ஃபியூச்சர் ஜெனரலி டூவீலர் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

அனைத்து இருசக்கர வாகன உரிமையாளர்களும் தங்களின் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்பதை இந்திய மோட்டார் வாகன சட்டம் கட்டாயமாக்குகிறது. இது இந்திய சாலைகளில் பயணம் செய்வதற்கு சரியான டூவீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை கொண்டிருக்க வேண்டும் என கட்டாயமாக்கியது.

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கான இக்கோரிக்கை கடந்த பத்தாண்டுகளில் செங்குத்தாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்திய தேசத்தில் இருக்கும் மக்கள் தொகையில் பெரும் பகுதியான நடுத்தர மக்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர் வர்க்க குடிமக்கள் ஆகியோர் தனிப்பட்ட போக்குவரத்திற்கு இரு சக்கர வாகனங்களையே பெரிதும் நம்பியுள்ளனர். எண்ணற்ற வேலைகளுக்கான வாய்ப்புகளில் மோட்டார் பைக்களின் பங்கு அதிகம் இருப்பதன் விளைவால் மோட்டார் பைக்குகளின் விற்பனை வளர்ச்சி அதிகரித்து உள்ளது.

ஃபியூச்சர் ஜெனரலி இன்சூரன்ஸ் ஆனது மூன்று முன்னணி நிறுவனங்களான ஃபியூச்சர் குரூப், ஜெனரலி குரூப், இண்டஸ்டிரியல் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் ஆகியவற்றுடன் கூட்டு முயற்சியாகும். 2007-ம் ஆண்டில் இணைக்கப்பட்ட இந்நிறுவனம் விரைவான உத்வேகத்தை அதிகரித்துள்ளது. மேலும், பல்வேறு நாடுகளில் தன் நிறுவனத்தின் கிளை வேரினை 80 இடங்களில் பரப்பியது.

முன்னணி நிறுவனங்களின் மூன்று மடங்கு அதீத ஆற்றலால், ஃபியூச்சர் ஜெனரலி இன்சூரன்ஸ் ஆல் பெரிய எண்ணிக்கையிலான மக்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் திட்டங்களை வழங்க முடிந்தது. 2017-ம் ஆண்டின் பிப்ரவரி 28-ம் தேதி நிலவரப்படி அவர்களின் சொத்து மதிப்பு ரூபாய் 2,793 கோடியாகும்.

எதற்காக ஃபியூச்சர் ஜெனரலி டூவீலர் இன்சூரன்ஸ்? 

2007 செப்டம்பர் வரையிலான தகவல்களின்படி ஃபியூச்சர் ஜெனரலி இன்சூரன்ஸ் 11 லட்சத்திற்கும் அதிகமான பாலிசிகளை வழங்கி உள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட, அமைப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என ஒவ்வொருவரின் குறிப்பிட்ட தேவைக்கான பாலிசிகளையும் மற்றும் ப்ளான்களையும் உருவாக்கியுள்ளனர்.

இவர்களின் நோக்கம் ஆர்வத்துடன் பயணிக்க வைத்து குடிமக்களின் ஆயுளை அதிகரிக்க மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தின் பாதுகாப்பை தீவிரமாக்குவதாகும். இந்த நிறுவனத்தின் பாலிசிகள் வெளிப்படையானவை, அணுகக்கூடியவை மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருத்தமான மற்றும் மிகவும் ஏற்ற இன்சூரன்ஸ் தீர்வுகளை வழங்குகின்றனர்.

மதிப்புகள்

 • உடனடியாக அனைத்து வாக்குறுதிகளையும் விநியோகிக்கும்.
 • மக்களை மதிக்கும் மற்றும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும்
 • சமூகத்திற்கு பங்களிக்கும்
 • நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளர்களிடமும் திறந்த மற்றும் வெளிப்படையாக தொடர்புகளை கொண்டிருக்கும்.

டூவீலர் இன்சூரன்ஸின் ஏபிசி விவரங்கள் 

டூவீலர் இன்சூரன்ஸ் ஆனது கார் இன்சூரன்ஸ் உடன் மிகவும் ஒத்ததாக இருக்கிறது. மோட்டார் வாகன சட்டம் 1988 ஆனது அனைத்து இரு சக்கர வாகன உரிமையாளருக்கும் பாதுகாப்பான ஒரு இன்சூரன்ஸ் திட்டத்தினை கட்டாயமாக்குகிறது. மேலும், உரிமையாளரின் விவேகத்தின்  ஒரு பகுதியாக வாகனத்திற்கு செயல்படும் இன்சூரன்ஸ் திட்டத்துடனான பாதுகாப்பையும் முத்திரை இடுகிறது.

