டூவீலர் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

விபத்து, திருட்டு அல்லது இயற்கை பேரழிவுகளின் காரணமாக இரு சக்கர வாகனத்திற்கு அல்லது வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு எதிரான நிதி ஆதரவை டூவீலர் இன்சூரன்ஸ் அளிக்கிறது. நீங்கள் விபத்தில் மூன்றாம் தரப்பினரைக் (தர்டு பார்டி) காயப்படுத்தி இருந்தாலோ அல்லது அவரது உடமைகளைச் சேதப்படுத்தினாலோ அதற்கான நிதி செலவுகளை இது கவர் செய்யும். ஒட்டுமொத்தமாக, ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் உங்களுக்கு நேர்ந்தால் உங்கள் மனதைத் திடமாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது.

டூவீலர் இன்சூரன்ஸின் அவசியம் ஏன்?

1988 ஆம் ஆண்டில் மோட்டார் வாகனச் சட்டம் ஆனது டூவீலர் இன்சூரன்ஸ் என்ற கருத்தை முன்னிலைப்படுத்தியது. இதன் பின்னணியில் இருக்கும் யோசனை ஆனது மிகவும் எளிமையானது - இந்தியாவில் ஒருவர் சுதந்திரமாக வாகனத்தை ஓட்ட தங்களின் வாகனத்திற்கு குறைந்தபட்சம் மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸைக் கட்டாயம் வாங்க வேண்டும். நீங்கள் அந்த குறைந்தபட்ச இன்சூரன்ஸ் கூட இல்லாமல் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால், அபராதம் செலுத்த வேண்டும் மற்றும் இந்தியச் சட்டத்தின் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டி இருக்கும். 2019 ஆம் ஆண்டில் மோட்டார் வாகனச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட புதிய திருத்தங்களின்படி, இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவதற்கு அல்லது காலாவதியான ஓட்டுநர் உரிமத்துடன் ஓட்டுவதற்கும் அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே, நீங்கள் நீதிமன்றத்திற்கு அலைந்து திரிந்து, உங்கள் பர்ஸை காலி செய்ய விரும்பவில்லை என்றால் உடனடியாக டூவீலர் இன்சூரன்ஸ் எடுப்பதற்கான சரியான நேரம் இதுவே.

டூவீலர் இன்சூரன்ஸின் வகைகள்

விரிவான இன்சூரன்ஸ்

இந்த வகையான இன்சூரன்ஸில் மூன்றாம் தரப்பினருடன் சேர்ந்து உங்களுக்கும் / உங்கள் இரு சக்கர வாகனத்திற்கும் ஏற்படும் சேதங்களுக்கு எதிராக நிதி பாதுகாப்பை விரிவுபடுத்தப்படுகிறது. உங்கள் கவரேஜை மேம்படுத்த விருப்ப கூடுதல் இணைப்புகள்/சேர்த்தல்களை நீங்கள் பெறலாம்.

மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ்

இதில் பெயரில் குறிப்பிடுவது போல, பாலிசிதாரரால் மூன்றாம் தரப்பினருக்கு அல்லது அவரது உடைமைகளுக்கு (வாகனம் மற்றும் பிற) ஏற்படும் சேதங்களிலிருந்து எழும் செலவுகளுக்காக நிதிக் கடனைச் சமாளிக்க உதவுகிறது.

உங்கள் டூவீலர் இன்சூரன்ஸ் உடன் எந்த கூடுதல் இணைப்புகளை நீங்கள் சேர்க்க முடியும்?

விரிவான இன்சூரன்ஸ் ஆனது உங்களுக்கு அதிகபட்ச நிதி பாதுகாப்பை அளித்தாலும், அதன் பாதுகாப்பு விரிவாக்கத்தில் சிக்கல்களைக் கொண்ட சில பகுதிகளும் உள்ளன. அதனால்தான் இன்சூரன்ஸ் வழங்குநர்கள் தங்கள் குறைபாடுகளை சரி செய்ய கூடுதல் இணைப்புகளை (ஆட்-ஆன்ஸ்) பட்டியலை வழங்குகிறார்கள். உங்கள் குறிப்புக்கு சில கூடுதல் இணைப்புகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

பாகங்களுக்கான கவர்

உங்கள் டூவீலரில் விலை உயர்ந்த எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரிக்கல் இல்லாத பாகங்கள் பொருத்தப்பட்டிருந்தால், நீங்கள் நிச்சயமாக அவற்றை இன்சூரன்ஸ் செய்வது அவசியமாக இருக்கும். இந்த கூடுதல் கவர் அத்தகைய மதிப்புமிக்க பொருட்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு எதிராக தேவைப்படும் நிதிப் பாதுகாப்பை வழங்கும்.

