பஜாஜ் அலையன்ஸ் டூவீலர் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

இன்றைய இன்சூரன்ஸ் துறையின் போக்குடனான ஒத்திசைவில், பஜாஜ் அலையன்ஸ் ஜி.ஐ.சி ஆனது பங்கு முதலீட்டில் 76:24 என்ற விகித்தின் முறையே இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடையே ஒரு கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இதில் இந்திய சக நிறுவனமாக பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த பஜாஜ் ஃபின்சேர்வ் லிமிடெட் உள்ளது. வெளிநாட்டு சக நிறுவனமாக முன்னணியில் இருக்கும் உலகளாவிய இன்சூரன்ஸ் நிறுவனமான அலையன்ஸ் எஸ்இ இணைந்துள்ளது.

2001 ஆம் ஆண்டில் கூட்டு முயற்சியில் இருக்கும் பொது காப்பீட்டு நிறுவனம் என ஐ.ஆர்.டி.ஏவின் பதிவு சான்றிதழை பெற்றது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட மூலதனமாக ரூ. 100 கோடியை செலுத்தி அதன் வலிமையான நிதி அடித்தளத்தை அமைத்து உள்ளது.

பஜாஜ் அலையன்ஸ் ஜி.ஐ.சி-யின் பினான்ஸ் செயல்திறன்

சமீபத்திய நிதித் தரவுகளின் படி(நிதியாண்டு 2015-2016), பஜாஜ் அலையன்ஸ் ஜி.ஐ.சி தொடர்ச்சியாக தன் நிதி சார்ந்த தைரியத்தை நிரூபித்து வருகிறது. இதில் பொது காப்பீட்டு நிறுவனத்தின் நிதியியல் சாராம்சமும் அடங்கும்.

 1. பிபீடி ரூபாய் 540 கோடி
 2. பிஏடி ரூபாய் 5901 கோடி
 3. மொத்த எழுத்து பிரீமியம்(GWP) 5901 கோடி
 4. கடந்த ஆண்டில் GWP வளர்ச்சி 11.3%.

நிறுவனமானது வெளிப்படையான அறிக்கை முறையை நடைமுறைப்படுத்தி வருகிறது மற்றும் பார்வையாளர்கள் எளிதாக அணுகக்கூடிய முறையில் அவ்வபோது நிதியியல் மற்றும் வருடாந்திர அறிக்கைகளை தன் ஆன்லைன் இணையதளத்தில் வெளியிடுகிறது.

பஜாஜ் அலையன்ஸ் ஜி.ஐ.சி-யின் சாதனைகள்

பஜாஜ் அலையன்ஸ் ஜி.ஐ.சி, வாடிக்கையாளர்கள் நோக்கிய உயர்ந்த பொறுப்பிற்கு மற்றும் சரியான நேரத்திற்கு தொகையை வழங்குதல் போன்றவற்றால் அங்கீகாரம் பெற்றிருக்கிறது. ஆயினும், தன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட விருதுகளின் பட்டியலின் கீழே எண்ணற்ற விருதுகள் மற்றும் பட்டங்களை கொண்டிருக்கிறது. சமீபத்திய மற்றும் முக்கியமானதை உள்ளடக்கியது :

 1. ஐ.சி.ஆர்.ஏவிடம் இருந்து வரிசையாக பத்து ஆண்டுகள் iAAA  மதிப்பீடு பெறப்பட்டது.
 2. அதிக க்ளைம்ஸ் செட்டில்மெண்ட் சாதனையில் க்ளைம்ஸ் ஆசிய விருதினை மூன்று முறை வரிசையாக வென்றது.
 3. எகோனோமிக் டைம்ஸின் பேஸ்ட் கார்ப்பரேட் பிராண்ட் விருதினை 2016 ஆம் ஆண்டில் வென்றது.
 4. இன்சூரன்ஸ் வல்லெட் இனோவேடிவ் அஃப் அறிமுகப்படுத்தியதில் சிலிகான் வாலி பிசினஸ் விருதினை வென்றது.
 5. 2016-ல் ஏஓஎன் பேஸ்ட் எம்ப்லாயர் விருதிற்கு அங்கீகரிக்கப்பட்டது. 

டூவீலர் இன்சூரன்ஸ் எதற்காக எடுக்க வேண்டும்?