ஃபியூச்சர் ஜெனரலி டூவீலர் இன்சூரன்ஸ் பெறுவதன் மூலம், அனைத்து நேரத்திலும் உங்களின் இருசக்கர வாகனத்தின் பாதுகாப்பை உறுதி செய்யலாம். தனிப்பட்ட விபத்துகள், தானாக-தீப்பற்றினால், இயற்கை பேராபத்து உள்ளிட்ட பல்வேறு எதிர்பாராத நிகழ்வுகளின் போதும் உங்களின் இன்சூரன்ஸ் திட்டத்தில் இருந்து தேவையான தொகையை பெறலாம். இது மட்டுமின்றி, இந்த டூவீலர் இன்சூரன்ஸ் ப்ளான் பழுதுபார்ப்பதற்கு தேவையான தொகை, சேதம், இழப்பீடுகள் என பலவற்றையும் உள்ளடக்கி உள்ளது.

உங்களுடைய இன்சூரன்ஸ் நிறுவனம் வாகனங்களின் எந்தவித பழுதுப்பார்ப்பு மற்றும் சர்வீஸ் வேலைகளுக்கான கேரேஜ்களுக்கு நேரடியாக தொகையை செலுத்துவதற்கும் பொறுப்புகளை கொண்டிருக்கிறது. இந்த ஃபியூச்சர் ஜெனரலி டூவீலர் இன்சூரன்ஸ் ஆனது பைக்ஸ், ஸ்கூட்டர்ஸ், ஸ்கூட்டிஸ் மற்றும் மலை பைக்குகள் உள்ளிட்ட பலவற்றையும் உள்ளடக்கி உள்ளது.

டெக்னிக்கல் டெம்ஸ்

டூவீலர் இன்சூரன்ஸ் உடன் தொடர்புடைய சில டெக்னிக்கல் டெம்ஸ்களை பாலிசிதாரர் நன்கு அறிந்து இருக்க வேண்டியது அவசியம்:

மதிப்புகள்

 • ஐடிவி அல்லது இன்சூரன்ஸ் விலை மதிப்பு : பாலிசிதாரர் மூலம் செலுத்தப்படும் நிலையான தொகை எவ்வித மாற்றமும் இன்றி முழுமையான பாலிசி காலத்தில் தொடரும்.
 • என்.சி.பி அல்லது நோ களிம் போனஸ் : ஒவ்வொரு ஆண்டிலும் பாலிசிதாரர் தன் பாலிசியில் நோ க்ளைம் உருவாக்கும் பொழுது, தன்னுடைய பாலிசியின் புதுப்பித்தலின் போது 20-50% அளவிலான சிறப்பு தள்ளுபடியை பெற்று மகிழ்வார். க்ளைம் இல்லாத ஒவ்வொரு ஆண்டிலும் சேர்க்கப்படும் ஒரு மொத்த போனஸ் ஆகும்.

ஏன் உங்களின் டூவீலர் இன்சூரன்ஸ் செய்யப்பட வேண்டும்?

இந்தியாவில் மக்கள் தொகை மிகப் பெரியது. போக்குவரத்து அதிகம் மற்றும் சாலைகள் குறுகியது. சில நிலைமைகளின் கீழ், மில்லியன் கணக்கான டூவீலர்கள் உள்ளன மற்றும் விபத்துகள் நேரிட வாய்ப்புகள் அதிகம். பாதுகாப்பாக இருக்க, பின்வரும் காரணங்களால் விவேகத்துடன் உங்களின் இருசக்கர வாகனம் இன்ஷூர் செய்யவும்.