மெடிக்கல் கவர்

இந்த கூடுதல் கவர் ஆனது விபத்துடன் தொடர்புடைய மருத்துவ சிகிச்சைக்கு எதிராக தேவையான நிதிப் பாதுகாப்பை உங்களுக்கு வழங்குகிறது.

பயணிகள் கவர்

இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது, விபத்து ஏற்பட்டால் வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் உடன் பயணிக்கும் பயணி ஆகிய இருவரும் சமமான ஆபத்தை சந்திக்க வேண்டி இருக்கும். பொதுவாக, டூவீலர் இன்சூரன்ஸ் திட்டங்கள் வாகனத்தை ஓட்டுபவருக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கின்றன. பயணிகளுக்கான பாதுகாப்பைப் பெற, இந்த கூடுதல் கவரில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டமானது விபத்தில் பயணிக்கு மரணம் அல்லது இயலாமை ஏற்பட்டால் இழப்பீடு வழங்குகிறது.

பூஜ்ஜியம் / தேய்மானமில்லா கவர்

இந்த கவரின் கீழ், இன்சூரன்ஸ் நிறுவனமானது இருசக்கர வாகனத்தின் முழுமையான மதிப்பை (தேய்மானக் கட்டணங்கள் உட்பட) க்ளைம் தாக்கலின் போது பாலிசிதாரருக்கு வழங்குவார்.

டூவீலர் இன்சூரன்ஸின் பிரீமியம் கணக்கீடு

ஒரு திட்டத்தின் பிரீமியத்தை கணக்கிடும்போது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல காரணிகளை கவனத்தில் கொள்கின்றன. அதன் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இன்சூர்டு டிக்லர்டு வல்யூ (ஐடிவி)

உங்கள் இரு சக்கர வாகனம் திருடப்பட்டால் அல்லது விபத்தில் முற்றிலுமாக சேதமடைந்து விட்டால் (பழுதுப்பார்க்க முடியாத அளவிற்கு) உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனமானது இன்சூரன்ஸ் செய்யப்பட்ட அறிவிக்கப்பட்ட மதிப்பு அல்லது இன்சூர்டு டிக்லர்டு வல்யூ (ஐடிவி) எனப்படும் அதிகபட்சத் தொகையை உங்களுக்கு வழங்குவார்கள். அந்தத் தொகையை உங்கள் இரு சக்கர வாகனத்தின் தற்போதைய சந்தை மதிப்பாக நீங்கள் கருதலாம். எனவே, குறைந்த ஐடிவிக்கு நீங்கள் குறைந்த பிரீமியம் செலுத்த வேண்டும் மற்றும் நேர்மாறாகவும் இருக்கலாம்.

தேய்மானம்

இது நிலையான பயன்பாடு, அன்றாடப் பயன்பாட்டில் ஏற்படும் சேதம் காரணமாக காலப்போக்கில் ஒரு சொத்தின் மதிப்பைக் குறைக்கிறது. புதிய இரு சக்கர வாகனங்களுக்கு தேய்மான அளவு இல்லை. பழைய வாகனங்களுக்கு அதிக தேய்மானம் உள்ளது. எனவே, தேய்மானம் அதிகரிக்கும் போது பிரீமியம் அதிகரிக்கிறது.

வயது

கோளாறுகள் ஏற்படும் வகையில் அதிக ஆபத்தில் உள்ளதால் பழைய இரு சக்கர வாகனங்களின் பிரீமியமானது புதிய வாகனத்துடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது.

கியூபிக் கேபாசிட்டி

இது இயந்திரத்தில் உள்ள ஆற்றலைக் குறிக்கிறது. அதிக எரிபொருள் நுகர்வு காரணமாக உயர்ந்த கியூபிக் கேபாசிட்டி கொண்ட இரு சக்கர வாகனங்கள் அதிக இன்சூரன்ஸ் பிரீமியங்களைக் கொண்டுள்ளது.

