மோட்டார் இன்சூரன்ஸ்
  • சிறந்த திட்டங்கள்
  • எளிதான ஒப்பீடு
  • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

மோட்டார் இன்சூரன்ஸ் என்பது கார், ட்ரக், பைக்குகள் போன்ற பல்வேறு வாகனங்களுக்கு வாங்கப்படும் வாகன இன்சூரன்ஸ் ஆகும். இயற்கை அழிவுகள் அல்லது மனிதனால் உருவாகும் ஆபத்துகளின் காரணமாக வாகனங்களுக்கு ஏற்படும் திருட்டு, உடல்சார்ந்த சேதங்கள், உள்ளிட்டவைகளுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. 

வணிகம் மற்றும் தனிப்பட்ட தேவைகளின் பயணங்களுக்காக ஓர் வாகனத்தை வாங்கி மகிழ மக்கள் கடுமையாக உழைக்கின்றனர். இருப்பினும், எதிர்பாராத துரதிர்ஷ்டவசமாக நிகழ்வுகள் எந்த நேரத்திலும் நடக்கவும் மற்றும் உங்கள் வாகனத்தில் மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. வாகனத்தை பழுதுப்பார்த்தலுக்கான செலவுகள் அல்லது பாகத்தினை மாற்றுவதற்கான செலவுகள் அதிகமாக இருக்கும். இதனால், உங்கள் வாகனத்தின் முழுமையான பராமரிப்பிற்கு வாகன இன்சூரன்ஸ் வைத்து இருப்பது அவசியம். 

மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மோட்டார் இன்சூரன்ஸ் வைத்து இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், மோட்டார் இன்சூரன்ஸ் ப்ளான் ஆவணம் வாகனத்திற்கான ஒரு மிக முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் நீங்கள் எந்தவொரு வாகனத்தை வைத்து இருந்தாலும், நிச்சயம் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் ப்ளான் கொண்டிருக்க வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது. பெரும்பாலும், மூன்றாம் தரப்பினர் இன்சூரன்ஸ் பாதுகாப்பே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

மோட்டார் வாகன இன்சூரன்ஸ் ப்ளான் வகைகள்

இந்தியாவில் இருவகையான வாகன இன்சூரன்ஸ் தயாரிப்புகளைக் கொண்டு உள்ளோம்- மூன்றாம் தரப்பினர் கவர் மற்றும் விரிவான இன்சூரன்ஸ் ப்ளான். ஒரு சிறந்த வாகன இன்சூரன்ஸ் ப்ளானை தேர்வு செய்வதில் குழப்பம் அடையலாம். ஆனால், இன்சூரன்ஸ் ப்ளான்களின் அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால் சிறந்த பாலிசியை தேர்வு செய்வது மிகவும் எளிதாகும். 

மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் – இந்த வகையான இன்சூரன்ஸ் பாலிசி உங்களால் மூன்றாம் நபருக்கு(பிற) ஏற்படும் சேதங்களுக்கான பாதுகாப்பை வழங்குகிறது. விபத்து சூழ்நிலைகளில், உங்களின் மூலம் மூன்றாம் தரப்பினரின் கார் அல்லது அது தொடர்பான உதிரி பாகங்களுக்கு ஏற்படும் அனைத்து சேதங்களில் இருந்து அவருக்கு மூன்றாம் தரப்பினர் இன்சூரன்ஸ் ப்ளான் மூலம் பாதுகாப்பு அளிக்கப்படும் என்பதாகும். மேலும், இது விபத்தில் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் காயங்களுக்கும் பாதுகாப்பு வழங்குகிறது. குறிப்பாக, இவை மூன்றாம் தரப்பினர் பொறுப்பு(தர்டு பார்ட்டி லியபிலிட்டி) கவரேஜ்-ஐ மட்டுமே வழங்குகிறது, உங்களுக்கு(வாகன உரிமையாளர்) அல்ல.

