பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டர்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் என்பது உங்களின் தேவை மற்றும் அவசியம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுக்க உதவும் கருவியாகும். இது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் பல்வேறு விதமான பிளான்களை ஒப்பிடுவதற்கு உதவுகிறது. இந்தியா போன்ற நாட்டில், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சொந்தமாக டூவீலர் வைத்து இருக்கும் அனைவரும் டூவீலர் இன்சூரன்ஸ் வைத்து இருப்பது கட்டாயமாகும். டூவீலர் இன்சூரன்ஸ் என்பது சேதங்கள் அல்லது திருட்டு, கொள்ளை அல்லது இயற்கை பேரழிவுகள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு எதிராக உங்கள் மோட்டார்  சைக்கிளுக்கான பாதுகாப்பை குறிக்கும் திட்டமாகும். இது விபத்தில் ஓர் நபருக்கு ஏற்படும் காயங்களுக்கும் கூட  பாதுகாப்பை அளிக்கிறது. டூவீலர் இன்சூரன்ஸ் ஆனது பைக் , மோப்பட் , ஸ்கூட்டர் , ஸ்கூட்டி போன்ற அனைத்து வகையான வாகனங்களுக்கும் டூவீலர் இன்சூரன்ஸ் பிளான் உள்ளது.  

பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் என்பதை எளிமையான சொற்களில் கூறவேண்டுமென்றால், ஒரு பைக்கின் பிரீமியத்தை கணக்கிடுகிறது என்பதாகும். மேலும், வழங்கப்பட்ட தகவலில் இருந்து பரந்த அளவிலான பிளான்களை ஒப்பிடுவதன் மூலம் வெவ்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களில் இருந்து மேற்கோள்களை உருவாக்க உதவுகிறது. 

டூவீலர் இன்சூரன்ஸ் பிளான்களில் சிறந்த ஒன்றை பெறுவதில், பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டர்கள் ஆன்லைனில் கிடைப்பதன் காரணமாக எளிதானது. இது நேரத்தை மட்டும் சேமிக்க உதவவில்லை, உங்களின் வருடாந்திர பிரீமியத்தில் மிகப்பெரிய தொகையை சேமிக்கவும் உதவுகிறது. பிரீமியம் மேற்கோள்களை பெறுவதற்காக பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும். 

 • டூவீலர் எண் 
 • முந்தைய பாலிசியின் நிலை ( காலாவதியானது / காலாவதியாகவில்லை).

தேவையான தகவல்கள்

டூவீலர் வாகனத்தின் எண் சரியாக தெரியாவிட்டால், பின்வரும் தகவல்கள் வழங்கப்பட வேண்டும்: 

 • உற்பத்தி செய்யப்பட்ட விவரங்கள் 
 • பதிவு செய்த ஆண்டு 
 • மாதிரி மற்றும் மாறுபாடுகள் 
 • பிராந்திய போக்குவரத்து அலுவலக இருப்பிடம்(ஆர்டிஓ) 
 • முந்தைய பாலிசியின் நிலை ( காலாவதியானது / காலாவதியாகவில்லை).

பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டரின் நன்மைகள்

 1. இது நேரத்தை சேமிக்கும் மற்றும் எளிதான நடைமுறையாகும். 
 2. இது நம்பகமான கருவியாகும். இது சார்புடையதில் இருந்து நீங்கி இருப்பதால் , ப்ரோக்கர் / ஏஜென்ட்களின் முடிவுகளால் பாதிக்கப்படுவதில்லை. மாறாக வழங்கப்பட்ட தகவல்களில் இருந்து முற்றிலும் சார்ந்துள்ளது. 
 3. இடைத்தரகருக்கு ஒரு தனிநபர் செலுத்தும் பெரும் கமிஷன் தொகையில் இருந்து பாதுகாக்கிறது.
 4. செயல்முறைக்கு எந்தவொரு ஆவணங்களின் பேப்பர் வேலையும் தேவையில்லை. 
 5. பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் டூவீலர் இன்சூரன்ஸ் பிரீமிய விகிதங்களை ஒப்பிடுகிறது. மேலும், உங்கள் தேவை மற்றும் அவசியம் ஆகியவற்றின் அடிப்படையில் மிகவும் சாதகமான ஒன்றை தேர்ந்தெடுக்கிறது. 
 6. பிரீமியம் கால்குலேட்டர் பயன்பாட்டின் சிறந்த பகுதிகளில் ஒன்று , அதனை இலவசமாக பயன்படுத்தலாம் என்பதாகும். 

