கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

கார் காப்பீட்டு பிரீமியத்தை ஒப்பிடுக

அல்லது

கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் என்பது நீங்கள் செலுத்தக்கூடிய பிரீமியம் தொகையின் மதிப்பீட்டை முன்கூட்டியே பெற உங்களுக்கு உதவும் அடிப்படை கருவியாகும். எனவே, உங்களால் கூடுதலாக திட்டமிட்ட முடியும். இது செலுத்தக்கூடிய பிரீமியம் தொகையின் மதிப்பீட்டை முன்கூட்டியே பெறவதற்கு மட்டும் உதவுவதில்லை, உங்களின் தேவை மற்றும் பட்ஜெட்டின் படி சிறந்த ஒன்றை தேர்ந்தெடுக்கவும் உங்களுக்கு உதவுகிறது. இது நீங்கள் தேவையற்ற விசயங்கள் மற்றும் அம்சங்கள் மீது கூடுதல் பணத்தை செலவழிக்கவில்லை என்பதை உறுதி செய்யும். இது முன்கூட்டியே  ஒரு நபர் பிரீமியம் தொகையை கணக்கிடுவதற்கு உதவுகிறது, வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து கார் இன்சூரன்ஸ் பிளான்கான இலவச மேற்கோள்களை உருவாக்க கூடுதலாக உதவுகிறது. 

முன்னதாக மக்கள் என்ன செய்தார்கள், அவர்கள் பல்வேறு நிறுவனங்கள் அல்லது இன்சூரன்ஸ் கம்பெனியிடம் இருந்து ஏஜென்ட்களை பாலிசிக்காக சந்திக்க வேண்டி இருந்தது. அதன்பிறகு, அவர்கள் உங்களுக்கான சிறந்த பாலிசியை ஒப்பிட்டு பார்க்கிறார்கள் மற்றும் தேர்வு செய்கிறார்கள். பிரீமியம் தொகையிலும் கூட, ஏஜென்ட்களையே நம்பி இருக்கின்றனர். அவர்கள் என்ன கூறுகிறார்களோ அதை செலுத்த தயாராக இருப்பார்கள். இந்த சந்தர்ப்பங்களில், வீணாகும் பணத்தை பிற காரியங்களுக்கு பயன்படுத்தி இருந்திருக்கலாம். ஆனால், இப்பொழுது தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் மற்றும் ஆன்லைனில் அனைத்தும் என மாறியதால், இந்த கடினமான வேலை எளிதானதாக மாறியுள்ளது. 

கால்குலேட்டர் ஆனது உங்கள் வாகனத்திற்கு சிறந்த பாலிசியை பெறுவதில் மட்டும் உதவுவதில்லை, மேலும் செலுத்தப்படும் பெரிய தொகையில் இருந்து மற்றும் ஏஜென்ட்களுக்கு செலுத்தப்படும் தேவையற்ற கமிஷன்களில் இருந்து சேமிக்க உதவுகிறது. இது உங்களின் நேரத்தையும், ஆற்றலையும் சேமிக்கிறது. சிறந்த பாலிசியைதேர்ந்தெடுக்கும் முயற்சியில், வெவ்வேறு நிறுவனங்களின் பிரீமியம் விகிதத்தை ஒப்பிடவும் மற்றும் அதிக நன்மைகள் கிடைக்கக்கூடிய, பெரிய அளவிலான பாதுகாப்பைக் கொண்ட, சாதகமான ஒன்றை கண்டறியும் உதவுகிறது.  

ஆன்லைன் கால்குலேட்டரை பயன்படுத்துவது எப்படி?

ஆன்லைன் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. உங்கள் கம்ப்யூட்டர் / லேப்டாப் / போன் ஆகியவற்றின் உதவி உடன் உங்கள் வீட்டில் வசதியாக அமர்ந்து கொண்டே உங்களால் அதை செய்ய முடியும். இதற்கெல்லாம் தேவையானது இணைய இணைப்பு வசதியே. நீங்கள் இலவசமாக தங்களின் கால்குலேட்டரை பயன்படுத்திக் கொள்ள பல ஆன்லைன் தளங்கள் அனுமதிக்கின்றன. நீங்கள் அதற்குள் சென்று, வாகனம் பற்றிய சில அடிப்படை விவரங்களையும், உங்களின் தனிப்பட்ட விவரங்களை அளிக்கும் பொழுது சில நொடிகளில் தேவையான விவரங்களை பெற்றுக் கொள்வீர்கள். 