விரிவான இன்சூரன்ஸ் ப்ளான் – விரிவான இன்சூரன்ஸ் ப்ளானில், உங்கள் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் அனைத்துக்கும் கவரேஜ் வழங்குகிறது மற்றும் மூன்றாம் தரப்பினர் பாதுகாப்பு கூட இதில் சேர்க்கப்பட்டு உள்ளது. 

மோட்டார் இன்சூரன்ஸ்களை ஆன்லைனில் ஒப்பிடுவது எப்படி?

சிறந்த மோட்டார் இன்சூரன்ஸ் ப்ளான்களை வாங்குவது ஒரு கடினமான செயல்முறையாக இருக்கலாம், ஆனால் PolicyX.com-ல் நாங்கள் உங்களுக்கு அதனை எளிதாகவும், தொந்தரவு இன்றியும் ஏற்படுத்தி தந்துள்ளோம். முன்னணியில் உள்ள மோட்டார் இன்சூரன்ஸ் வழங்குபவர்களிடம் இருந்து மேற்கோள்களை ஒப்பிடுவதற்கான எளிதான வழிகளை நாங்கள் வழங்குகிறோம். உங்களின் தேவைக்கேற்ப சிறந்த ப்ளான்களை தேர்வு செய்வதற்காக உங்களுக்கு உதவுகின்ற அனைத்து மேற்கோள்களையும் இலவசமாக வழங்குகிறோம்.

PolicyX.com இல் நீங்கள் விரும்பும் தயாரிப்பின் முழுமையான தகவல்களை சில நிமிடங்களில் இலவசமாகவே பெறலாம். சிறந்த மோட்டார் இன்சூரன்ஸ் ப்ளானை பெறுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, சில அடிப்படை விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும், இலவச மேற்கோள்களை ஒப்பிடவும், கட்டணத்தை செலுத்தவும், ஈமெயில் வழியாக பாலிசி ஆவணங்களை பெறுங்கள். இதனை செய்ய 10 நிமிடங்கள் எடுக்கும். இலவச மேற்கோள்களை ஒப்பீட்டு மற்றும் அதிகபட்ச ஆவணங்கள் இன்றி தேவையான பாலிசியை சில நிமிடங்களில் பெறுங்கள். 

புதிய பாலிசி வாங்குதல் 

நிரப்பப்பட்ட பாலிசி திட்டத்தின் படிவம் 

பதிவு சான்றிதழின் நகல்(ஆர்.சி)

மோட்டார் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் 

நிரப்பப்பட்ட பாலிசி திட்டத்தின் படிவம் 

முந்தைய பாலிசியின் நகல் 

பதிவு சான்றிதழின் நகல்(ஆர்.சி)

வாகன இன்சூரன்ஸின் முக்கியத்துவம்

இன்றைய நாட்களில் அனைவரும் பரபரப்பான சூழ்நிலையில் உள்ளோம். மக்கள் அனைவருக்கும் ஒரே நாளில் அனைத்து வேலைகளையும் முடிக்க வேண்டும். இவ்வாறு அதிகரிக்கும் பொறுப்புகள் ஆனது வேலை, குடும்பம் மற்றும் சமூகம் ஆகியவை சார்ந்தது, அதேபோன்று அவர்களுக்கான நேரம் இல்லாமல் போய்விட்டது. அவர்களின் நேரத்தை சேமிக்க, மக்கள் கார்களை வாங்குகின்றனர். அதிக நேரத்தை சேமிக்க மற்றும் சாலையில் வசதியான பயணத்தின் போது கார் மகிழ்ச்சி அளிக்க உதவுகிறது. கார் வாங்குதல் எவ்வாறு தவிர்க்க முடியாதது போன்று, மோட்டார் இன்சூரன்ஸ் ப்ளான்களும் அவசியம் தேவைப்படுகிறது. 

சாலையில் விபத்துகளின் எண்ணிக்கை மற்றும் கார்களின் திருட்டு உள்ளிட்டவை தொடர்ச்சியாக பெருகி வருகிறது. அது வாகன உரிமையாளர் கார் இன்சூரன்ஸ் ப்ளான் வாங்கும் பொறுப்பை உருவாக்குகிறது. 

மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தனியார் அல்லது வர்த்தக பயன்பாட்டிற்கு வாங்கிய நான்கு சக்கர வாகனம் அல்லது இருசக்கர வாகனம் என எதுவாக இருந்தாலும் புதிதாக வாகனத்தை வாங்கும் பொழுது மோட்டார் இன்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சரியான இன்சூரன்ஸ் பாதுகாப்பு இல்லையெனில் தன் சொந்த பணத்தில் இருந்து இழப்பீடுகளை வழங்கும் பொறுப்பை ஏற்க வேண்டி இருக்கும். விபத்துக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நிகழ வாய்ப்புள்ளது, அதன் விளைவால் கார் அல்லது இருசக்கர வாகனத்திற்கு அதிக சேதங்கள் ஏற்படலாம் மற்றும் நபருக்கும் தீங்குகள் ஏற்படலாம். 

இதுபோன்ற சூழ்நிலைகளில், மோட்டார் இன்சூரன்ஸ் ஆனது நன்மை பயக்கும் வகையிலானது. விபத்திற்கு வாகன ஓட்டுனர் பொறுப்பு ஏற்கும் சூழ்நிலையில், அதன் விளைவாக மூன்றாம் தரப்பினருக்கு அதிக அளவில் சேதங்கள் ஏற்படும் போது, அதற்கான செலவினங்களுக்கு உரிமையாளர் செலுத்த வேண்டி இருக்கும். இந்த சூழ்நிலையில், மூன்றாம் தரப்பு பொறுப்பு கவரேஜ் ஆனது பாதுகாவலர் போன்று செயல்படுகிறது மற்றும் நிதி இழப்புகளில் இருந்து உரிமையாளரை பாதுகாக்கிறது. 

உங்களின் வாகனம் மிக விலையுயர்ந்த முதலீடாக இருக்கலாம் மற்றும் விபத்துக்கள் மிகப்பெரிய இழப்புகளுக்கு கொண்டு சேர்க்கலாம், இதனால் மோட்டார் இன்சூரன்ஸ் பெறுவது அவசியம் ஆகும். இது திருட்டு, தீ உள்ளிட்ட பல விபத்துகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. 

வாகன இன்சூரன்ஸ் தயாரிப்புகளின் வகைகள்

அடிப்படையில், இந்தியாவில் வாகன இன்சூரன்ஸ்களை இரு வகைகளாக நாம் வகைப்படுத்தி உள்ளோம்: கார் இன்சூரன்ஸ் மற்றும் இருசக்கர வாகன இன்சூரன்ஸ். 

கார் இன்சூரன்ஸ் 

கார் இன்சூரன்ஸ் ஆனது காப்பீடு செய்பவர் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையேயான ஓர் ஏற்பாடு ஆகும். நீங்கள் கடினமாக உழைத்த பணத்தைக் கொண்டு காரை வாங்கிய பிறகு, அதில் ஏற்படும் பழுதுகள் மற்றும் சேதங்களுக்கு நீங்களே குறிப்பிட்ட பணம் செலுத்த வேண்டி இருக்கும். இவை வேதனை உடன் உங்கள் பைகளில் இருந்து செல்லும் மற்றும் உங்களின் சேமிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். 

நீங்கள் வாங்குவதற்கு பரிசீலிக்கக்கூடிய பல்வேறு ஆன்லைன் கார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இங்கு உள்ளன. 

இந்தியாவில், எந்தவொரு சேதங்கள் அல்லது திருட்டுகளுக்கு எதிராக நிதி சார்ந்த பாதுகாப்பினை வழங்க உங்கள் வாகனத்திற்கான இன்சூரன்ஸ் பாலிசி வைத்து இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், நீங்கள் அல்லது மூன்றாம் நபர் உள்ளடங்கிய விபத்து போன்ற இக்கட்டான சூழ்நிலையில் உங்களுக்கு மன அமைதியை அளிக்கிறது. 

இதில் உள்ளடக்கியது என்ன? 

