Sehwag PX
ட்ராவல் இன்சூரன்ஸ் கால்குலேட்டர்

#Virukipolicy | T&C*

கன்பியூசியஸ் நன்றாகவே கூறினார், " நீங்கள் எங்கு சென்றாலும்  உங்களின் முழு மனதுடன் செல்லுங்கள் ".  பயணங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மிக அழகான தருணமாக கருதப்படுகிறது. நீங்கள் பயணிக்கும் பொழுது, வெறும் நிரந்தரமான நினைவுகளை உருவாக்காமல், உங்களுடைய வாழ்க்கையின் பல முதல் அனுபவங்களை அனுபவிப்பீர்கள். இது உள்ளே மற்றும் வெளியே ஒரு சிறந்த மனிதர்களை உருவாக்குகின்ற வாழ்க்கையின் ஒரு அனுபவம்.   பயணத்தால் ஒருவர் நம் கிரகத்திலுள்ள புகழ்பெற்ற இடங்களை மட்டுமல்லாமல் , வேறுபட்ட கலாச்சாரம் , ,மக்கள் , உடைகள் , மொழிகள் , கட்டிடக்கலை , வரலாறு மற்றும் பலவற்றை பற்றி கற்றுக்கொள்கிறோம். இவை அனைத்தும் சாகசங்களுடன் இணைந்து , ஒரு நபரை இன்னும் அதிக நம்பிக்கையுடன் , சுயாதீனமாக  மற்றும் அதிகம் அறிந்தவராக வடிவமைக்கின்றன.

ஒவ்வொருவரின் சொந்தரவு இல்லாத மகிழ்ச்சியான பயணத்தை அனுபவிப்பதை உறுதி செய்து, ட்ராவல் இன்சூரன்ஸ் பற்றி உங்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறோம். 

இன்சூரன்ஸ் செய்தவர்களுக்கு எதிராக நிகழும் ஆபத்துக்களான , உரியவரின் உடைமைகள் இழப்பு அல்லது திருட்டு , பாஸ்போர்ட் மற்றும் குறிப்பிடத்தக்க ஆவணங்களின் இழப்பு , விமானங்களை தவற விடுவது அல்லது தாமதம் ஆகியவற்றால் பண இழப்புகள் மற்றும் மருத்துவ அவசரநிலைகள் முதலியவற்றிற்கு ட்ராவல் இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளிக்கிறது. இவற்றை ஒருவரால் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. ஆனால், ட்ராவல் இன்சூரன்ஸ் உதவியுடன் இந்த சூழ்நிலையில் ஒருவர் அமைதியாக இருக்க முடியும்.

சிறந்த ட்ராவல் இன்சூரன்ஸ் பாலிசிகளை பெறுவதற்கு ட்ராவல் இன்சூரன்ஸ் கால்குலேட்டர்ஸ் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ட்ராவல் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் என்பது வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பல்வேறு ட்ராவல் இன்சூரன்ஸ் பிளான்களில் கிடைக்கும் பிரீமியத்தை கணக்கிட பயன்படும் ஒரு கருவியாகும். ட்ராவல் இன்சூரன்ஸ் கால்குலேட்டரின் உதவி உடன், ஒருவர் பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒப்பிட்டு, இன்சூரன்ஸ் செய்பவரின் தேவை மற்றும் அவசியங்களுக்கு ஏற்ப மேற்கோள்களை உருவாக்குவதன் மூலம் தனக்கான சிறந்த ட்ராவல் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க முடியும். நீங்கள் பயணத்தை முன்பதிவு செய்யும் நேரத்தில் ட்ராவல் இன்சூரன்ஸ் வாங்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், இதனால் முழு பயணமும் கவர் செய்யப்படலாம். இப்பொழுது ஆன்லைன் ட்ராவல் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் உதவி உடன், ஒரு சிறந்த ட்ராவல் இன்சூரன்ஸ் பிளானை அவற்றின் விவரங்களின்படி எளிதாக கண்டறியலாம். 

தேவையான தகவல்கள்

  • பயணம் தொடங்கும் தேதி , முடிவடையும் தேதி உள்ளிட்ட பயண விவரங்கள் 
  • பயணம் மேற்கொள்ளும் இடம் , பயணம் செய்யும் நாட்களின் எண்ணிக்கை. 
  • இன்சூரன்ஸ் செய்பவரின் வயது , பிறந்த தேதி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள்.
  • சிங்கிள் ட்ரிப் அல்லது மல்டி ட்ரிப் பாலிசி போன்ற பாலிசியின் வகைகள்.