திருட்டு எதிர்ப்பு சாதனங்கள்

உங்களின் இரு சக்கர வாகனத்தில் திருட்டு எதிர்ப்பு சாதனங்களை (ஆன்ட்டி தெப்ட் டிவைஸ்) பொருத்துவதன் மூலம் அல்லது இந்திய ஆட்டோமொபைல் அசோசியேஷனில் செயல்படும் உறுப்பினராக இருப்பதன் மூலம் நீங்கள் தள்ளுபடியைப் பெற முடியும், அவை பிரீமியத்திலிருந்து கழிக்கப்படுகின்றன.

நோ க்ளைம் போனஸ் (என்சிபி)

ஒரு பாலிசி ஆண்டில் உங்கள் இரு சக்கர வாகனத்திற்கு எந்தவொரு க்ளைம் தாக்கலும் செய்யாமல் இருப்பதன் மூலம் நீங்கள் பெறக்கூடிய ஒரு வகையான தள்ளுபடியே நோ க்ளைம் போனஸ் ஆகும். என்சிபி-கள் பிரீமியம் தொகையிலிருந்து கழிக்கப்படுகின்றன. நீங்கள் பெறும் எந்தவொரு விலக்குகளும் குறைந்த பிரீமியத்திற்கு வழிவகுக்கும். 

கீழே உள்ள பட்டியலில் ஒரு சில டூவீலர்களின் பிரீமியம் விவரங்களைக் குறிப்பிடுவதன் மூலம் மேற்கண்ட காரணிகளின் பங்கைப் புரிந்து கொள்ள முடியும்.

21-07-2020 அன்று அட்டவணை புதுப்பிக்கப்பட்டது

பைக் வகை


டூவீலரின் விலை

ஐடிவி *

பூஜ்ஜிய தேய்மானம் (ஆட்-ஆன்ஸ்) *

பிரீமியம்

கேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் (199 சிசி)

ரூ.1,73,000

ரூ.1,28,942

ரூ.709

ரூ.6,424

ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட்

ரூ.1,65,000 

ரூ.1,18, 560

ரூ.425

ரூ.6472

யமஹா ஆர்15 வி3 (155 சிசி)

ரூ.1,46,000 

ரூ.1,12,500

ரூ.731

ரூ.7,433

* மதிப்புகள் நகரத்தின் (டெல்லி) மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆண்டு (2020) அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன.

உங்கள் டூவீலரின் பிரீமியத்தை நீங்கள் கணக்கிட விரும்பினால், பாலிசிஎக்ஸ்.காமின் வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்ட பிரீமியம் கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம்.

டூவீலர் இன்சூரன்ஸை ஏன் ஆன்லைனில் வாங்க வேண்டும்?

இன்சூரன்ஸை காகித முறையில் நேரில் வாங்கும் முறையில் நீங்கள் பெறாத கூடுதல் நன்மைகளை ஆன்லைனில் பெற உதவும் சில காரணிகள் கீழே உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

விரைவான வழங்கல் : சில நிமிடங்களிலேயே டூவீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை ஆன்லைனில் வாங்கலாம். அந்த அளவிற்கு ஆன்லைன் மூலம் பாலிசி வாங்குவது விரைவாக இருக்கும்.

கூடுதல் கட்டணங்கள் இல்லை : ஆன்லைனில் வாங்குவதன் மூலம், நீங்கள் கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டியதில்லை. அதனால்தான் ஆன்லைன் டூவீலர் இன்சூரன்ஸ் திட்டங்கள் ஆஃப்லைனுடன் (காகித முறையில் நேரில் வாங்குவது) ஒப்பிடும்போது மிகவும் மலிவாக இருக்கிறது.

ஆய்வுகள் இல்லை மற்றும் குறைவான ஆவணங்கள் : ஆய்வுகள் இல்லாமல் உங்கள் பாலிசியை எளிதாக புதுப்பிக்க முடியும். உங்கள் இருசக்கர வாகனம் மற்றும் ஏற்கனவே உள்ள பாலிசி (இருந்தால்) பற்றிய சில விவரங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஈஸி க்ளைம் செட்டில்மென்ட் : இணையதளத்தின் மூலம் உங்கள் க்ளைம் தாக்கலை எளிதாக பதிவு செய்யலாம் மற்றும் ஏதேனும் கேள்விகள் ஏற்பட்டால் குழுவுடன் இணைக்கப்படுவீர்கள்.

ஆன்லைன் ஆதரவு: பாலிசிஎக்ஸ்.காம் குழு உங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் மிகவும் தேவையான உதவிகளை வழங்குவதை உறுதி செய்கிறது.