சட்டத்தின் படி கார் இன்சூரன்ஸ் வைத்து இருப்பது கட்டாயமாகும். இந்தியாவில் ஓர் காரினை வாங்கி ஓட்டுவதற்கு முன்பு குறைந்தபட்ச அளவிலான இன்சூரன்ஸ் பெற்று இருப்பது சட்டப்படி அவசியமாகும். இந்த கவரேஜ் ஆனது ப்ளான்களின் வகைகள் மற்றும் காப்பீட்டாளர் ஆகியவற்றை பொறுத்து உள்ளது. இருப்பினும், நீங்கள் பெறக் கூடிய கார் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் கிடைக்கும் அடிப்படை கவரேஜ் பின்வருமாறு, 

அடிப்படை இன்சூரன்ஸ் கவர் 

இந்த கவர் ஒரு விரிவான கார் இன்சூரன்ஸ் ப்ளான்-ஐ உள்ளடக்கியது(உங்கள் வாகனம் திருடப்பட்டால், விபத்து அல்லது தீ மூலம் ஏற்படும் சேதங்கள்). மேலும், தனிப்பட்ட விபத்து பாதுகாப்பையும் உள்ளடக்கி உள்ளது. 

தர்டு பார்ட்டி லியமிலிட்டி 

இது உங்களுடைய காரின் மூலம் மூன்றாம் நபருக்கு ஏற்பட்ட எந்தவொரு காயங்கள் தொடர்பானவைக்கு எதிராக அந்நபருக்கு க்ளைம் பெறும் சூழ்நிலையில் உங்களுக்கு உதவுகிறது. 

சாலையோர உதவி 

காப்பீடு வழங்கும் பலர் சாலையோர உதவியை வழங்குகின்றனர். அவர்கள் மேலே குறிப்பிட்ட பல நன்மைகள் உடன் பல்வேறு சாலையோர நன்மைகளான, இழுத்து செலுத்தல், சிறிய பழுதுகளை சரிப்பார்த்தல், சாவியை தொலைத்தலுக்கான கவரேஜ் போன்றவற்றை வழங்குகிறது. 

டூவீலர் இன்சூரன்ஸ்

ஒரு டூவீலர் இன்சூரன்ஸ் ப்ளான் மூலம் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் சேதங்கள், திருட்டு மற்றும் பொறுப்பு கவரேஜ் உள்ளிட்டவைகளுக்கு எதிராக நிதி சார்ந்த பாதுகாப்பை வழங்குகிறது. இந்தியாவில் சாலைகளின் மோசமான நிலைகள் மற்றும் போக்குவரத்து நிலைமைகள் உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட அபாயங்கள் மற்றும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதன் காரணமாக இருசக்கர வாகன இன்சூரன்ஸ் என்பது அவசியமாகும். முன்னணி பைக் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் உதவியுடன் ஆன்லைனில் உங்களின் டூவீலர் இன்சூரன்ஸ்-ஐ புதுப்பித்துக் கொள்ள முடியும். 

இதில் உள்ளடக்கியது என்ன? 

விரிவான 

விரிவான இன்சூரன்ஸ் ப்ளானில், உங்கள் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் அனைத்துக்கும் கவரேஜ் வழங்குகிறது மற்றும் மூன்றாம் தரப்பினர் பாதுகாப்பு கூட இதில் சேர்க்கப்பட்டு உள்ளது. 

தர்டு பார்ட்டி லியமிலிட்டி 

 மூன்றாம் தரப்பினர் பொறுப்பு, இந்த வகையான இன்சூரன்ஸ் பாலிசி உங்களால் மூன்றாம் நபருக்கு(பிற) ஏற்படும் சேதங்களுக்கான பாதுகாப்பை வழங்குகிறது.

தனிப்பட்ட விபத்துக்கான பாதுகாப்பு கூட கிடைக்கின்றன. 