நீங்கள் ஒரு டூவீலரை வாங்கிய பிறகு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், கண்டிப்பாக மூன்றாம் தரப்பு(தர்டு பார்ட்டி) இன்சூரன்ஸ் எடுக்க வேண்டி இருக்கும். உங்களின் டூவீலர் மூலம் விபத்தில் வேறொரு நபர் காயங்களுடன் பாதிக்கப்பட்டு இருந்தால், விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளின் படி இன்சூரன்ஸ் தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்று பாதிக்கப்பட்டவரின் சிகிச்சைக்கு அல்லது பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடாக வழங்கலாம். இது மிகவும் நல்லதே. ஆனால், நீங்கள் அல்லது உங்களின் ஓட்டுனர் காயமடைந்தால் அல்லது உங்களின் வாகனம் சேதமடைந்தால் என்ன நடக்கும் ? தனிப்பட்ட மூன்றாம் தரப்பு காப்பீடு முழுமையாக் உள்ளடக்கி இருக்காது. ஆகையால், இதற்கு சிறந்த தீர்வு ஒன்று மூன்றாம் தரப்பையும்(தர்டு பார்ட்டி)  உள்ளடக்கிய மொத்த டூவீலர் இன்சூரன்ஸ் எடுப்பதாகும்.

பஜாஜ் அலையன்ஸ் டூவீலர் இன்சூரன்ஸ் கீழ் எதுவெல்லாம் உள்ளடங்கும் ?

பஜாஜ் டூவீலர் இன்சூரன்ஸ் உடன் நீங்கள் ஒரு முழு அமைதியான மனநிலையுடன் விரிவான உறையை நீங்கள் பெறுவீர்கள். பஜாஜ் டூவீலர் இன்சூரன்ஸ் உள்ளடக்கி முக்கிய அம்சங்கள் :

 1. இரு சக்கர வாகனம் சேதம்
 2. தனிப்பட்ட விபத்து கவர்
 3. தர்டு பார்ட்டி லியபிலிட்டி (பின் இருக்கையில் இருந்தவருக்கும் அடங்கும்)
 4. கூடுதலான கவர்  

மூன்றாம் தரப்பு பொறுப்பு(தர்டு பார்ட்டி லியபிலிட்டி) 

பஜாஜ் அலையன்ஸ் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி மோட்டார் வாகன சட்ட நிபந்தனை உடன் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் காயங்கள்/இறப்பு/இயலாமை/பொருள் சேதம் ஆகியவற்றிற்க்கான முன் ஏற்பாடுகளை கொண்டிருக்கிறது. மூன்றாம் தரப்பினரில் வாகனத்தில் பின் அமர்ந்து இருந்தவரும் அடங்குவார்.

தனிப்பட்ட விபத்து உறை

பஜாஜ் அலையன்ஸ் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி ஆனது காப்பீடு செய்யப்பட்ட வாகனம் விபத்துக்குள்ளாகி உரிமையாளர்/ஓட்டுனர் இறந்தால்/இயலாமை ஆகினால் அதற்கான இழப்பீடு தொகைக்கான உறைக்கு ஏற்பாடுகளை கொண்டிருக்கிறது. இந்த பாலிசி 100% இழப்பீடுகளை இறந்தவர் அல்லது நிரந்தர இயலாமை நிலைக்கு சென்றவருக்கு வழங்குகிறது.

கூடுதல் உறை

பஜாஜ் அலையன்ஸ் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி சில எதிர்பாராத சூழ்நிலைக்கும் உள்ளடக்கி கொடுக்கிறது. அதில் அடங்கியவை பின்வருமாறு :

 1. சாலையோர பிரச்சனைகளுக்கான உதவி(பேட்டரி, டயர் சேதம், சாவி தொலைந்தால்)
 2. டோவிங் அசிஸ்டெண்ட்
 3. சட்ட உதவி
 4. இட வசதி உதவி
 5. எரிபொருள் மற்றும் பழுது உதவி
 6. மாற்று போக்குவரத்து உதவி 

பஜாஜ் அலையன்ஸ் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி கீழ் விலக்குகள்

பஜாஜ் அலையன்ஸ் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் க்ளைம் தொகை எழுப்பப்படுவதில் மதிப்பு அளிக்கப்படாமல் போகலாம். கீழ்க்கண்ட சூழ்நிலைகள் இதில் அடங்கும்.