நீங்கள் எதாவது ஒரு இன்சூரன்ஸ் பிளான் வாங்க வேண்டுமெனில், இந்தியாவின் சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து இன்சூரன்ஸ் மேற்கோள்களை வழங்கக்கூடிய ஆன்லைனில் இலவச கோட்ஸ் (மேற்கோள்கள்) பிரிவிற்கு செல்ல வேண்டும். அங்கு நீங்கள் எளிதாக பிளான்களை ஒப்பிட முடியும்  மற்றும் உங்களின் தேவைக்கேற்ற சிறந்த ஒன்றை வாங்க முடியும். எந்தவொரு இன்சூரன்ஸ் வலைத்தளத்திலும் அல்லது ஆன்லைன் பாலிசி அக்ரிகேட்டர்களில் ஆன்லைன் கால்குலேட்டர்களை எளிதாக காண முடியும்.

ஆன்லைன் கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டரின் நன்மைகள்

நேரடியாக ஏஜென்ட்களை பார்த்து பேச முடியும் போது ஏன் ஆன்லைன் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை பயன்படுத்த வேண்டும் என மக்கள் நினைக்கலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில், ஏஜென்ட்கள் தங்களின் பணிக்காக கமிஷன் தொகையை வசூலிக்கிறார்கள் மற்றும் அது உங்களின் பிரீமியம் தொகையை அதிகரிக்கும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஆன்லைனை தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் பணத்தினை சேமிக்க முடியும். மேலும், கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் அதிக தகவல் அறிந்த முடிவுகளை எடுப்பதற்கு உதவுகின்றன. மேலும் பல நன்மைகள் பின்வருமாறு உள்ளன. 

 • தேவைக்கேற்ப சரியான இன்சூரன்ஸ் திட்டத்தை தேர்ந்தெடுப்பது பற்றிய முடிவை எடுக்க மக்களுக்கு உதவுகிறது. 
 • சந்தை மற்றும் போட்டியாளர்கள் பற்றி ஒருவர் நன்கு அறியப்பட்டவராக இருக்க வேண்டும். 
 • கைகளால் செய்யப்படும் கணக்கிடுதல்கள் செய்யும் போது  ஏற்படும் அதிக நேரத்தை சேமிக்கிறது. 
 • ஏற்கனவே தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. ஒப்பிடுதலுக்கான செயல்முறை எளிதானது மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்தது மற்றும் சிறந்த விருப்பங்கள் கிடைக்கிறது. 
 • ப்ரோக்கர்கள் மற்றும் ஏஜென்ட்களின் முடிவுகளால் பாதிக்கப்படாததால் இந்த நடைமுறையானது நியாயமானது மற்றும் ஒருவருக்கு சார்புடையதாக இல்லாமல் இருக்கும். மேலும், உங்களின் சொந்த தேர்வை செய்யலாம். 
 • ஒரு கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் ஆனது வெவ்வேறான பாலிசிகளை ஒப்பிட மட்டும் உதவுவதில்லை, பாலிசியின் விலையை பாதிக்கும் பல்வேறு பாராமீட்டர்கள் பற்றி உங்களுக்கு விழிப்படையச் செய்கிறது. 
 • கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் ஒரு சில நிமிடங்களில் முடிவுகளை எளிதாக வழங்குகிறது. 
 • இதனை நீங்கள் உங்களுக்கு விருப்பமான இடத்தில் இருந்து பயன்படுத்தலாம். ஏன் உங்கள் வீட்டில் வசதியாக இருந்து கொண்டு செய்ய முடியும். சிக்கல்கள் இல்லாத மாற்று காகிதமற்ற பாலிசி அனுபவத்தில் இருந்து நன்மைகளை பெறலாம். 
 • இன்சூரன்ஸ் ஏஜென்ட்களின் ஆதிக்கம் இல்லாமல் இருக்கும் என்பது கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் கருவியின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்றாகும். 
 • கால்குலேட்டர் கருவியில்(டூல்), இன்சூரன்ஸ் பாலிசிகளின் மாறிகளை மாற்ற முடியும் மற்றும் பிரீமியம் எப்படி மாறுகிறது என்பதையும் பார்க்க முடியும். இந்த கருவி ஒரு பிளானின் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான ஒரு சிறந்த ஊடகமாகும். ஆகையால் தான், ஒரு பாலிசியை வாங்கும் நேரத்தில் சிறந்த முடிவை எடுக்க உதவுகிறது.

கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள்

கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிப்பதிலும், அதன் கணக்கீடுகள் நேரத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் பல காரணிகள் உள்ளன. பிரீமியம் கணக்கிடுவதற்கு நிறுவனங்கள் சில அடிப்படை விதிகளை எடுத்துக் கொள்கின்றன. 