சிறந்த டூவீலர் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

இந்திய சந்தையில் டூவீலர் இன்சூரன்ஸைக் கையாளும் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கிடைப்பதால், உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு பயன்படக்கூடிய மிகவும் பொருத்தமான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமாகிவிட்டது. உங்களுக்கு சிறப்பாக உதவ, நாங்கள் க்ளைம் செட்டில்மென்ட் விகிதத்தின் அடிப்படையில் சிறந்த டூவீலர் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பட்டியலை உருவாக்கியுள்ளோம். கீழே அப்பட்டியலைப் பார்ப்போம்.

21-07-2020 அன்று அட்டவணை புதுப்பிக்கப்பட்டது

நிறுவனம்

க்ளைம் விகிதம்

பணமில்லா கேரேஜ்கள்

நோ க்ளைம் போனஸ்

நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் 

127.50%

3,200+

கிடைக்கிறது

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 

120.79%

3,100+

கிடைக்கிறது

எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

87%

1,500+

கிடைக்கிறது

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம்

112.62%

3,100+

கிடைக்கிறது

பாரதி அக்ஸா ஜெனரல் இன்சூரன்ஸ் 

75%

5,200+

கிடைக்கிறது

டூவீலர் இன்சூரன்ஸ் வாங்க தேவையான ஆவணங்கள்

சிறந்த டூவீலர் இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்ய, நீங்கள் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். உங்களின் குறிப்புக்கான அத்தகைய ஆவணங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அடையாளச் சான்று : ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற அடையாளச் சான்றுகளை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி சான்று : சரிபார்ப்புக்கு முகவரி சான்று தேவை. அதற்காக, நீங்கள் வாடகை ஒப்பந்தம், பாஸ்போர்ட் அல்லது மின்சாரக் கட்டண பில்கள் போன்றவற்றை சமர்ப்பிக்கலாம்.

தேசிய சான்று : சில சந்தர்ப்பங்களில், நீங்கள் ஒரு தேசியச் சான்றை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். அதற்காக நீங்கள் பாஸ்போர்ட், வாக்காளர் ஐடி போன்றவற்றை சமர்ப்பிக்கலாம்.

பாலிசிஎக்ஸ்.காமில் இருந்து டூவீலர் இன்சூரன்ஸ் வாங்குவது எப்படி?

உங்கள் இரு சக்கர வாகனத்தை தனிப்பட்ட அல்லது வணிகரீதியான வழிமுறைகளுக்குப் பயன்படுத்தி வந்தாலும் பரவாயில்லை, இன்சூரன்ஸ் ஆனது உங்கள் இரு சக்கர வாகனத்திற்கு ஏற்படும் அனைத்து இடையூறுகளுக்கும் எதிராக பாதுகாப்பு கவசமாக இருக்கும்.

பாலிசிஎக்ஸ்.காமில், சிறந்த பிராண்டுகளிலிருந்து வெவ்வேறு டூவீலர் இன்சூரன்ஸ் திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்க உங்களுக்கு உதவும் வகையில் இலவச இன்சூரன்ஸ் மேற்கோள்களைப் பெறுவீர்கள். இன்று உங்கள் டூவீலரை இன்சூரன்ஸ் செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்

படி 1: இந்தப் பக்கத்தின் மேல் மூலையில் இருக்கும் " டூவீலர் இன்சூரன்ஸ் மேற்கோள்களை ஆன்லைனில் ஒப்பீடு " எனும் பகுதியைக் கிளிக் செய்க.

படி 2: உங்கள் வாகனத்தின் விவரங்களை நிரப்பி " தொடரவும் " என்பதைக் கிளிக் செய்க.

படி 3: தேவையான விவரங்களை நிரப்பி " தொடரவும் " என்பதைக் கிளிக் செய்க.

படி 4 : பல்வேறு அம்சங்கள், பாதுகாப்பு, நன்மைகள், வசதிகள், பிரீமியம் போன்றவற்றின் அடிப்படையில் மேற்கோள்களை ஒப்பிடுக. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய விரும்பும் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 5: " வாங்க " எனும் டப்பை கிளிக் செய்து கட்டணம் செலுத்துங்கள்.

படி 6: வெற்றிகரமாக முடிந்தது ! நீங்கள் இப்போது காப்பீடு செய்யப்பட்டுள்ளீர்கள்.

