பிளான் ஆனது ஒரு பெரிய முதலீடு செய்வதற்கான சிறந்த நிதி கருவியாக இருப்பதாக குறிப்பிடுவதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனலாம். எதிர்காலத்தில் நிகழும் ஒவ்வொரு தேவையற்ற நிகழ்வுகளில் இருந்து உங்கள் குடும்பத்தை பாதுகாக்க எப்போதும் துணை நிற்கும். இந்த பிளான் குறைந்த பிரீமியத்தில் பெரிய பாதுகாப்பை அளிக்கிறது. உங்கள் டெர்ம் பிளானின் பெரும் பகுதியினைப் பெறுவதற்கு, அதனை வாங்கும் பொழுது மனதில் பின்வரும் படிகளை வைத்திருக்க வேண்டும். 

போதுமான இன்சூரன்ஸ் தொகையை உறுதிப்படுத்தவும்: ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் பிளான் வாங்கும் பொழுது நீங்கள் மனதில் வைத்திருக்க வேண்டிய மிக முக்கியமான படிநிலை சரியான கவரேஜ் தொகையாகும். நம் எதிர்காலத்தை கணிக்க முடியாது என்பது நம் அனைவருக்கும் தெரியும், ஆகையால் நீங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவரின் எதிர்காலத்தை பாதுகாக்க, டெர்ம் இன்சூரன்ஸில் ,முதலீடு செய்வது நல்லது. உங்களுடைய குடும்பத்திற்காக நீங்கள் தீர்மானிக்கும் உறுதிச் செய்யப்பட்ட தொகையானது, அவர்களின் அடிப்படை மற்றும் பிற பொறுப்புகள் அடங்கிய எதிர்கால செலவினங்களை போதுமானதாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

புத்திசாலித்தனமாக பாலிசியின் காலத்தை தேர்வு செய்யவும்: பெரும்பாலான நிறுவனங்கள் அவர்களின் நிலையான விருப்பங்களான 15, 20, 25 அல்லது 30 ஆகிய ஆண்டுகளில் இருந்து பாலிசி காலத்தை தேர்வு செய்ய அனுமதிக்கின்றன. உங்களின் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசியின் சரியான பாலிசி காலத்தை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமானதாகும். மேலும், அதனுடன் பல விசயங்களும், நன்மைகளும் இணைந்து வருகின்றன. அதனை தேர்ந்தெடுக்கும் பொழுது, குறைந்தது உங்களின் ஓய்வு பெறும் காலம் வரையில் தேவையான பாதுகாப்பை வழங்கும் சரியான பிளானை தேர்ந்தெடுப்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். உங்களின் 65 வயது வரையில் பாதுகாப்பு வழங்கக்கூடிய கவரை நீங்கள் வாங்க வேண்டும். இன்றைய நாட்களில் மக்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்கிறார்கள், எனவே அவர்களின் பொறுப்புகள் 60 வயதிற்குள் முடிந்து விடுவதில்லை. 

ஒப்பிடவும் மற்றும் வாங்கவும்: ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் பிளானை வாங்கும் பொழுது, பல விசயங்கள் அதனுடன் தொடர்புடையவையாக இருக்கும் என்பதால் சிறந்ததை தேர்ந்தெடுப்பதற்கு மிக அதிகளவில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்தியாவில் பல இன்சூரன்ஸ்  நிறுவனங்கள் உள்ளன, அவை வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளுக்கு எளிதில் பொருந்தக்கூடிய பல்வேறு வடிவங்களில் டெர்ம் இன்சூரன்ஸ்களை கொண்டிருக்கின்றன. கிடைக்கக்கூடிய அனைத்து விருப்பங்களுடைக்கியே, சிறந்த ஒன்றை தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருக்கலாம், அதையே நீங்கள் ஆன்லைனில் வாங்கும் பொழுது கிடைக்கும் மேற்கோள்களை ஒப்பிட்டு கொள்ளலாம். இது உங்களுக்கு நிறைய நேரத்தையும், பணத்தையும் சேமிக்க உதவும்.

பணவீக்கம் காரணி: ஓர் பயனுள்ள டெர்ம் இன்சூரன்ஸை வாங்கும் பொழுது பணவீக்க காரணியை நீங்கள் கருதில் கொள்ள வேண்டும். ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் பிளான் இன்றைய தினத்திற்கு போதுமானதாக இருக்கலாம், ஆனால் உங்களுக்கு தேவைப்படக்கூடிய 20 வருடங்களுக்கு பிறகான செலவினங்களை சமாளிக்க முடியாமல் போகலாம். இதற்கு பின்னால் ஒவ்வொரு ஆண்டின் பணவீக்கம்  விகிதம் அதிகரிப்பு இடம்பெறுகிறது. ஆண்டுதோறும் உங்கள் கவரேஜ் 5-10 சதவீதம் அ திகரிக்கும் பிளான்களை பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி உள்ளன. ஆனால், மற்ற திட்டங்களை ஒப்பிடும் பொழுது இதற்கான பிரீமியம் அதிகமாக இருக்கும். ஆகையால், ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் பிளானை வாங்கும் பொழுது பணவீக்க காரணியை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

- / 5 ( Total Rating)