இன்ஷூர்டு டிக்ளர்டு வல்யூ(ஐடிவி): இது கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை எளிதில் பாதிக்கக்கூடிய மிக முக்கியமான காரணிகளாக இருக்கிறது. இன்ஷூர்டு டிக்ளர்டு வல்யூ என்பது அடிப்படையில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் தொகையான உறுதி செய்யப்பட்ட தொகையாகும். இது சந்தையில் உங்கள் காரின் தற்போதைய மதிப்பாகும். கார் ஐடிவி மதிப்பானது இரண்டு காரணிகளுடன் கணக்கிடப்படுகிறது. ஒன்று, உற்பத்தியாளரின் தற்போதைய மதிப்பு மற்றும் இரண்டாவது வாகனத்தின் வயதின் அடிப்படையில் தேய்மானங்கள் ஆகும். எனவே ஐடிவி அதிகமாக இருக்கும் பொழுது பிரீமியம் அதிகரிக்கும், ஐடிவி குறைவாக இருக்கும் பொழுது பிரீமியம் குறைவாக இருக்கும். பெறப்படும் கவரேஜ் கூட குறைவாக இருக்கும். உங்கள் வாகனம்  பழையதாகும் பொழுது ஐடிவி குறைகிறது. ஒருவேளை பழைய வாகனங்களின் சந்தர்ப்பங்களில், அது இன்சூரன்ஸ் செய்பவர் மற்றும் இன்சூரன்ஸ் வழங்குபவர் இடையே பரஸ்பர ஒப்பந்தத்தில் கணக்கிடப்படுகிறது. இங்கே, ஐடிவி ஆனது வியாபாரிகளின் நிபந்தனைகளுடன் வாகன நிலைமையின் மதிப்பீட்டின் படி முடிவு செய்யப்படுகிறது.

வாகனம்: ஒருவர் பயணிக்கும் வாகனமும் பிரீமியம் மதிப்பை பாதிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. சில கார்களின் மாடல்களை பொறுத்து, ஆடம்பர கார்களுக்கு பிரீமியம் அதிகமாக இருக்கும். கார் மாற்றியமைத்தல், எந்த மாற்றியமைத்தலுக்கு முன் நிகழ்ந்தவை அல்லது மாற்றங்கள் ஆகியவை ஆட்-ஆன் பாலிசியில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. அவை மாற்றங்கள் கவர் செய்யப்படுவதை உறுதி செய்கிறது. காரின் எரிபொருள் வகை மற்றும் மைலேஜ் கூட பிரீமியத்தை பாதிக்கும்.

கியூபிக் கேபாசிட்டி: கியூபிக் கேபாசிட்டி என்பது உங்கள் கார் எஞ்சின் மூலம் உருவாகும் மொத்த ஆற்றல் அளவிடப்படும் ஒரு காலமாகும். ஐஆர்டிஏ மூலம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் மூன்றாம் தரப்பினர் பொறுப்பு பிரீமியம் இருக்கும், அவையும் கார் எஞ்சினின் கேபாசிட்டியை கருத்தில் எடுத்துக் கொள்ளும். எஞ்சினின் அளவும் கூட மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் கவரில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

நோ க்ளைம் போனஸ்: இது சாலைகளில் கவனமாக வாகனத்தை ஓட்டுபவர் பெறும் வெகுமதியாகும். உங்கள் பிளானில் நோ க்ளைம் போனஸின் நன்மைகள் இருந்தால், உங்களின் சொந்த பிரீமியத்தில் 50% வரையில் சேமிக்க முடியும். 

தன்னிச்சையாக குறைக்கும் தொகை என்பது ரூ.1,500 முதல் ரூ.15,000 இடையிலான தொகையில் உங்கள் பிரீமியத்தை குறைக்கும் ஒரு வகையான தள்ளுபடியாகும். இந்த தொகையானது இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து திருப்பி அளிக்கப்படாது. 

ஆட்டோமொபைல் உறுப்பினர்கள்: ஆட்டோமொபைல் அசோசியேசன் ஆஃப் இந்தியா போன்ற ஒரு பதிவு செய்யப்பட்ட ஆட்டோமொபைல் நிறுவனத்தின் உறுப்பினராக இருந்தால், பிரீமியத்தில் குறைத்துக் கொள்ளும் நன்மையை பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் ஹூண்டாயில் இருந்து ஒரு வாகனத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது, அவர்களின் பரிந்துரைகளின் படி நாம் பாலிசியில் சில தள்ளுபடிகளை பெறலாம். 

அன்டி-தேஃப்ட் டிவைஸ் தள்ளுபடி: ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா மூலம் அங்கீகாரம் பெற்ற அன்டி-தேஃப்ட் டிவைஸ் போன்றவற்றை வாகனத்தில் பொறுத்திக் கொள்ளலாம். இதன் மூலமாக உங்களின் பிரீமியத்தில் 2.5% தள்ளுப்படியை நீங்கள் பெறலாம்.