டூவீலர் இன்சூரன்ஸ்

டூவீலர் இன்சூரன்ஸ் என்பது வேறொன்றுமில்லை, நீங்கள் கார் இன்சூரன்ஸ் பிளான் கீழ் பெறும் அதே விசயங்களே. முதலில் நினைவில் வைக்க வேண்டியது, இந்தியாவில் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது கட்டாயமாகும். இரண்டாவது, விபத்தில் இருந்து ஏற்படும் சேதங்களுக்கு , பழுதுகளுக்கு தேவையான கவரேஜை வழங்குவதன் மூலம் உங்களின் பணத்தை சேமிக்கிறது. இருப்பினும், நீங்கள் நெட்வொர்க் கேரேஜ்களுக்கு சென்றால், உங்கள் வாகனத்திற்கான பழுதுபார்ப்பு செலவினங்களுக்கு உங்களின் சார்பாக இன்சூரன்ஸ் நிறுவனம் கட்டணத்தை நேரடியாக கேரேஜ்களுக்கு செலுத்துவதன் கீழ் உள்ள பணமில்லா வசதியினை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களின் பைக், ஸ்கூட்டர் முதலிய எந்தவொரு வாகனத்திற்கு டூவீலர் இன்சூரன்ஸை வாங்கலாம்

டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது கட்டாயமானது என்பதால், நீங்கள் சரியான திட்டத்தை வாங்குகிறீர்களாக என்பதை யும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஒவ்வொரு வாகனமும் அதற்கென இருக்கும் தேவைகளை கொண்டிருப்பதால், அந்த தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒன்றை தேர்ந்தெடுக்கவும். சரியான  டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசியை பெற இலவசமாக கிடைக்கும் டூவீலர் இன்சூரன்ஸ் மேற்கோள்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது சிறந்த ஒன்றை  தேர்ந்தெடுக்க உங்களுக்கு உதவுகிறது. இந்த ஒப்பிடுதல் சேவையின் உதவி உடன், டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஒப்பிட முடியும் மற்றும் பாலிசியின் அம்சங்கள் மற்றும் நன்மைகளை சரிபார்க்க முடியும். பாலிசியை வாங்குவதற்கு முன்பு ஆன்லைனில் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளை நீங்கள் ஒப்பிட்டால், உங்கள் பட்ஜெட்க்குள் வரும் தேவையான பாலிசியை நீங்கள் பெறுவீர்கள்.

டூவீலர் இன்சூரன்ஸ் பிளானின் முக்கியத்துவம்

டூவீலர் இன்சூரன்ஸ் ஆனது வாகனத்திற்கு ஏற்படக்கூடிய விபத்துகள் , இயற்கை பேரழிவுகள் அல்லது எந்தவொரு திருட்டு செயல்கள் போன்ற மோசமான சூழ்நிலையில் ஏற்படும் சேதங்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் இன்சூரன்ஸ் பாலிசியை குறிக்கிறது. உங்கள் மோட்டார் வாகனங்களுக்கு நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களுக்கும், கவலைகளுக்கும் டூவீலர் இன்சூரன்ஸ் பிளான் ஒரே தீர்வாக இருக்கும். 

உங்களின் வாகனம் தனிப்பட்ட அல்லது வணிக அல்லது வணிக மற்றும் தனிப்பட்ட கலவையான பயன்பாடு என ஏதுவாக இருந்தாலும் பரவாயில்லை, இன்சூரன்ஸ் அனைத்து சிரமங்களுக்கு எதிராகவும் உங்கள் மோட்டார் வாகனத்திற்கு  பாதுகாப்பளிக்கும். எதிர்பாராத நிகழ்வுகள் உங்கள் வாகனத்திற்கான பாதிப்பை மட்டும் ஏற்படுத்துவதில்லை, மேலும்   உங்களின் மனநிலை , உணர்ச்சி , நிதியியல் மற்றும் சட்டப் பிரச்சனைகள் ஆகியவற்றையும் விளைவிக்கிறது. இதுபோன்ற நிலைகளில் டூவீலர் இன்சூரன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் எந்தவொரு சேதங்களும் கூட இதன் கீழ் கவர் செய்யப்படுகிறது. 

பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டரின் முக்கியத்துவம் 

எந்தவொரு பாலிசியை வாங்குவதற்கு முன் ஒரு பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை பயன்படுத்துவது முக்கியமாகும் - 

 1. சந்தை மற்றும் போட்டியாளர்கள் பற்றி நன்கு அறிந்த ஒன்று.
 2. உங்களின் ஒட்டுமொத்த பாலிசியின் கொள்முதல் (வாங்குதல்) செயல்முறையும் எளிதாக்குகிறது. 
 3. முன்நிபந்தனைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் உடன் ஏற்கனவே தயாரான ஒன்று. 
 4. பணத்திற்கான சரியான மதிப்பு - ஒருவர் கிடைக்கும் எல்லா பாலிசிகளிலும் ஒரு விரைவான சோதனையை செய்ய முடியும் மற்றும் சிறந்த ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.

பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள்

டூவீலர் இன்சூரன்ஸ் ஆனது இந்திய சட்ட விதிகளின் படி கட்டாயமாக இருக்கிறது. ஒரு டூவீலரை ஓட்டுவதற்கு முன்பு குறைந்தபட்ச அளவிலான இன்சூரன்ஸை கொண்டிருப்பது சட்டப்பூர்வமான அவசியமாகும். இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனம் மற்றும் இன்சூரன்ஸ் பிளான் ஆகியவற்றை சார்ந்தே கவரேஜ் இருக்கும். இருப்பினும், நீங்கள் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசியில் பெறக்கூடிய அடிப்படை கவரேஜ் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. 

 1. இன்ஷூர்டு டிக்ளர்டு வல்யூ அல்லது ஐடிவி: இன்ஷூர்டு டிக்ளர்டு வல்யூ(ஐடிவி) என்பது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் வாக்குறுதி அளிக்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட தொகையாகும். இது, திருட்டு , கொள்ளை , எந்தவொரு சேதங்கள் நிகழும் நேரத்தில் ஒருவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பெறும் தொகையாகும். இது வாகன ஷோரூமில் பட்டியலிடப்பட்ட விலையில் இருந்து குறைக்கப்பட்ட மதிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இவை எந்தவொரு பதிவு மற்றும் இன்சூரன்ஸ் செலவுகளை உள்ளடக்கியது இல்லை. எளிமையான வார்த்தையில் கூற வேண்டும் என்றால், இது உங்கள் வாகனத்தின் சந்தை  மதிப்பில் அறியப்படுகிறது. 
 2. பைக் மாடல்: உங்கள் வாகன மாடல் ஆனது அதிக விலைக் கொண்டவை அல்லது ஆடம்பரமானவை ஆக இருக்கும் பட்சத்தில் அதன் பிரீமியம் அளவும் அதிகமாக இருக்கும். நீங்கள் ஹார்லி டேவிட்ஸன், நிஞ்ஜா அல்லது ராயல் என்ஃபில்டு போன்ற விலையுயர்ந்த பைக்கை சொந்தமாக வைத்திருக்கும் பொழுது, அதிக பிரீமியத்தை செலுத்த வேண்டிய நிலையில் இருப்பீர்கள். 
 3. இன்சூரன்ஸ் செய்பவரின் வயது: இன்சூரன்ஸ் செய்பவர் இளம் வயது நபராக இருந்தால் அவருக்கான இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகமாக இருக்கும். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இளம் வயது நபர்கள் அதிக அளவில் விபத்துக்களில் சிக்க வாய்ப்புள்ளது என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில்,  வயது முதிர்ந்தவர்கள் அல்லது அனுபவமிக்க ரைடர்களை உடன் ஒப்பிடும் பொழுது இளம் வயனத்தினர் பொறுப்பற்ற முறையில் வாகனத்தை ஓட்டுகின்றனர். எனவே, உங்களின் இளம் வயது மகனுக்கு ஒரு பைக் இன்சூரன்ஸ் பெற திட்டமிட்டு இருந்தால், அதற்கு அதிக பிரீமியத்தை செலுத்த வேண்டி இருக்கும்.
 4. தயாரிக்கப்பட்ட ஆண்டு: உங்கள் வாகனமானது பழைய மாடலாக இருந்தால் அதற்கான இன்ஷூர்டு டிக்ளர்டு வல்யூ குறைவானதாக இருக்கும் மற்றும் குறைந்த மதிப்பிலான பிரீமியத்திற்கும் வழி வகுக்கும். இதேபோல், சமீபத்திய மாடலாக இருந்தால் உயர்ந்த பிரீமியம் மதிப்பு இருக்கும். 
 5. குறைத்தல்கள்: இது இன்சூரன்ஸ் செய்தவர் தன் சொந்த பாக்கெட்டில் இருந்து செலுத்த வேண்டிய இன்சூரன்ஸ் தொகையாகும். குறைத்துக் கொள்ளப்படும் தொகை அதிகமாக இருந்தால், பிரீமியம் குறைவானதாக இருக்கும். அதேபோன்று, குறைத்துக் கொள்ளப்படும் தொகை குறைவாக இருந்தால் அதிக பிரீமியத்திற்கு வழி வகுக்கும். 
 6. திருட்டு - எதிர்ப்பு தள்ளுபடி: நீங்கள் ஏஆர்ஏஆர் ஒப்புதல் அளித்த திருட்டு எதிர்ப்பு சாதனத்தை உங்கள் வாகனத்தில் பொருத்தி இருந்தால், தள்ளுபடி கொண்ட பிரீமியம் விகிதத்தை பெறுவீர்கள். அன்டி-தேஃப்ட் அலாரம் , செஃப்ட்டி கியர் லாக் , ஜிபிஎஸ் டிவைஸ் உள்ளிட்ட பல வகையான திருட்டு எதிர்ப்பு சாதனங்கள் உள்ளன. இதற்காக 2.5% தள்ளுபடியை பெறலாம்.
 7. வாழ்விடம்: நீங்கள் இருக்கும் இடத்தின் காரணி கூட பிரீமியம் விகிதத்தில் பாதிக்கலாம். உதாரணமாக, நீங்கள் மும்பை , டெல்லி , சென்னை போன்ற போக்குவரத்து நிறைந்த பெரு நகரங்களில் வசிக்கிறீர்கள் என்றால் அங்கு விபத்து சார்ந்த சம்பவங்கள் அதிகம் நிகழ வாய்ப்புள்ளது. ஆகையால், அங்கு பிரீமியம் அதிகமாக இருக்கும். ஒருவேளை நீங்கள் கிராமப்புறங்களில் இருந்தால் பிரீமியம் தொகை குறைவாக இருக்கும். 
 8. கியூபிக் கேபாசிட்டி: உங்கள் பைக்கின் கியூபிக் கேபாசிட்டி அதிகமாக இருந்தால் பிரீமியம் விகிதம் அதிகமாக இருக்கும். 
 9. நோக்ளை ம் போனஸ் (என்சிபி): நீங்கள் ஒரு நல்ல ஓட்டுநராக இருப்பதற்காக பரிசு பெற்றால் எப்படி அற்புதமாக இருக்கும். அப்படி ஒரு வெகுமதியை இன்சூரன்ஸ் நிறுவனம் என்சிபி வழியாக உங்களுக்கு அளிக்கிறது. இது உங்கள் பிரீமியத்தில் 20%-50% அளவிலான தள்ளுபடியை அளிக்கும். ஆகையால், சிறிய சிறிய சேதங்கள் அல்லது சம்பவங்களுக்கு க்ளைம் தாக்கல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