 • ஃபியூச்சர் ஜெனரலி டூவீலர் இன்சூரன்ஸ் ஆனது அனைத்து நேரங்களிலும் உங்களின் இரு சக்கர வாகனத்தின் வாழ்நாள் மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கும்.
 • தனிப்பட்ட விபத்துக்கள், திருடப்படுதல், இயற்கை பேராபத்து, சுயமாக-தீப்பற்றல் உள்ளிட்ட பல திடீரென தோன்றும் நிகழ்வுகளில் இருந்து உங்களின் வாகனத்திற்கான பாதுகாப்பை ஒரு செயல்படும் காப்பீடு ஆனது உறுதி செய்கிறது.
 • மூன்றாம் தரப்பு பொறுப்பு ஏற்பாடுகளின் கீழ், பாலிசிதாரர் தன்னை விபத்துக்களின் சூழ்நிலையில் இருந்தும் கூட காத்துக் கொள்கிறார்.
 • உங்களின் இரு சக்கர வாகன பிரீமியம் ப்ளான் ஆனது பழுதுபார்க்கும் மற்றும் சர்வீஸ்க்கான தொகையையும் உள்ளடக்கும்.
 • பழுதுபார்க்கும் அமைப்பிடங்களில், நீங்கள் காப்பீட்டாளர் மூலம் நேரடியாக பணத்தை செலுத்துவதன் மூலம், பணமின்றி செல்லலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

பேஸ்ட் டீல்களை கண்டுபிடிக்கவும்

சந்தை மிகையாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்களின் இரு சக்கர வாகனத்திற்கான சரியான ஒப்பந்தங்களை தேர்வு செய்வதில் அச்சறுத்தலாக இருக்க வாய்ப்புண்டு. இருப்பினும், இன்டர்நெட் கொண்டிருக்கும் கடல் போல் தகவல்களில் இருந்து  பிரீமியம் விலை, பாலிசி வேறுபாடுகள், தகுதிகள் என உங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களை எடுத்துக் கொள்ளலாம். இந்த ஆராய்ச்சி வழியாக அனைத்து முக்கிய தகவல்களையும் பெறலாம் மற்றும் உங்கள் வாகனத்திற்கு சரியாக பொருந்தும் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்யலாம்.

ஒப்பிடுதல் முக்கியம்

புத்திசாலியாக இருங்கள் மற்றும் ஆன்லைன் வழங்கும் இலவச இன்சூரன்ஸ் கருத்துகளின் முழு நன்மைகளையும் பெறுங்கள். இது ஒப்பிட மற்றும் பாலிசிகளில் பிரதிபலிக்க உதவலாம் மற்றும் அவை சரியான முடிவுகளை எடுக்க உதவி புரியலாம். இந்த ஃபியூச்சர் ஜெனரலி டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி ஆனது பெரும்பாலான கருத்து தெரிவிக்கும் இணையதளங்களிலும் கடுமையான போட்டியாளராக இருக்கும் மற்றும் பெரும்பாலும் உயர்ந்த தர வரிசையில் இருக்கும். அவர்களின் நேர்மை, வாடிக்கையாளர்கள் சார்ந்த மற்றும் வெளிப்படையான நடைமுறை அவர்களை பெரும்பாலான குடிமக்களிடம் விரும்பக்கூடிய ஒன்றாக மாற்றி உள்ளது.

பிரீமியம் விலை வேறுபாடுகள்

இரு சக்கர வாகனத்தின் பிரீமியம் தொகையானது பல்வேறு காரணிகளை பொறுத்து பல வேறுபாடுகளுக்கு உட்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இரு சக்கர வாகனத்தின் இன்சூரன்ஸ் தேர்வு செய்வதற்கு முன்பு இந்த வேறுபாடுகளை கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

வாகனத்தின் வயது

மிக சமீபத்திய உங்களின் கொள்முதல், உங்களின் பிரீமியம் விலையை குறைக்கச் செய்யும். இது ஆராய்ந்து மற்றும் நன்மைகளை பெறுவதற்கு மிக முக்கிய காரணியாகும். உங்கள் வாகனம் இன்னும் புதிதாக இருக்கும் பொழுது உங்களின் பிரீமியம் விலை குறைவாக இருப்பதால், முதலில் புதிதாக கைக்கு வரும் இரு சக்கர வாகனத்தை வாங்கிய உடனேயே அதனை காப்பீடு செய்வது நல்ல நடவடிக்கை. பெரும்பாலான நிறுவனங்களின் விதிமுறைப்படி, பழைய பைக்குகளை கொண்ட பாலிசிதாரர்கள் உயர்ந்த பிரீமியத்தை செலுத்த வேண்டி இருக்கும்.