இருப்பிடம் மற்றும் டெமோகிராஃபிக்ஸ்: நீங்கள் வசிக்கும் பகுதியால் கூட பிரீமியத்தை அளவு பாதிக்கப்படும். டெல்லி, மும்பை, சென்னை போன்ற டயர்-1 நகரங்களின் பிரீமியம் தொகையானது ராஞ்சி, திருவாரூர், காரைக்குடி போன்ற டயர் 11 நகரங்களுடன் ஒப்பிடும் பொழுது அதிகமாக இருக்கும்.  பிரீமியமானது போக்குவரத்து அதிகரிப்பதால் பாதிக்கிறது. சேதத்திற்கு ஆளாக்கக்கூடிய பகுதிகள் கூட அதிக பிரீமியத்தை கொண்டிருக்கும். 

வயது, திருமணநிலை மற்றும் பாலினம் போன்ற டெமோகிராஃபிக்ஸ் பிரீமியத்தை பாதிக்கிறது. வயது முதிர்ந்த ஓட்டுனர்கள் குறைந்த மோட்டார் வாகன திறமை மற்றும் குறைந்த பார்வை திறன் உள்ளிட்ட காரணங்களால் விபத்துக்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளன. திருமணம் ஆகாத நபர்களுடன் ஒப்பிடும் பொழுது திருமணம் ஆனவர்கள் குறைந்த அளவிலான விபத்துக்களையே நிகழ்த்துவதாக ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு ஆண்களுக்கு குறைந்த பிரீமியம் கிடைக்கும். பெண்களை விட இளைஞர்களின் விபத்துக்களே அதிகம். 

ஆட்-ஆன்ஸ்: ஆட் ஆன் கூட பிரீமியம் அளவில் மாற்றம் இருக்கும். அவற்றில் சில பின்வருமாறு, 

 • ஆடம்பரக் கார்களுக்கு ஆட்-ஆன் மாறுபடலாம், இது கூடுதல் எஞ்சின் கவர் மற்றும் எலக்ட்ரானிக் சர்க்யூட் பிரெடெக்டர் போன்றவை தொடர்புடையவையாக இருக்கலாம். கீழே குறிப்பிட்டுள்ள பிற ஆட்-ஆன்ஸ் பொதுவானதாக இருக்கலாம். 
 • தேய்மானம் கவர் 
 • சாலையோர உதவி 
 • எஞ்சின் ப்ரொடெக்சன் கவர் 

ஐஆர்டிஏ மூலம் பிரீமியங்கள் நிர்ணயிக்கப்பட்ட போதும், மேலே உள்ள பாராமீட்டர்களின் படி இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியத்தில் கட்டணத்தை பெறும் வாய்ப்புகள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் உள்ளது.

கார் இன்சூரன்ஸ் பாலிசியின் வகையை பொறுத்து பிரீமியம் கணக்கீடு வேறுபடுகிறது

நாம் பின்வரும் இன்சூரன்ஸ் பாலிசிகளின் வகைகளை கொண்டிருக்கலாம். 

 • மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் கவரேஜ் - இங்கே, விபத்துக்களில் மூன்றாம் தரப்பு பொறுப்பு மட்டுமே கவர் செய்யப்படுகிறது. வாகனத்தின் தேய்மான மதிப்பீட்டின் படி க்ளைம் விகிதம் மாறுபடும். 
 • மூன்றாம் தரப்பு, திருட்டு & இன்சூரன்ஸ் பாலிசி - இந்த இன்சூரன்ஸ் கவர் ஆனது விபத்து நேரத்தில் மூன்றாம் தரப்பினரின் அனைத்து விதமான செலவுகளையும் உள்ளடக்கி உள்ளது. காரின் மாடல் மற்றும் தயாரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் க்ளைம் விகிதம் மாறுபடலாம். இந்த பாலிசியின் படி  உங்கள் வாகனத்தின் எவ்விதமான திருட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. 
 • விரிவான இன்சூரன்ஸ்- இந்த பாலிசி கவரானது, இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனம் மற்றும் மூன்றாம் தரப்பு பொறுப்பு போன்ற அனைத்தையும் உள்ளடக்கி உள்ளது.

பிரீமியம் கணக்கீட்டிற்கு பிறகு இன்சூரன்ஸ் நிறுவனத்தை எப்படி தேர்வு செய்வது?

மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி, கார் இன்சூரன்ஸ் வைத்து இருப்பது கட்டாயமாகும். இருப்பினும், சரியான கார் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் சில விசயங்களை நாம் சரிபார்க்க வேண்டும். கார் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுக்கும் போது சில முக்கியமான காரணிகளை மனதில் வைக்க வேண்டும். 

 1. இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வயது என்ன? 

நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு நிறுவனத்தின் நிலைத்தன்மையை தீர்மானிக்கிறது. பழமையான நிறுவனங்கள் நம்பகத்தன்மையில் சிறந்தது. 

 1. முந்தைய ஆண்டுகளில் அனைத்து க்ளைம்களும் தீர்க்கப்பட்டனவா? 