 1. சுய காயம் அல்லது தீங்கு
 2. போர் செயல்கள்
 3. சட்டமீறிய அல்லது சட்ட விரோதமான செயல்கள்
 4. அணு ஆயுதங்கள் காரணங்கள் மூலம் சேதம்
 5. அசாதாரண அபாயங்களில் ஈடுபடுதல்
 6. பாலிசியின் புவியியல் பகுதிக்கு வெளியே ஏற்படும் விபத்துக்கள்
 7. மயக்க நிலையின் கீழ் ஓட்டுவது
 8. தகுந்த ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருந்தால்

பஜாஜ் அலையன்ஸ் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் அம்சங்கள்

பஜாஜ் அலையன்ஸ் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி சில எதிர்பாராத சூழ்நிலைக்கும் உள்ளடக்கி கொடுக்கிறது. அதில் அடங்கியவை பின்வருமாறு : 

 • மொத்த இரு சக்கர/பைக் இன்சூரன்ஸ் ப்ளான்
 • குறுகிய கால மற்றும் நீண்ட கால பாலிசிகள்
 • இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பாலிசி உடன்படிக்கை
 • மதிப்பிறக்கம் கிடைப்பது இல்லை(குறுகிய கால பாலிசி கீழ்)
 • ஐஆர்டிஏ பரிந்துரைப்படி கட்டணங்கள்
 • நோ க்ளைம் போனஸ்(NCB) நன்மைகள்
 • க்ளைம் NCB-ஐ ரத்து செய்யாது.
 • இன்சூரன்ஸ் பாலிசி மற்றொரு பாலிசிதாரிடம் இருந்து மாற்றிக் கொள்ளலாம்
 • பாலிசி உடன் NCB-ன் 50% தொகையையும் இடமாற்றம் செய்ய முடியும் 

பஜாஜ் அலையன்ஸ் டூவீலர் இன்சூரன்ஸ் எதற்காக வாங்கலாம்?

பஜாஜ் அலையன்ஸ் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி பின்வருவற்றை அடிப்படையாகக் கொண்டு பலன் தருவதாக கருதி வாங்கலாம். அவை பின்வருமாறு : 

 • ஐ.ஆர்.டி.ஏ பதிவு செய்த ஜென்ரல் இன்சூரன்ஸ் நிறுவனம்
 • மதிப்புமிக்க குழுக்களின் மூலம் தர சான்றிதழ்
 • நிலைத்தன்மை, வாடிக்கையாளர்களின் நோக்குநிலை மற்றும் செயல்திறனுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது
 • உச்சபட்ச க்ளைம் செட்டில்மெண்ட் விகிதம்
 • நிதிநிலையில் வலிமையான லாபகர நிறுவனம்
 • நிறுவனத்தின் இணையதளத்தில் வெளிப்படையாக வெளிகாட்டுதல்
 • எளிதான ஆன்லைன் செயல்முறைகள்
 • கடிகார சுழற்சியில் வாடிக்கையாளர்கள் உதவி
 • உதவியான மற்றும் தகவல் அளிக்கும் ஊழியர்கள் மற்றும் ஆலோசகர்கள்

பஜாஜ் அலையன்ஸ் டூவீலர் இன்சூரன்ஸ் க்ளைம் பதிவு செயல்முறை 

உங்களின் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி மூலம் இன்சூரன்ஸ் செய்து இருந்தால், பாலிசியில் உள்ளடங்கிய சூழ்நிலைகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் உங்களால் க்ளைம் தொகையை பெற முயற்சிக்க முடியும். அதுபோன்ற நிலைகளில், எந்தவித தாமதம் இன்றியும் உங்களின் பாலிசி ஆவணங்களில் இருக்கும் வாடிக்கையாளர் உதவி எண்ணிற்கு அழைக்கவும் மற்றும் நடந்த நிகழ்வு தொடர்பாக தெரிவிக்கவும்.

