பாரதி அக்சா டூவீலர் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

பாரதி அக்சா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆனது 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் பாரதி எண்டர்பிரைசஸ் மற்றும் அக்சா வணிகக் குழுவுக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும். இது பான் இந்தியா இருப்பைக் கொண்டுள்ளது மற்றும் நாடு முழுவதும் 105 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கும், வணிகங்களுக்கும் சேவை செய்கிறது. மோட்டார், ஹெல்த், லைஃப், ட்ராவல் , குடும்பம், சொத்து மற்றும் பயிர் காப்பீட்டைத் தேடும் நபர்களுக்கான இன்சூரன்ஸ் தீர்வுகளின் பரந்த அளவை இந்நிறுவனம் கொண்டுள்ளது.

பாரதி அக்சா டூவீலர் இன்சூரன்ஸ் ஆனது தனிப்பட்ட விபத்துக்கள், மூன்றாம் தரப்பு பொறுப்புகள், இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள் போன்றவற்றிலிருந்து உங்கள் இருசக்கர வாகனத்தைப் பாதுகாக்கும் கேடயம் போல செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பாலிசி புதுப்பித்தலைத் தவிர்க்க லாங் டெர்ம் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளையும் வழங்குகிறது. உங்கள் இருசக்கர வாகனத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் மற்ற உதவிகளுடன் விரைவான க்ளைம் சேவைகளை வழங்குவதாக பாரதி அக்சா உறுதியளிக்கிறது.

சிறப்பம்சங்கள்

26-08-2020 அட்டவணை புதுப்பிக்கப்பட்டது

தலைமையகம்

மும்பை, இந்தியா

செட்டில்மென்ட் செய்யப்பட்ட க்ளைம்களின் எண்ணிக்கை

27 லட்சம்+

இந்தியாவில் உள்ள கிளைகளின் எண்ணிக்கை

135

சமீபத்திய விருதுகள் (2020)

 • இந்த ஆண்டிற்கான சிறந்த க்ளைம் சேவை - இடி நவ் உலக பிஎஃப்எஸ்ஐ காங்கிரஸ் மற்றும் விருதுகளில் பெரியது (தனியார் துறை)

 • அசோசாம் வழங்கிய தொழில்நுட்பத்தின் சிறந்த பயன்பாடு

 • இந்திய காப்பீட்டு உச்சி மாநாடு மற்றும் விருதுகளில் இந்த ஆண்டின் தொழில்நுட்ப முயற்சி

பாரதி அக்சா டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசியை எவ்வாறு புதுப்பிப்பது?

பாரதி அக்சா ஜெனரல் இன்சூரன்ஸ் மூலமாக புதுப்பிக்கவும்

பாரதி அக்சா ஆனது உங்களின் டூவீலர் இன்சூரன்ஸ் புதுப்பிப்பதை எளிதாக்குகிறது. உங்கள் பாலிசியின் புதுப்பித்தல் செயல்முறையைத் தொடரக் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளை தயவுசெய்து பின்பற்றவும் :

 • பாரதி அக்சா ஜெனரல் இன்சூரன்ஸ் உடைய அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 • இணையதள பக்கத்தின் மேலே கொடுக்கப்பட்டுள்ள " புதுப்பித்தல் " டப்பைக் கிளிக் செய்து, " பாரதி அக்சா டூவீலர் இன்சூரன்ஸ் " என்பதைத் தேர்வுசெய்க.
 • " புதுப்பித்தல் " பட்டனைத் தட்டி, உங்கள் பாலிசி எண், வாகனத்தின் பதிவு எண் மற்றும் பாலிசி காலாவதி தேதி போன்ற விவரங்களை அளிக்கவும்.
 • "இப்போது புதுப்பித்தல்" என்பதைக் கிளிக் செய்து உங்கள் பாலிசி விவரங்களைச் சரிபார்க்கவும்.
 • அதைத் தொடரவும் மற்றும் பிரீமியம் செலுத்தவும்.
 • மேற்கண்ட செயல்முறை முடிந்ததும், உங்கள் பாலிசி புதுப்பிக்கப்பட்டு, உங்கள் பதிவு செய்யப்பட்ட இமெயில் ஐடி-க்கு ஆவணத்தின் சாஃப்ட் காப்பி அனுப்பப்படும். செயல்பாட்டின் போது வழங்கப்பட்ட " எனது வாட்ஸ்அப் எண்ணில் பாலிசி விவரங்களைப் பெற விரும்புகிறேன் " என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் எண்ணிலும் இதைப் பெறலாம்.