கார் இன்சூரன்ஸ் பாலிசியின் க்ளைம்களின் எண்ணிக்கை ஆனது அவர்களின் க்ளைம் நிர்வகிக்கும் திறனை புரிந்து கொள்ளவும் உதவுகிறது. 

 1. அவர்களால் எந்த சிறந்த ஆட்-ஆன்ஸ் வழங்க முடியும்? 

 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் பல ஆட்-ஆன்ஸ் (கூடுதல் இணைப்புகள்) உள்ளன. நம் தேவைகள் மற்றும் அவசியத்தை அடிப்படையாகக் கொண்டே சோதிக்க வேண்டும். இந்த சந்தர்ப்பங்களில் மிகப்பெரிய காரணி, நாம் கொண்டுள்ள வாகனத்தின் வகையைச் சார்ந்தது. ஒருவேளை ஆடம்பரக் கார்களை கொண்டிருந்தால், பிறவற்றை ஒப்பிடுவதில் ஆட்-ஆன்ஸ் தேவைகள் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.

 1. அவர்கள் தற்போது எந்த வகையான வாகனங்களை கவர் செய்கிறார்கள்?

நம்முடைய கார் இன்சூரன்ஸ் பாலிசியின் தொகையானது நாம் கொண்டுள்ள காரினால் பெரும்பாலும் பாதிக்கப்படும். ஒருவேளை ஹாட்ச்பேக் பிரீமியத்தின் தொகை, செலுத்த வேண்டியவது குறைவானதாக இருக்கலாம். இது நாம் என்ன காரினை கொண்டு இருக்கிறோம் என்பதை பொறுத்து மாறுபடும். வாகனத்தின் தயாரிப்பு & மாடல் ஆகியவற்றிற்கான கவரேஜ் வகைக்கு பிறகு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து சரிபார்க்க வேண்டிய முக்கியான ஒன்றாகும். கார் 1500 சிசி -க்கு குறைவான அல்லது அதற்கு மேல் இருந்தால் க்ளைம் வேறுபடும். 

 1. முந்தைய ஆண்டுகளில் அவர்களின் சேவை எப்படி இருந்தன? 

ஏற்கனவே நாம் சில சேவை வழங்குபவர்களுடன் நம்முடைய பாலிசியை தொடர்ந்து இருந்தால், முந்தைய ஆண்டில் அவர்களுடன் நம் அனுபவத்தின் அடிப்படையில் புதுப்பிக்க வேண்டும். புதிதாக சேவை வழங்குபவரிடம் இருந்து பாலிசியை எடுத்துக் கொள்ள திட்டமிட்டு இருந்தால், அவர்கள் தற்போது கவர் செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் க்ளைம் செட்டில் செய்த எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் நிர்வாகத்தை சரிபார்த்துக் கொள்வது நல்லது. 

 1. நாம் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை என்ன? 

நாம் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை கூட நாம் விரும்பும் பாலிசி பற்றி தீர்மானிக்க ஒரு முக்கியமான காரணமாக இருக்கும். இது மட்டும் ஒரு காரணமாக இல்லை, ஆனால் நிச்சயம் இதுவும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். பிரீமியம் தொகை புதுப்பித்தல் நேரத்தில் மாறுபடும். நீங்கள் என்சிபி வைத்து இருந்தால் கூட பிரீமியம் தொகை குறையும். 

 1. பணமில்லா கவர் வழங்கும் கேரேஜ் வசதி?

கேரேஜ் வசதிகள், எந்த விபத்துகள் அல்லது சேதங்கள் ஏற்படும் நேரத்தில் பணமில்லா வசதியை எடுத்துக் கொள்ள உதவுகின்றன. இதை அடிப்படையாக கொண்டு இந்த துறையில் முன்னணி போட்டியாளர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். 

அனைத்து முன்னணி கார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் கூடுதலாக பல ஆட்-ஆன்ஸ் சேவையை வழங்குகின்றனர். அவர்களிடம் இருந்து இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளும் பொழுது, ஆன்லைன் மூலம் அல்லது சம்பந்தப்பட்ட நபரின் வழியாக சரிபார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பிரீமியம் கால்குலேட்டர் பயன்படுத்திய பிறகு கார் இன்சூரன்ஸ் பாலிசியை எப்படி வாங்குவது?

நாம் ஒரு பழைய கார் அல்லது புதிய கார் என எதை கொண்டிருந்தாலும் பின்வரும் வழிகளில் ஒரு கார் இன்சூரன்ஸ் கொள்கையை எளிதில் பெற்றுக் கொள்ளலாம். 

ஆன்லைனில் வாங்குதல் - ஆன்லைனில் கார் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவது மிக விரைவான வழியாக இருக்கலாம். நாம் தேர்ந்தெடுத்த ஒன்றில் இருந்து பாலிசியை வாங்க முடியும். 