டூவீலர் இன்சூரன்ஸின் புதுப்பித்தல்

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பாலிசியை புதுப்பிப்பது இன்சூரன்ஸ் செய்த நபரின் மிக முக்கிய பொறுப்பாகும். பாலிசி புதுப்பித்தலில் பின்வரும் குறிப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும். 

 1. உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியின் சரியான தேதி பற்றி எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் தாமதமாக செலுத்துவதற்கான அபராதம் மற்றும் கூடுதல் ஆவண வேலைகளை தவிர்ப்பதற்கு முன்கூட்டியே செலுத்துவதற்கு முயற்சியுங்கள். 
 2. உங்களுடைய டூவீலர் இன்சூரன்ஸை குறைந்த கட்டணத்தில் பெற உதவும் நோ க்ளைம் போனஸ் போன்ற தள்ளுபடிகளை பெற முயற்சியுங்கள்
 3. உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள், இதனால் நீங்கள் அதிக பிரீமியத்தை செலுத்த தேவையில்லை. 
 4. புதுப்பித்தலுக்கான ஆன்லைன் செயல்முறையை நீங்கள் நன்கு அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

இன்சூரன்ஸ் பாலிசியின் ஆன்லைன் புதுப்பித்தலின் செயல்முறை

 1. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று உள் நுழையவும் (லாக் ஆன்). 
 2. உங்களின் பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு உள்ளிட்டவையை என்டர் செய்யவும். 
 3. இது உங்களின் இ-போர்டலை திறக்கும். இப்பொழுது புதுப்பித்தல் பட்டனை அழுத்தவும். 
 4. உங்களின் முந்தைய பாலிசி பற்றிய தேவையான தகவலை அளிக்கவும். 
 5. நீங்கள் எந்தவொரு ஆட்-ஆன் கவர்ஸ்- யும் தேர்வு செய்ய முடியும். 
 6. இதன் பிறகு சமர்பிப்பதற்கான பட்டனை அழுத்தவும். 
 7. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் போன்ற கட்டணம் செலுத்தும் வழிகளில் புதுப்பித்தலுக்கான கட்டணத்தை செலுத்துங்கள்.
 8. உங்களின் பாலிசி ரசீதை கவனமாக சேமித்து வைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

- / 5 ( Total Rating)