பாலிசிஎக்ஸ்.காம் மூலமாக புதுப்பிக்கவும்

எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் டூவீலர் இன்சூரன்ஸைப் புதுப்பிக்க பாலிசிஎக்ஸ்.காம் உங்களுக்கு வழிவகைச் செய்கிறது :

 • இந்த பக்கத்தின் மேல் வலது மூலையில் இருக்கும் " மேற்கோள்களைப் பெறுக " என்பதற்கு ஸ்க்ரோல் செய்யவும்.
 • உங்கள் வாகனத்தின் விவரங்களுடன் உங்கள் தனிப்பட்ட தகவலை அளிக்கவும்.
 • " புதுப்பித்தல் " விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, தகவலைச் சமர்ப்பிக்க " தொடரவும் " என்பதை அழுத்தவும்.
 • இங்கு வெவ்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கான மேற்கோள்கள் பக்கத்தைக் காண்பிக்கும். பாரதி அக்சா டூவீலர் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும். கவரேஜ் வகை, டூவீலர் இன்சூரன்ஸ் டெர்ம் மற்றும் ஆட்-ஆன்ஸ் (தேவைப்பட்டால்) ஆகியவற்றைத் தீர்மானிக்கவும்.
 • எந்தவொரு ஆன்லைன் கட்டண முறையிலும் பிரீமியத்தை செலுத்துங்கள், உங்கள் பதிவு செய்யப்பட்ட இமெயில் ஐடியில் உறுதிப்படுத்தல் ரசீதைப் பெறுவீர்கள்.

பாரதி அக்சா டூவீலர் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

க்ளைம் விகிதம்

பாரதி அக்சா ஆனது 75% க்ளைம் விகிதத்தை வைத்திருக்கிறது. இது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மையைக் காட்டுகிறது.

5200+ பணமில்லா கேரேஜ்கள்

பாரதி அக்சா இந்தியா முழுவதும் 5200- க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நெட்வொர்க் கேரேஜ்களுடன் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளது. அங்கு வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை எந்தவொரு பணக் கட்டணமும் இல்லாமல் பழுதுபார்க்க முடியும்.

நோ க்ளைம் போனஸ் (என்சிபி)

பாலிசி ஆண்டில் க்ளைம் தாக்கல் செய்ததற்கு நீங்கள் என்சிபி தள்ளுபடியைப் பெறலாம். இந்த நன்மை ஆனது உங்கள் பிரீமியங்களைக் குறைக்க உதவும் மற்றும் இந்த தள்ளுபடி ஒவ்வொரு ஆண்டும் 50% வரை உயரக்கூடும்.

24/7 நேர உதவி

பாரதி அக்சா உடைய வாடிக்கையாளர் ஆதரவு குழு 24 மணிநேரமும் தயாராக இருக்கிறது. இதன் காரணமாக ஒரு க்ளைம் அல்லது பாலிசி தொடர்பாக வேறு எந்தவொரு ஆதரவையும் பெற தகவல் தொடர்பு ஒரு தடையாக இல்லை.

பாரதி அக்சா டூவீலர் இன்சூரன்ஸின் பிரீமியம் கணக்கீடு

டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியம் ஆனது வாகனம் பதிவு செய்யப்பட்ட மண்டலம், டூவீலரின் எஞ்சின் கியூபிக் திறன், வாகனத்தின் மாடல் மற்றும் வயது, ஐடிவி போன்ற பல காரணிகளின் உதவியுடன் கணக்கிடப்படுகிறது.

வெவ்வேறு பைக் மாடல்களுக்கான சில பிரீமியம் விளக்கப்படங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் நீங்கள் காணலாம்.