ஒருவேளை நீங்கள் அல்லது மூன்றாம் தரப்பினர்(தர்டு பார்ட்டி) காயப்பட்டால் உடனடியாக சுயமாக அல்லது பிற உதவியுடன் கவனித்துக் கொள்ளவும் மற்றும் மருத்துவ உதவிகளை பெற வேண்டும். வாகனம் சேதமடைந்து இருந்தால், தாமதம் செய்யாமல் அருகில் இருக்கும் பழுதுபார்க்கும் கடை அல்லது கேரேஜ்-ஐ நாடிச் செல்லவும். உங்களின் பாலிசி கூடுதல் இணைப்புகளை உள்ளடக்கி இருந்தால், உங்களின் காப்பீட்டாளரிடம் இருந்து தொடர்புடைய கூடுதல் உதவிகளை பெறலாம். இந்த சம்பவம் காவல்துறை அறிக்கைக்கு தேவைப்பட்டால், தாமதம் இன்றி உடனடியாக அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து கொள்ளலாம்.

தயாராக இருப்பது

துரதிஷ்டம் நம்மை தாக்கும் பொழுது நமக்கு தெரிவதில்லை. அதேபோன்று, துரதிர்ஷ்டவசமாக நடக்க இருப்பதை தடுக்கவோ அல்லது நிறுத்தவோ நம்மால் முடியாது. எனினும், துரதிர்ஷ்டவசமாக நடக்கும் நிகழ்வுகளின் விளைவுகளை குறைப்பதற்கு தயாராக இருப்பதன் மூலம் நீண்ட ஆயுளை பெறுகிறோம். எந்தவித ஆபத்தான நிலையிலும் உடனடி உதவி தேவைப்படும் பொழுது கீழே கொடுக்கப்பட்டதை தயாராக வைத்து இருங்கள்.

 1. சுய அடையாள ஆவணங்கள்
 2. ஓட்டுனர் உரிமம்
 3. இன்சூரன்ஸ் பாலிசியின் நகல்
 4. நிகழ்வு நடந்த இடம், நேரம் மற்றும் நாள்
 5. விபத்து குறித்து விளக்கம்
 6. எஃப்.ஐ.ஆர்-ன் நகல்  
 7. எஞ்சின் மற்றும் சேசிஸ் எண்
 8. வாகன மீட்டரின் அளவீடுகள்
 9. பழுதடைந்த வாகனத்தின் ஆய்வு விலாசம் 

ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் க்ளைம் வைத்து இருக்கும் பொழுது, க்ளைம் படிவம் அல்லது விண்ணப்பம் உடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் பில்கள் உங்களுக்கு துணையாக தேவைப்படும். அவை உங்களின் காப்பீட்டாளரின் மூலம் சரிபார்க்கப்படும். வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்ட பிறகு குறிப்பிட்ட காலத்திற்குள் க்ளைம் தொகை செலுத்தப்படும்.

பஜாஜ் அலையன்ஸ் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியத்தை கணக்கிடுதல்

பஜாஜ் அலையன்ஸ் இணையதளத்தில் இருந்து உங்களின் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியம் விலைக் கூறலை பெறுவது மிகவும் எளிது. பஜாஜ் அலையன்ஸ் இணையதளத்திற்கு செல்லவும், பின்னர் அடுத்த பக்கமாக மோட்டார் இன்சூரன்ஸ், டூவீலர் இன்சூரன்ஸ் மற்றும் பிரீமியம் கணக்கிடும் டப்-களுக்கு செல்லவும். உங்களின் பிரீமியம் மேற்கோள் முன்பு வரும் படி நிறுவனத்தின் பெயர், பிராண்ட், வகை, மாதிரி, இடம், பதிவு ஆண்டு, மற்றும் தனிப்பட்ட விவரங்கள்(பெயர், செல்போன் எண், ஈமெயில் ஐ.டி) போன்ற விவரங்களை ஒன்றன் பின் ஒன்றாக அளிக்க வேண்டும்.

நீங்கள் ஒரு அடிப்படை மேற்கோளை அடைய முடியும் மற்றும் உங்களுக்கு பாலிசி தொடர்பான விவரங்கள் மற்றும் உங்களுக்கு தேவையான டூவீலர் பாலிசியை தேர்வு செய்வது உதவி செய்ய நீங்கள் அளித்து இருந்த தொடர்பு எண்ணிற்கு இன்சூரன்ஸ் ஊழியர் தொடர்பு கொள்வார்.