ட்ராவல் இன்சூரன்ஸின் நன்மைகள்

  • இன்சூரன்ஸ் வழங்குபவர் மூலம் நாடு முழுவதிலும் இன்சூரன்ஸ் நபருக்கு 24/7 வாடிக்கையாளர் சேவை ஆதரவு வழங்கப்படுகிறது. 
  • இன்சூரன்ஸ் செய்யும் நபருக்கு ஏற்படும் தற்செயலான மரணம் , பயண தாமதம் , பல் சிகிச்சைகள் , நாடு திரும்புதல் , அவசரநிலை ஒன்றிணைதல் மற்றும் தனிப்பட்ட பொறுப்புகள் , சட்ட செலவினங்கள் போன்ற ஆபத்துக்கு எதிராக பாதுகாப்பு பெறலாம். 
  • மருத்துவ சிகிச்சைகள் , மருத்துவமனை அனுமதி மற்றும் அவசரநிலைகளுக்கு விடுதி இடவசதி போன்ற மற்ற வசதிகள் அல்லது நன்மைகளும் திட்டத்தில் கவர் செய்யப்படுகின்றன. 
  • தனிப்பயனாக்குதல் ஆனது அவர்களின் பயணங்களுக்கு ஏற்றவாறு தங்கள் திட்டங்களைத் தனிப்பயனாக்க முடியும் என இன்சூரன்ஸ் நபருக்கு வழங்கக்கூடிய  ஒரு சிறந்த நன்மையின் வாக்குறுதியாகும். இந்த பிரீமியத்தின் தொகை பிளான்களின் படி மாறுபடுகிறது. 
  • பயணத்தை ரத்து செய்வது தொடர்பான செலவினங்களுக்கும் ட்ராவல் இன்சூரன்ஸ் பிளான் ஈடுசெய்கிறது. விமானம் தாமதம் மற்றும் பயண தாமதம் போன்ற பிரச்சனைகளுக்கும் அவர்கள் ஈடுசெய்கின்றனர்.

ட்ராவல் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள்

  1. இன்சூரன்ஸ் தொகை : இன்சூரன்ஸ் பிளானை வாங்குவதற்கு முன்னர் மிக முக்கியமாக கருதப்பட வேண்டியது உறுதி செய்யப்பட்ட தொகை அல்லது இன்சூரன்ஸ் தொகையாகும். இன்சூரன்ஸ் தொகை என்பது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட பணத்தின் தொகையாகும். இந்த தொகை உங்களுக்கான பிரீமியத்தை தீர்மானிக்கிறது. அதிகபட்ச இன்சூரன்ஸ் தொகைக்கு பிரீமியம் அதிகமாகவும் மற்றும் நேர்மாறாக இருக்கும். உங்களின் ட்ராவல் இன்சூரன்ஸ் தொகையின் உறுதி செய்யப்பட்ட தொகையில் மெடிக்கல் கவரேஜ் செலவுகள் பெறுவது முக்கிய அங்கமாக இருக்கும். 
  2. இன்சூரன்ஸ் பிளானின் நன்மைகள் :  இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மூலம் வழங்கப்படும் பல்வேறு இன்சூரன்ஸ் பிளான்கள் உங்களின் தேவைக்கு ஏற்ப இருக்கும். அவற்றில் சில , ஸ்டுடென்ட் பாலிசி , மல்டி-ட்ரிப் பாலிசி , மூத்த குடிமக்கள் பாலிசி முதலியவை ஆகும். இவற்றிற்கான பிரீமியம் அதற்கேற்ப வேறுபடுகிறது. 
  3. பயணத்தின் காலம் : பயணம் மேற்கொள்ளும் காலமும் செலுத்தும் பிரீமியத்தின் அளவை பாதிக்கும். நீண்ட பயணத்திற்கு பிரீமியம் அதிகமாக இருக்கும். இதேபோல், குறைந்த பயணத்திற்கு பிரீமியம் குறைவானதாக இருக்கும். ஒரே ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தால் பிரீமியத்தை சேமிக்க மல்டி-ட்ரிப் பாலிசியை (பல பயண பாலிசி) எடுத்துக் கொள்ள அறிவுத்தப்படுகிறது.
  4. பயண இலக்கு : பயணம் மேற்கொள்ளும் இடமானது பிரீமியத்தை பாதிக்கும் மற்றொரு முக்கிய காரணியாகும். உதாரணமாக, விடுமுறை நாட்களில் ஐக்கிய நாடுகளுக்கு செல்வதற்கு, விடுமுறை நாட்களில் ஸ்ரீலங்கா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு செல்வதை விட அதிக பிரீமியத்தை கொண்டிருக்கும். 
  5. இன்சூரன்ஸ் நபரின் வயது மற்றும் உடல்நலம் : பிரீமியத்தை பாதிக்கும் மற்றொரு காரணியாக இருப்பது இன்சூரன்ஸ் செய்யும் நபரின் வயதும், உடல்நலமும். மூத்த குடிமக்களை ஒப்பிடும் பொழுது இளைஞர்களுக்கு பிரீமியம் குறைவானதாக இருக்கும். உங்களுக்கு முன்பே மருத்துவ நிலைமைகள் இருந்தால், உங்களின் பிரீமியம் அதிகரிக்கச் செய்யும். 
  6. ஆட்-ஆன் கவரேஜ் : நகைகள் , விலையுயர்ந்த கேஜெட்களின் இழப்பு / திருட்டு போன்ற பல்வேறு ஆட்-ஆன்ஸ் கவரேஜ்கள் உள்ளன. உங்களின் விருப்பத்தில் ஈர்க்கக்கூடிய வகையில் அதிக பிரீமியத்தில் ஹோம் இன்சூரன்ஸ் கூட கிடைக்கின்றன.