26-08-2020 அட்டவணை புதுப்பிக்கப்பட்டது

பைக் வகைகள்

பைக்கின் விலை

ஐடிவி*

பூஜ்ஜிய தேய்மானம் (ஆட்-ஆன்ஸ்) *

மதிப்பிடப்பட்ட பிரீமியம்

ஹோண்டா எஸ்பி 125 டிரம் (124சிசி) 

ரூ.73,452

ரூ.47,412

என்/ஏ

ரூ.3,587

சுசுகி கிக்ஸர் 250 எஸ்டிடீ (249சி.சி) 

ரூ.1,06,000

ரூ.71,005

என்/ஏ

ரூ.6,632

பஜாஜ் சிடி 110 கிக் ஸ்டார்ட் விஎஸ் VI (115சிசி) 

ரூ.46,413

ரூ.21,854

என்/ஏ

ரூ.2,803

ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் 110 செல்ஃப் ஸ்டார்ட் டிரம் பிரேக் (109.2சிசி) 

ரூ.55,837

ரூ.30,149

என்/ஏ

ரூ.4,115

** மதிப்புகள் (டெல்லி) நகரம் மற்றும் பதிவு ஆண்டு (2020) அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன.

பாரதி அக்சா டூவீலர் இன்சூரன்ஸ் கீழ் கூடுதல் இணைப்புகள்(ஆட்-ஆன்ஸ்) கவர்கள் யாவை?

பூஜ்ஜிய தேய்மானம் கவர் : இந்த கவரின் உதவியுடன், உங்கள் பைக்கின் தேய்மானம் செய்யப்பட்ட பாகங்களான ஃபைபர், ரப்பர், பிளாஸ்டிக் போன்றவற்றைப் பழுதுபார்ப்பது/மாற்றுவதற்கான செலவுகளை நீங்கள் செலுத்த தேவையில்லை.

தனிப்பட்ட விபத்து கவர் : விபத்து காரணமாக மரணம் அல்லது இயலாமை ஏற்பட்டால், இந்த ஆட்-ஆன்ஸ் கவர் பாலிசிதாரரின் குடும்பத்திற்கு நிதி இழப்பீடு வழங்கும்.

பாரதி அக்சா டூவீலர் இன்சூரன்ஸின் க்ளைம் செட்டில்மென்ட் செயல்முறை என்ன?

பணமில்லா க்ளைம் செயல்முறை

 • உங்கள் க்ளைமைப் பதிவு செய்யுங்கள் - நிறுவனத்தின் கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம் சம்பவம் குறித்த விவரங்களை பாரதி அக்சாவிடம் தெரிவிக்கவும். நீங்கள் ஒரு இமெயில் அனுப்பலாம் அல்லது ஆன்லைன் மூலம் செல்லலாம். ஆன்லைனில் க்ளைம் தாக்கல் செய்ய உங்கள் " டூவீலரில் பாலிசி எண் " மற்றும் " காலாவதி தேதி " ஆகியவற்றை அளிக்க வேண்டும். உங்கள் பதிவுக்கான உறுதிப்பாடாக 1 மணி நேரத்திற்குள் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.
 • வாகனத்தின் பழுது - உங்கள் வாகனத்தை பாரதி அக்சாவின் நெட்வொர்க் கேரேஜுக்கு எடுத்துச் செல்லுங்கள். அங்கு நிறுவனத்தின் தரப்பில் வாகனத்தின் ஆய்வின் நடைமுறைகளை எடுத்துச் செல்லவும், இழப்பு/சேதத்தை மதிப்பீடு செய்யவும் ஒரு ஆய்வாளரை அனுப்பும்.
 • ஆவண சமர்ப்பிப்பு - நிர்வாகி தரப்பில் சம்பவம் குறித்து ஒரு சுருக்கமான அறிக்கையைத் தயாரித்து, பிற குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளைத் தொடர தேவையான ஆவணங்களை சேகரிப்பார். அந்த அறிக்கை நிர்வாகியால் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்படும்.
 • க்ளைம்கான ஒப்புதல் - அறிக்கை மற்றும் தேவையான ஆவணங்களைப் பெற்றதும், நிறுவனம் அவற்றைச் சரிபார்த்து, க்ளைம் தொகையை நேரடியாக கேரேஜுடன் தீர்த்து வைக்கும். அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் மூலம் க்ளைம் செட்டில்மென்ட் குறித்து உங்களுக்கு அறிவிக்கப்படும்.