இருப்பிடம்

பாலிசிதாரர்களின் இருப்பிடத்தை பொறுத்து, செலுத்தக் கூடிய பிரீமியம் ஏற்ற இறக்கத்திற்கு உட்படுத்தப்படும். மெட்ரோபொலிட்டன் நகரங்களில் வசிப்பவர்கள் மற்றவர்களை விட அதிக பிரீமியம் தொகையை செலுத்துகிறார்கள்.

கியூபிக் கேபாசிட்டி

பைக்கின் அதிக கியூபிக் கேபாசிட்டி இன்சூரன்ஸின் பிரீமியம் விலையை அதிகமாக்கும்.

அன்டி தேப்ட் டிவைஸ்

ஏஆர்ஏஐ அங்கீகாரம் அளிக்கப்பட்ட திருட்டு எதிர்ப்பு சாதனத்தை பைக் உரிமையாளர்கள் பொருத்துவதன் மூலம் திருட்டிற்கு எதிரான பாதுகாப்பிற்காக மட்டுமல்லாமல் டூவீலர் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் சிறப்பு தள்ளுபடிகளையும் கூட பெறலாம்.

ஃபியூச்சர் ஜெனரலி டூவீலர் இன்சூரன்ஸ் ப்ளான்ஸ்

நிறுவனங்களின் மோட்டார் திட்டங்கள் கூட உண்மையான டூவீலர் இன்சூரன்ஸ் திட்டங்களை கொண்டிருக்கிறது. இதனால், மூன்று விதமான இன்சூரன்ஸ் பாலிசிகள் ஃபியூச்சர் ஜெனரலி டூவீலர் இன்சூரன்ஸ் திட்டங்கள் மூலம் வழங்கப்படுகிறது.

மோட்டார் பாதுகாப்பு- டூவீலர் இன்சூரன்ஸ்

இதுபு திய இரு சக்கர வாகனம் அல்லது மற்றொரு பாலிசிதாரரிடம் இருந்து புதுப்பித்தல் ஆகியவற்றை பெறக்கூடிய ஓர் முழுமையான தொகுப்பாகும். மோட்டார் பாதுகாப்பு இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பாலிசிதாரர் தன் வாகனத்தை இயற்கையான மற்றும் மனிதர் உருவாக்கும் திடீரென தோன்றும் சூழ்நிலைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இயற்கை பேராபத்துகள், வாகன திருட்டு, தானாக-தீப்பற்றி எறிதல், தீ உள்ளிட்டவையும் இந்த திட்டத்தின் கீழ் உள்ளடங்கும். இந்த மோட்டார் பாதுகாப்பு திட்டம் கூடுதலாக பழுதுபார்த்தல் மற்றும் சர்வீஸ் தேவைகளையும் உள்ளடக்கியது. கேரேஜ் அமைப்பிடங்களில் நேரடி பணம் செலுத்துதல் உருவாக்கப்படுகிறது.

மோட்டார் பாதுகாப்பு(பொறுப்பு மட்டும்)

இந்திய சட்டப்பிரிவுகள் பொறுப்பான இன்சூரன்ஸ் ஒன்றை கட்டாயமாக்கி பொறுப்பை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பாலிசிதாரர் மூன்றாம் தரப்பினரால் ஏற்படும் சேதத்தை பற்றி அவர்கள் அறிக்கை செய்யும் சூழ்நிலையின் கீழ் காப்பீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் வாகனங்கள் உள்ளடங்காது.

மோட்டார் பாதுகாப்பு புதுபித்தல்

இது நிறுவனத்தில் இருக்கும் பாலிசிதாரர்கள் அவர்களின் இரு சக்கர வாகனத்தின் இன்சூரன்ஸ் ப்ளானை புதுப்பிக்க பயன்படத்தக்கதாக இருக்கும். ஒரு முழுமையான ஆண்டில் க்ளைம் இல்லாமல் செல்லும் வாடிக்கையாளர் ஒரு சிறப்பு “ நோ க்ளைம் போனஸ்”-ஐ அனுபவிக்க முடியும். இந்த போனஸ் திரளாக ஒன்று சேரும் மற்றும் 20%-50% இடையே மாறுபடும்.  