உங்கள் டூவீலர் இன்சூரன்ஸை வாங்குவதற்கு பாலிசிஎக்ஸ்.காமை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

இந்திய சந்தையில் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு டூவீலர் இன்சூரன்ஸை வழங்குகின்றன. இப்படி சந்தையில் வழங்கப்படும் ஒவ்வொரு டூவீலர் திட்டத்தையும் ஒருவர் ஒன்றபின் ஒன்றாக ஒப்பிட்டுப் பார்க்க முயன்றால், அவர்கள் ஒரு வட்டத்தில் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியது தான். மேலும், அவர்கள் சிறந்த பாலிசியை வாங்கத் தவறிவிடுவார்கள்.

பாலிசிஎக்ஸ்.காமில், ஒரு ரூபாயை கூட செலவழிக்காமல் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களை ஒப்பிடலாம். உங்களின் டூவீலர் இன்சூரன்ஸை வாங்குதலுக்கான சிறந்த வெப் அக்ரிகெடர்களில் ஒன்றாக பாலிசிஎக்ஸ்.காமை உருவாக்கும் சில காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இலவச ஒப்பீடு : இந்தியாவில், டூவீலர் இன்சூரன்ஸைத் திட்டங்களை வழங்கும் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன. சிறந்ததைத் தேர்வு செய்ய உங்களுக்கு விரிவான ஒப்பீடு தேவை. பாலிசிஎக்ஸ்.காம் ஆனது காட்சிகளுடன் வெளிப்படுத்துகிறது. இந்த இணையதளம் உங்களுக்கு தொந்தரவில்லாத ஒப்பீட்டு செயல்முறைக்கு உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் திட்டங்களை எளிதாக ஒப்பிட்டு உங்களுக்காக சிறந்த ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

பயனர் நட்பு தளம் : பாலிசிஎக்ஸ்.காம் ஒரு பயனர் நட்பு தளமாகும், இது வாடிக்கையாளர்களுக்கு எந்தவித பின்னடைவும், நடுக்கமும் இல்லாமல் வலைதளத்தை பயன்படுத்த எளிதாக்குகிறது.

அணுகல் : எந்த இடத்திலிருந்தும் எங்கள் வலைதளத்திற்கான முழுமையான அணுகலைப் பெற முடியும்.. இணையதளத்தில் உள்நுழைய உங்களுக்கு நிலையான இணைய இணைப்பு மற்றும் சாதனம் மட்டுமே தேவை.

உள்ளடக்கம் மற்றும் விலக்குகள்

மற்ற இன்சூரன்ஸ் திட்டங்களைப் போலவே, டூவீலர் இன்சூரன்ஸ் திட்டங்களும் உள்ளடக்கம் மற்றும் விலக்குகளைக் கொண்டுள்ளன. அதன் பட்டியல் நீளமானதாக இருந்தாலும் கூட பொதுவாக அனைத்து நிறுவனங்களும் பின்பற்றும் பொதுவான விசயங்களை நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளோம். அவற்றை கீழே பார்க்கலாம்.

கவர் செய்யப்படுபவை என்ன?

 • இது விபத்து, திருட்டு அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பிரச்சனைகளான கலவரம், வேலைநிறுத்தம், தீ, மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றால் இரு சக்கர வாகனங்களுக்கு ஏற்படும் இழப்புகள் அல்லது சேதங்களை உள்ளடக்கியது.
 • தீ, நிலநடுக்கம் அல்லது வேறு ஏதேனும் இயற்கை பேரழிவுகளால் இரு சக்கர வாகனத்திற்கு ஏற்படும் இழப்புகள் அல்லது சேதங்கள்.
 • மூன்றாம் தரப்பு பொறுப்பு இன்சூரன்ஸ் (தர்டு பார்ட்டி லியபிலிட்டி) ஆனது மூன்றாம் தரப்பினரின் க்ளைம்-களுக்கு எதிராக உங்களை (பாலிசிதாரரை) பாதுகாக்கிறது.
 • தனிப்பட்ட விபத்து கவர் ஆனது மரணம் அல்லது நிரந்தர இயலாமை ஏற்பட்டால் பொருந்தும்.

கவர் செய்யப்படாதது என்ன?

 • குடிப்போதையில் அல்லது சட்டப்பூர்வமான ஓட்டுநர் உரிமத்தை எடுத்துச் செல்லாமல் வாகனத்தை இயக்கும் போது இரு சக்கர வாகனத்தில் ஏற்படும் சேதங்கள்.
 • போர் அல்லது அணுசக்தி அபாயங்கள் காரணமாக ஏற்படும் சேதங்கள்.
 • சட்டவிரோத செயல்களைச் செய்யும்போது ஏற்படும் எந்தவொரு தற்செயலான சேதமும்.
 • தொடர்ச்சியான பயன்பாட்டின் காரணமாக ஏற்படும் இயந்திர தேய்மானங்களுக்கான இயந்திர சர்வீஸ் செலவுகள் இந்த திட்டத்தின் கீழ் இல்லை.