பாலிசி அக்ரிகேட்டர்ஸ் மூலம் சரிபார்த்தல் - ஆன்லைனில் கிடைக்கும் வேறுபட்ட பாலிசிகளை சரிபார்க்க பாலிசி அக்ரிகேட்டர்ஸ் சிறந்த வழியாகும். ஆன்லைன் கால்குலேட்டர் வழியாக பிரீமியத்தை கணக்கிடும் கூடுதல் வசதியையும் கொண்டுள்ளன.கிடைக்கக்கூடிய அனைத்து பாலிசிகளையும் சரிபார்த்து , மிகவும் பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். 

ஏஜென்ட்களை அழைக்கலாம் -  இந்த நேரத்தில் பழைய செயல்முறையாக இருந்தாலும் ஏஜென்ட் அழைத்து பேசுவது வசதியாக இருக்கலாம். இந்த சூழ்நிலையில் ஏஜென்ட் பற்றி நாம் மிகவும் அறிந்து இருந்தால் எடுத்துக் கொள்ளலாம்.

க்ளைம்களின் எண்ணிக்கை எப்படி பிரீமியம் கணக்கீடுகளை பாதிக்கலாம்?

சிறிய சிறிய க்ளைம் தாக்கல்களை செய்வது சிறிய அளவில் லாபத்தையும், பெரிய அளவில் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. ஒரு கார் இன்சூரன்ஸ் பாலிசிதாரர் ஒவ்வொரு ஆண்டிலும் க்ளைம் தாக்கலையும் மேற்கொள்ளலாம். ஆனால் புதுப்பித்தல் நேரத்தில் இழப்பு ஏற்படும் என்பதால் சரியான முடிவாக இருக்க வாய்ப்பில்லை. கார்  இன்சூரன்ஸ் பிரீமியத்தில் உள்ள ஒரு முக்கியமான பொருள் என்சிபி (நோ க்ளைம் போனஸ்) ஆகும். எனினும், முந்தைய ஆண்டில் எந்தொரு க்ளைமும் பெறவில்லை என்றால் மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் சதவீதம் ஒவ்வொரு ஆண்டிலும் நோ க்ளைம்-ஐ தொடர்ந்து சேர்க்கிறது. 

கார் பிரீமியம் ஆனது ஐடிவி (இன்ஷுர்டு டிக்ளர்டு வல்யூ) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதோடு, ஒரு வருடத்தில் நாம் எடுக்கும் க்ளைம் போன்ற பிற பல காரணிகளும் உள்ளன. அதன் அடிப்படையில் புதுப்பித்தல் நேரத்தில்  நம்முடைய பிரீமியம் தொகை அதிகரிக்கலாம். எனவே, 15,000 ரூபாய்க்கு குறைவான இருக்கும் க்ளைம்களை பெறுவது பயனற்றதாக இருக்கும்.  ஏனெனில்,  தொகையை பெற்றுக் கொள்வது பின்வரும் காரணிகளை  அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.

மாறுபட்ட குறைத்தல்கள் - பிளாஸ்டிக் பெயிண்ட் போன்ற பிற செலவினங்கள் போன்றவை இன்சூரன்ஸில் சேர்க்கப்படாமல் இருக்கலாம். எனவே, அந்த தொகை இன்சூரன்ஸ் நேரத்தில் க்ளைம் செய்யப்படலாம். 10,000  என்ற க்ளைமில், ரூ.1500 முதல் ரூ2000 வரையிலான அளவிற்கு மாறுபடலாம். இது நாம் கொண்டு இருக்கும் காரின் வகையை அடிப்படையாக கொண்டும் வேறுபடலாம்.   

தேய்மான மதிப்பு - தேய்மான மதிப்பின் அடிப்படையில் க்ளைம் அளவு மேலும் குறைக்கப்படலாம். மேலும், இது ரூ.2000 அளவிற்கு குறைக்கப்படலாம். 

விரிவான பாலிசி குறைத்தல்கள் - விரிவான பாலிசியின் காரணமான சந்தர்ப்பங்களில் ஏற்படலாம் . உதாரணமாக, நாம் கொண்டிருக்கும் மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் விட கூடுதலான க்ளைம் மதிப்பு குறைக்கப்படலாம். இது  தேய்மான மதிப்பின் அடிப்படையில் முழுவதுமாக மாறுபடுகிறது. 

எனவே, நாம் கொண்டிருக்கும் ரூ,10,000-க்கு என்ற அளவிலான ஒரு சிறிய க்ளைமில் அனைத்து குறைத்தலுக்கு பிறகு ரூ.4000-த்தை நாம் பெறலாம். புதுப்பித்தல் நேரத்தில் சுமார் ரூ.5000 என்பிஐ பெற தகுதி இருப்பதால் இது உண்மையில் இழப்பாக இருக்கிறது. எனவே, நாம் இந்த கணக்கீடுகளையும் செய்ய வேண்டும். எனவே நமது க்ளைமில் இருந்து நல்ல பலன்களை நாம் பெறாவிட்டால் நாம் அதை பெறக்கூடாது. இது பெரிய அளவில் க்ளைம் பதிவுகளை பாதிக்கும்.