மோட்டார் வாகன இன்சூரன்ஸ் ப்ளான் வாங்குவதற்கு முன்பு கருத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள் 

மோட்டார் வாகன இன்சூரன்ஸ் வாங்குவதில் எளிதாக அணுகக்கூடிய ஓர் எளிதான இடைநிலையை இணையம் வழங்குகிறது என்பதில் சந்தேகமில்லை. மோட்டார் இன்சூரன்ஸ் வாங்கும் போது, நீங்கள் மற்றும் காப்பீடு வழங்குபவர் கவனத்தில் கொள்ள வேண்டிய இரு காரணிகள் தற்போது உள்ளன. காப்பீடு வழங்குபவர், எந்த ப்ளான் உங்களுக்கு வழங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது மற்றும் வாடிக்கையாளர் தன் தேவைகளை பூர்த்தி செய்ய எந்த இன்சூரன்ஸ் ப்ளான் வாங்க வேண்டும் என்பது தீர்மானிக்க வேண்டும். 

உங்கள் பாலிசி வாங்கும் நேரத்தில், மோட்டார் இன்சூரன்ஸ் ப்ளான் உடல் காயங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறதா அல்லது இல்லையா என்பதை சோதிக்க வேண்டும். ஆம் என்ற தெரிய வந்தால், கவரேஜின் அளவை சோதிக்க வேண்டும். எந்தவொரு மோசமான சூழ்நிலையில் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்கு பொறுப்பேற்று பாலிசி கவரேஜ் அளிக்கிறதா என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். 

நமக்கு பொருத்தமான மோட்டார் இன்சூரன்ஸ்களை பெறுவது சிறிது கடினமான வேலை. ஆகையால், சிறந்த ஒன்றை பெறுவதற்கு சில ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். எனினும் கூட, அந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நீங்கள் கவனிக்க வேண்டிய விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். நிறுவனத்தின் நற்பெயர், க்ளைம் விகிதம், நெட்வொர்க் கேரேஜ்கள், பட்ஜெட் மற்றும் பல போன்றவை மோட்டார் வாகன ப்ளான் வாங்கும் போது நீங்கள் சரிபார்க்க வேண்டய சில விசயங்கள் ஆகும். 

இதைத் தவிர, நீங்கள் பாலிசியின் அனைத்து விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றி படித்து தெரிந்து கொள்வது, க்ளைம் நேரத்தில் சிறந்த மற்றும் சொந்தரவு இல்லாத வழிகளை தேர்வு செய்ய உங்களுக்கு  உதவும். எங்கள் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கும் மேற்கோள்கள் மூலம் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசிகளை நீங்கள் எளிதாக ஒப்பீட்டு உங்களுக்கான சிறந்த ப்ளான் நோக்கி வழிநடத்த உதவி செய்கிறது. 

ஆன்லைனில் மோட்டார் இன்சூரன்ஸ் வாங்க தேவைப்படும் ஆவணங்கள்

நீங்கள் ஆன்லைன் மூலம் மோட்டார் இன்சூரன்ஸ்-ஐ உங்கள் வாகனத்திற்கு வாங்க குறைந்தபட்ச ஆவணங்களே தேவைப்படுகிறது. உங்கள் வாகனத்திற்கு முதல் முறையாக இன்சூரன்ஸ் செய்யப் போகிறீர்கள் என்றால், பாலிசி திட்டத்தின் படிவம் மற்றும் வாகனத்தின் பதிவு சான்றிதழ்(ஆர்.சி) நகலை வைத்து இருக்க வேண்டும். ஒவ்வொரு வாகன உரிமையாளர்கள்(தனிப்பட்ட அல்லது வர்த்தக பயன்பாட்டிற்கு) தங்களின் வாகனத்தை அருகில் உள்ள ஆர்.டி.ஓ(பிராந்திய போக்குவரத்து அலுவலகம்) இல் பதிவு செய்ய வேண்டும். 

ஏற்கனவே இருக்கும் பாலிசியை புதுப்பிக்க வேண்டும் என்றால், முந்தையை இன்சூரன்ஸ் பாலிசி உடன் பதிவு சான்றிதழ் (ஆர்.சி) உங்களுக்கு தேவைப்படும்.

- / 5 ( Total Rating)