மோட்டார் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விலக்குகள்

டூவீலருக்கான ஃபியூச்சர் ஜெனரலி மோட்டார் இன்சூரன்ஸ் திட்டத்தில் சில சூழ்நிலைகளின் கீழ் க்ளைம் கோர முடியாமல் போகலாம். குடிப்போதையில் வாகனம் ஓட்டுதல், சரியான வாகன ஓட்டுனர் உரிமம் இன்றி ஓட்டுதல், மூன்றாம் தரப்பு ஓட்டுனர் உரிமம் இன்றி இருப்பது உள்ளிட்டவை பாலிசி வழிகாட்டுதலில் சேர்க்கப்படவில்லை. இதைத்தவிர, இந்த டூவீலர் இன்சூரன்ஸ் திட்டத்தில் இயந்திர கோளாறுகள், திறமையின்மை காரணமாக டயர்கள் அல்லது வெளிப்புற பாகங்களில் ஏற்படும் சேதங்கள் போன்றவை உள்ளடங்கவில்லை.

டூவீலர் இன்சுரன்ஸ் தொகையை கோருவதற்கான ஆவணங்கள் 

பாலிசிதாரர்கள் தங்களின் காப்பீட்டு பெறுவதற்கு கீழேக் கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் மற்றும் முறையாக சமர்பிக்க வேண்டும். 

 • காப்பீட்டாளர் வழங்கிய க்ளைம் இமிடேசன் நகல்
 • பூர்த்தி செய்யப்பட்ட க்ளைம் படிவம்
 • ஏற்கனவே உள்ள பாலிசி மற்றும் ப்ளான் ரிசிப்ட்
 • ஓட்டுனர் உரிமம்
 • இருசக்கர வாகன பதிவு சான்றிதழ்(ஆர்.சி புக்)
 • அனைத்து பழுதுபார்த்தலுக்கும் உண்டான பில்கள் மற்றும் பணக் குறிப்புகள்
 • முத்திரையுடன் பழுதுபார்த்தவர் வழங்கிய பழுது மதிப்பீடு
 • சாலை வரி சரிபார்ப்பு சான்றிதழ்
 • முதல் தகவல் அறிக்கை/போலீஸ் பஞ்சனாமா
 • இக்காரணம் தொடர்புடைய வேறு சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள்

ஃபியூச்சர் ஜெனரலி இந்தியா இன்சூரன்ஸ் கோ.லிட் நிறுவனம் நம்பக மதிப்புடையது

ஃபியூச்சர் ஜெனரலி இன்சூரன்ஸ் குரூப் மிகுந்த தொழில்முறை, திறமையான மற்றும் வாடிக்கையாளர்களை சார்ந்ததாகும். அவர்களின் எல்லை 11  லட்சத்திற்கும் அதிகமான பாலிசிகள் மற்றும் இன்சூரன்ஸ் திட்டங்களை உள்ளடக்கியது. இந்த நிறுவனம் நேர்மையான கொள்கை மற்றும் வெளிப்படையான ஒப்பந்தகள் போன்றவற்றை நம்பிக்கை கொள்கிறது.

ஃபியூச்சர் ஜெனரலி டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசிதார் மற்றும் வாகனம் அனைத்தும் நன்றாக இருக்க உதவுகிறது. இந்த இன்சூரன்ஸ் ப்ளான் இரு சக்கர வாகனத்திற்கு பாதுக்கப்பு கவசம் மற்றும் பழுது மற்றும் சேவை உள்ளிட்டவைக்கு பணம் செலுத்துவதற்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. அவை மட்டுமல்ல, விபத்துக்கள், இயற்கை பேரழிவுகள், திருட்டு மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளில் ஏற்படும் சேதங்களையும் இந்த ப்ளான் உள்ளடக்கி உள்ளது.

பாதுகாப்பான எதிர்காலத்திற்கு நம்பிக்கை ஃபியூச்சர் ஜெனரலி 

இந்தியாவில் அதிகமாக இருக்கும் நடுத்தர வர்க்க மக்கள் அதிகம் டூவீலர்களை ஒவ்வொரு நாள் போக்குவரத்திற்கும் நம்பி உள்ளதால் ஃபியூச்சர் ஜெனரலி மூலம் டூவீலர் இன்சூரன்ஸ் ப்ளான்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.

- / 5 ( Total Rating)