நோ க்ளைம் போனஸ் கணக்கீடு

க்ளைம் இல்லாத ஆண்டிற்கான புதுப்பித்தல் நேரத்தில் நோ க்ளைம் போனஸ் அளிக்கப்படுகிறது. எந்தவொரு க்ளைம் தாக்கலையும் பெறவில்லை என்பதால் கிடைக்கும் ஒருவகையான வெகுமதியாகும். இது ஒவ்வொரு ஆண்டிலும் குவிக்கப்படும் க்ளைம்கள் அடிப்படையில்  பெறப்படும். இது உங்களின் பிரீமியத்தில் கிடைக்கும் ஒருவகையான தள்ளுபடி. 

இதனை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் அட்டவணை உள்ளது. 


ஆண்டுகள்


என்சிபி  தள்ளுபடி

1

20%

2

25%

3

35%

4

45%

5

50%

இந்த அட்டவணை எந்தவொரு க்ளைம் தாக்கலும் இல்லை என்றால் மட்டுமே கிடைக்கப்பெறும். நீங்கள் மூன்றாம் ஆண்டில் க்ளைம் பெற்றால், என்சிபி அடுத்த ஆண்டில் குறைந்து விடும்.

கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் கணக்கிடுதலில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை  

வரிசை எண்

செய்யக்கூடியவை

செய்யக்கூடாதவை

 

செலவினங்கள் ரூ20,000-த்தை தாண்டினால் மட்டுமே க்ளைம் தாக்கல் செய்ய வேண்டும். இது என்சிபி-ஐ பாதிக்கும். பழைய காருக்கான பிரீமியம் கணக்கிடுதலும் அதேபோன்று கவனிப்பது முக்கியமானது.

சிறந்த பிரீமியம் விகிதத்தை பெறுவதற்கு சிறிய க்ளைம்களை தவிர்க்க வேண்டும். இது நம் என்சிபி மதிப்பை பாதிக்கும்.

 

அதிகபட்ச பலன்களை பெறுவதற்கு காலப்போக்கில் புதுப்பித்தலை நாம் செய்ய வேண்டும். தொடர்ச்சியான பிரீமியம் தொகை கணக்கிடுதல் நேரத்தில் சிறந்த விலையை பெறலாம்.

பிரீமியம் செலுத்துவதற்கு இடையே இருக்கும் இடைவெளியை தவிர்க்க வேண்டும்.

 

ஏற்கனவே சேவை வழங்குபவரிடம் இருந்து இன்சூரன்ஸ் பெற முயற்சிக்க வேண்டும். வாகனத்தில் மாற்றம் அல்லது சில சிறந்த சலுகைகள் இருந்தால் மட்டுமே மாற்றிக் கொள்ளலாம். கணக்கீட்டுக்கு பிறகு கூடுதல் தள்ளுபடியை பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம்.

கார் இன்சூரன்ஸ் வழங்குபவரை தொடர்ச்சியாக மாற்றுவது அதிக பிரீமியத்திற்கு வழிவகுக்கும் என்பதால் அதை செய்யக்கூடாது. இதன் விளைவாக, கணக்கீட்டிற்கு பிறகு அதிக பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கலாம்.

 

நாம் காரின் மாடல் & வகை ஆகியவற்றிக்கு உட்பட இன்சூரன்ஸ் பிரீமியத்தை எடுக்க வேண்டும். ஹட்ச்பேக்கிற்காக, சில நிறுவனங்கள் சிறப்பாக இருக்கலாம். ஆனால், சீடன்-க்கு மற்றொன்றாக இருக்கலாம். ஆடம்பர கார்களில், நமது தேவைகள் முழுவதுமாக மாறுபடலாம். நம்முடைய பிரீமியம் கணக்கீடு அதற்கேற்ப வேறுபடும்.

நாம் எந்தவொரு சேவை வழங்குபவரிடம் இருந்து கண்மூடித்தமாக இன்சூரன்ஸ் பெறக்கூடாது. முடிவெடுப்பதற்கு முன்னர் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதில், ஆன்லைன் கால்குலேட்டர் மிகப்பெரிய உதவியாக இருக்க முடியும். 

 

நமக்கு தேவைப்படக்கூடிய ஆட்-ஆன்ஸ் அடிப்படையில் கார் இன்சூரன்ஸ் பாலிசி தேர்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் பாலிசியின் பிரீமியம் மேலும் அதிகரிக்கும்.