உங்கள் டூவீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை எவ்வாறு புதுப்பிப்பது?

உங்கள் டூவீலர் இன்சூரன்ஸை உங்கள் வீட்டில் வசதியாக அமர்ந்து கொண்டே எளிதாக புதுப்பிக்க முடியும் என்பதற்கு பாலிசிஎக்ஸ்.காம் உறுதி அளிக்கிறது. அதற்கான செயல்முறைக்கு செல்லலாம் வாங்க. 

 • இந்தப் பக்கத்தின் மேலே உள்ள " டூவீலர் மேற்கோள்களை ஒப்பீடு " எனும் பகுதியைப் பார்வையிடவும்.
 • உங்கள் இருசக்கர வாகனத்தின் விவரங்களைச் சமர்ப்பித்து, " தொடரவும் " என்பதைக் கிளிக் செய்க. புதுப்பித்தல் எனும் டப்பைக் கிளிக் செய்து, உங்களிடம் இருக்கும் திட்டம் காலாவதியாவது தொடர்பான விவரங்களை வழங்குவதை உறுதிசெய்க.
 • தேவையான விவரங்களை பூர்த்தி செய்து " தொடரவும் " என்பதைக் கிளிக் செய்க.
 • நீங்கள் புதுப்பிக்க விரும்பும் திட்டத்தைத் தேர்வுசெய்க.
 • கட்டணம் செலுத்துங்கள்.
 • உங்கள் பாலிசி ஆவணம்(களை) இமெயில் மூலம் பெறுவீர்கள்.
 • ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், எங்கள் நிபுணர்களின் குழுவுடன் தொடர்புக் கொள்ளலாம்.

டூவீலர் இன்சூரன்ஸின் க்ளைம் எவ்வாறு தாக்கல் செய்வது?

 1. கட்டணமில்லா எண்ணில் உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அழைத்து உங்கள் பாலிசி எண், விபத்து நடந்த தேதி மற்றும் நேரம் போன்ற தேவையான விவரங்களை சமர்ப்பிக்கவும். ஒருவேளை வாகன மோதல்கள் ஏற்பட்டால், மோதிய வாகனத்தின் எண்ணைக் கவனித்து குறித்துக் கொள்ளவும்.
 2. விபத்துக்கள் மற்றும் திருட்டுகள் குறித்து போலீசில் புகார் செய்ய வேண்டும். அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து எஃப்.ஐ.ஆரின் நகலை வைத்திருங்கள்.
 3. விபத்து நடந்த இடத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள உங்களுக்கு ஒரு ஆய்வு அதிகாரி நியமிக்கப்படலாம். ஒரு ஆய்வு அதிகாரி நியமிக்கப்படவில்லை என்றால், இரு சக்கர வாகனத்தைப் பழுதுபார்க்க தொடரவும்.
 4. நீங்கள் உங்கள் வாகனத்தை நெட்வொர்க் கேரேஜ் அல்லது வேறு பழுதுபார்க்கும் நிலையத்திற்கு கொண்டு செல்லலாம்.
 5. நெட்வொர்க் கேரேஜ் விசயத்தில், இரு சக்கர வாகனத்தை பழுதுபார்ப்பதற்கு பணமில்லா க்ளைமை நீங்கள் தாக்கல் செய்யலாம். இந்த தொகையானது கேரேஜ் மேற்பார்வையாளருக்கும், உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் இடையில் நேரடியாக தீர்க்கப்படுகிறது.
 6. நெட்வொர்க் அல்லாத கேரேஜில் உங்கள் வாகனம் பழுதுபார்க்கப்பட்டால், உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் க்ளைம் படிவத்துடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் நிறுவனம் தொகையை திருப்பிச் செலுத்தலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில், நிறுவனம் ஆனது நீங்கள் அளித்த விவரங்களை ஆய்வு செய்யும். ஒப்புதலுக்குப் பிறகு, நிறுவனம் திருப்பிச் செலுத்தும் தொகை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் NEFT மூலம் பகிர்ந்து கொள்ளும்.

21-07-2020 - ல் தரவு புதுப்பிக்கப்பட்டது