திருப்பிச் செலுத்துதல் க்ளைம் செயல்முறை

 • மேலே குறிப்பிட்டுள்ள அதே செயல்முறையைப் பின்பற்றுவதன் மூலம் திருப்பிச் செலுத்தும் க்ளை மிற்கு பதிவுசெய்க (நெட்வொர்க் அல்லாத கேரேஜிலிருந்து உங்கள் டூவீலர் சரிசெய்யப்பட்ட பிறகு).
 • இன்சூரன்ஸ் வழங்குநர் க்ளைம் கோரிக்கையை விசாரித்து மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்கிறார்.
 • சரிபார்ப்பு செயல்முறை வெற்றிகரமாக முடிந்ததும், ஏற்றுக்கொள்ளப்பட்ட தொகையை நேரடியாக பைக் உரிமையாளரின் கணக்கில் செலுத்துவதன் மூலம் க்ளைம் தீர்க்கப்படும்.

** மூன்றாம் தரப்பு பொறுப்புகள் ஏற்பட்டால் மூன்றாம் தரப்பு நபரின் விவரங்களைக் குறித்துக் கொள்ளுங்கள், திருட்டு மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டால் உள்ளூர் போலீசில் எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்வதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

க்ளைம் செயல்முறைக்கு தேவையான ஆவணங்கள்

 • சுய கையொப்பமிட்ட பைக்கின் பதிவுச் சான்றிதழ்.
 • பாலிசி ஆவணங்கள்.
 • ஓட்டுனர் உரிமம்.
 • அசல் பில்கள் மற்றும் கேரேஜிலிருந்து பழுதுபார்க்கும் ரசீதுகள்.
 • க்ளைம் பதிவு படிவம்.
 • எஃப்.ஐ.ஆரின் நகல் (ஏதேனும் இருந்தால்).
 • விபத்தின் புகைப்படங்கள் (ஏதேனும் இருந்தால்).
 • பழுதுபார்ப்பு பில்கள் / வாகனத்தின் விலைப்பட்டியல்.

தொடர்பு விபரங்கள்

பாரதி அக்சா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி 

பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி:

பாரதி அக்சா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், ஸ்பெக்ட்ரம் டவர்ஸ், 3வது மாடி, மலாட் லிங்க் ரோடு, மலாட் (மேற்கு), மும்பை- 400064.

தொலைபேசி (கட்டணமில்லாது): 1800-103-2292 (பாலிசி வாங்க, புதுப்பிக்க மற்றும் க்ளைம் நோக்கங்களுக்காக)

டெக்ஸ்ட் மெஜேஜ்: <CLAIM> ஐ 5667700க்கு எஸ்எம்எஸ் செய்யுங்கள் (க்ளைமுக்கு மட்டும்)

இமெயில்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. (உங்கள் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி தொடர்பான ஏதேனும் கேள்விகள் / குறைகளுக்கு)

வாட்ஸ்அப்: தொந்தரவு இல்லாத சேவைகளுக்கு " 85058 8311 " என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும்.

ஆன்லைனில் சாட்: பாரதி அக்சாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் உங்கள் மெய்நிகர் உதவியாளர் " பாகி-ஆர்ஏ " பெறலாம்.

பாலிசிஎக்ஸ்.காம்

பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி:

பாலிசிஎக்ஸ்.காம் இன்சூரன்ஸ் வெப் அக்ரிகேட்டர் பிரைவேட் லிமிடெட், 1வது மாடி, லேண்ட்மார்க் டவர், ப்ளாட் எண்-2, சவுத்சிட்டி-1, சி-113, அசோக் மார்க், பிரிவு-41, குருகிராம் - ஹரியானா - 122001 இந்தியா.

இமெயில் ஐடி : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. (உதவி & புகார்களுக்கு)

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. (எந்த விற்பனை தொடர்பான சந்தேங்களுக்கு)

கட்டணமில்லா எண்: 1800-4200-269

26-08-2020 புதுப்பிக்கப்பட்டதுு