நாம் தேர்ந்தெடுக்கும் ஆட்-ஆன்ஸ் பொருத்தமானதாக இருக்க வேண்டும். புதிய கார்களுக்கு, தேய்மான கவர் மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம். அதேநேரத்தில், நாம் சிறிய ஹட்ச்பேக் கொண்டிருந்தால், எலெக்ட்ரிக் சர்கியூட் ப்ரொடெக்ட் உபயோகம் இருக்காது. இவை அனைத்தும் கணக்கிடுதலில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

புதிய & பழைய கார்களின் பிரீமியத்தை நிறுவனங்கள் எப்படி கணக்கிடுகிறார்கள்?

ஒவ்வொரு கார் இன்சூரன்ஸ் நிறுவனமும், ஒரு கார் இன்சூரன்ஸ் பாலசிக்கான பிரீமியத்தை கணக்கிட சொந்த விதிகளை கொண்டிருக்கின்றன. இருப்பினும், இன்சூரன்ஸ் நிறுவனங்களால் கருத்தில் கொள்ளப்படும் காரணிகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன. 

புதிய கார்களுக்கு பிரீமியம் கால்குலேட்டர் - உயர்  மட்டத்தில் இருக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் அதன் தயாரிப்புகள் சில எளிய வழிமுறையை கொண்டுள்ளன. இது புதிய கார் வைத்து இருக்கும் உரிமையாளருக்கு அவசியமான வழிகாட்டுதலில் அவர்களின் வாகனத்தின்  விலைகேற்ப பொருத்தமான வாகன இன்சூரன்ஸ் பாலிசியை குறுகிய காலத்தில் வழங்குகிறது. புதிய காரின் இன்சூரன்ஸிற்கான பிரீமியத்தை கணக்கிட நீங்கள் வழங்க வேண்டிய விவரங்கள்: 

 • உற்பத்தியாளரின் பெயர் 
 • வாகனத்தின் மாடல் 
 • தயாரிக்கப்பட்ட ஆண்டு 
 • உரிமையாளர் - ஓட்டுனரின் தனிப்பட்ட விவரங்கள் 
 • வாகனம் பதிவு செய்யப்பட்ட மாநிலம்

பழைய கார்களுக்கான பிரீமியம் கால்குலேட்டர் - ஏற்கனவே பிரீமியம் செலுத்தும் அல்லது இரண்டாம் முறையாக வாங்கியவை பழைய கார்களின் அடிப்படையில் வருகிறது. ஆன்லைன் கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் கருவி,  துல்லியமான வாகன இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க மக்களுக்கு உதவும் எளிதான, வெளிப்படையான சிறந்த வழியாகும். நீங்கள் பயன்படுத்திய பழைய காருக்கான பிரீமியத்தை கணக்கிட, பின்வரும் விவரங்களை வழங்க வேண்டும். 

 • காரின் வகை 
 • எரிபொருள் வகை 
 • தற்போதைய கார் இன்சூரன்ஸ் பாலிசியின் விவரங்கள் 
 • காரின் பதிவு எண் 
 • இரண்டாம் தர (செகண்ட் ஹண்ட்) முறையாக வாங்கிய காரின் 

உரிமை மாற்றம் பற்றிய விவரம் 

 • முந்தைய ஆண்டின் க்ளைம்கள், தேவைப்பட்டால்

பழைய கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் கருவி உங்கள் வாகனத்தை இன்சூரன்ஸ் செய்ய தேவையான பிரீமியத்தை காண்பிக்கிறது. 

ஆன்லைன் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் ஏன் அவசியமானது?

மோட்டார் வாகன சட்டம் 1988 படி, இந்தியாவில் கார் இன்சூரன்ஸ் வைத்து இருப்பது கட்டாயமாகும். பின்வரும் காரணங்களுக்காகவும் நாம் கார் இன்சூரன்ஸை வைத்து இருக்க வேண்டும். 

 • திருட்டை தடுக்க 
 • விபத்து நிகழும் நேரத்தில் சேதங்களை நிர்வகிக்க 
 • போக்குவரத்துக்கு விதிகளை பின்பற்ற, ஏனெனில் நோ க்ளைம் போனஸ் வசதி இருப்பதால் மக்கள் கவனமாக பயணிக்க முயற்சி செய்வர். 
 • இவை மக்களின் குடிமை உணர்வை அதிகரிக்க உதவுகிறது. 

பின்வரும் முக்கிய காரணங்களால் ஒரு சிறந்த கால்குலேட்டர் சிறந்த பாலிசியை எடுத்துக் கொள்ள உதவுகிறது . 

 • கூடுதலான தகவல் கொண்ட விருப்பத்தை கொண்டிருப்பது  
 • குறைந்த விலையில் சிறந்த வசதிகளை பெறுவதற்கு 
 • நம் வாகனத்தின் அடிப்படையில் கார் இன்சூரன்ஸை பெறுவது
 • உடனடியான முடிவுகளை அளிப்பதால் நேரம் சேமிக்கப்படுகிறது