ட்ராவல் இன்சூரன்ஸ் பிளான்களின் பல்வேறு வகைகள்

  • இன்டர்நேஷனல் ட்ராவல் இன்சூரன்ஸ் பிளான்: நீங்கள் வெளிநாடுகளில் பயணம் செய்யும் பொழுது ஏற்படும் இடையூறுகளுக்கு எதிராக இந்த பிளான் ஆனது உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இது கடத்தல்கள், பேக்கேஜ்களின் இழப்பு  / திருட்டு , தாய்நாட்டுக்கு நாடு திரும்புதல் / வெளியேறுவது , வெளிநாட்டு மருத்துவ செலவுகள் , பயண தாமதம் , பாஸ்போர்ட் போன்ற முக்கிய ஆவணங்களின் இழப்பு ஆகியவற்றிக்கான கவரேஜை வழங்குகிறது.
  • டொமெஸ்டிக் ட்ராவல் இன்சூரன்ஸ் பிளான்: இந்த பிளான் ஆனது  பயண தாமதம் , தனிப்பட்ட பொறுப்பு , பேக்கேஜ்களின் இழப்பு / திருட்டு , மருத்துவ அவசரநிலைகள் , நிரந்தர இயலாமை மற்றும் இறப்பு ஆகியவற்றை உள்ளடக்கி நாட்டிற்குள் பயணம் செய்யும் மக்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. 
  • ஸ்டுடென்ட் ட்ராவல் இன்சூரன்ஸ் பிளான்: நன்கு கட்டமைக்கப்பட்ட ஸ்டுடென்ட் இன்சூரன்ஸ் பிளான் ஆனது மேற்படிப்பிற்கு வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு மருத்துவ மற்றும் நிதி உதவி வடிவத்தில் கவரேஜை வழங்குகிறது. சில நேரங்களில் எதிர்பாராத விதமான சூழ்நிலைகளால் மாணவர்கள் புதிய நாட்டில் நிதி சார்ந்த மற்றும் இடவசதி உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த ஸ்டுடென்ட் இன்சூரன்ஸ் பிளான் அவர்களுக்கு எந்தவொரு கவலையும் இல்லாமல் இந்த பிரச்சனைகளை கடக்க உதவும்.
  • பேமிலி ட்ராவல் இன்சூரன்ஸ் பிளான்: இந்த வகையான பிளான் ஆனது இன்சூரன்ஸ் செய்பவர் , அவரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை உள்ளடக்கிய ஒரு தனி குடும்பத்திற்கு பொருந்தும் எனக் குறிப்பிடுகிறது. இது மருத்துவ அவசரநிலை , தனிப்பட்ட விபத்து , மருத்துவமனை அலவன்ஸ் , பயண தாமதம் , பேக்கேஜ்கள் மற்றும் ஆவணங்களின் இழப்புகள் போன்ற தடைகளில் இருந்து பாதுகாக்கிறது. 
  • மெடிக்கல் ட்ராவல் இன்சூரன்ஸ் பிளான்: இது அடிப்படையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் மக்களுக்கு அளிக்கக்கூடிய குறுகிய கால பிளான் என குறிப்பிடப்படுகிறது. இவை வெளிநாடுகளுக்கு மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவைக்கு பயணிப்பவர்களுக்கு எதிராக வழங்கப்படும் கவரேஜ் ஆகும். 
  • சீனியர் சிட்டிசன் இன்சூரன்ஸ் பிளான்: மூத்த குடிமக்கள் எவ்வித சொந்தரவும் இல்லாமல் ஒரு விரிவான ட்ராவல் இன்சூரன்ஸ் பிளான் உடன் பயணத்தை மேற்கொள்ள முடியும். பணமில்லாத மருத்துவ சேவை , மருத்துவ வரவேற்பு சேவை , தரமான சுகாதார வசதிகள் , சர்வதேச சிம் கார்டுகள் , முந்தைய நிலைமைக்கான கவர் , தற்செயலாக உடல் காயங்கள் , ஆவணங்களின் இழப்பு , பயண தாமதம் / ரத்து , மூன்றாம் தரப்பு சேதங்கள் , துயர கட்டணங்கள் உள்ளிட்டவைக்கு விரிவான ட்ராவல் இன்சூரன்ஸ் பிளான் கவர் வழங்குகிறது.