இப்கோ டோக்யோ டூவீலர் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

இப்கோ டோக்யோ ஜென்ரல் இன்சூரன்ஸ் கம்பனி அல்லது இப்கோ டோக்யோ ஜிஐசி-ன் ஆரம்பநிலை செயல்பாடுகள் 2000 ஆம் ஆண்டில் உச்சநிலையாக இருந்துள்ளது. இவை, 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி ஐ.ஆர்.டி.ஏ-வின் சான்றிதழ் எண் 106-ஐ பெற்றது.

இப்கோ டோக்யோ ஜிஐசி ஆனது இந்தியன் மற்றும் வெளிநாட்டவரை உள்ளடக்கியுள்ளது மற்றும் அவர்களுக்கு இடையே கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்டு உள்ளன. இதில், அயல்நாட்டு பங்குதாரர் ஜப்பான் நாட்டில் மிகப்பெரிய அளவில் பட்டியலிடப்பட்ட இன்சூரன்ஸ் குழுமமான டோக்யோ மரைன் மற்றும் நிசிடோ ஃபயர் குருப் ஆவர்.

இப்கோ டோக்யோ பிரெசன்ஸ்

இப்கோ டோக்யோ ஆனது தற்போது நாடெங்கிலும் உள்ளது மற்றும் அதன் இன்சூரன்ஸ் தயாரிப்புகள் நாடு முழுவதிலும் பரவலாகக் கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது. நாடு முழுவதிலும் இந்த பொது காப்பீட்டு நிறுவனம்:

 • 350 நகரங்களுக்கு மேலே அமைந்துள்ளன
 • கிராமப்புறங்களில் அமைந்திருக்கிறது
 • 75-க்கும் மேற்பட்ட திறன் வாய்ந்த வணிகப் பிரிவுகள்
 • 169 பக்கவாட்டு பரவல் மையங்கள்
 • சுமார் 400 பீமா கேந்திராஸ்
 • வலுவான டிஜிட்டல் பிரெசன்ஸ்

இப்கோ டோக்யோ சாதனைகள் 

 • பதினேழு ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் இயங்கும் செயல்திறன்
 • தற்போது மொத்த எழுத்து பிரீமியம் ரூ.3537.2 கோடி
 • GWP இல் சராசரி வளர்ச்சி ஆண்டிற்கு 104%
 • முற்றிலும் சொந்த விநியோகஸ்தர்கள் சேனல்கள்
 • விநியோக சேனல்களின் புதுமைத்தன்மைக்கு அங்கீகாரம்
 • 1500க்கும் மேற்பட்ட செயல் நோக்கமுள்ள பணியாளர்கள்
 • உயர்ந்த க்ளைம் செட்டில்மெண்ட் பதிவேடுகள் 

இப்கோ டோக்யோ வாடிக்கையாளர் கவனம் : இப்கோ டோக்யோ ஜிஐசி வாடிக்கையாளர்களை கவனத்தில் கொள்வதன் மூலம் இயங்கும் நிறுவனமாகும். ஒவ்வொரு ஆண்டிலும் இருமுறை உள் வாடிக்கையாளர்களின் திருப்தியை தெரிந்து கொள்ள வெளிப்புற ஏஜென்சிகளை வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்கோ டோக்யோ டூவீலர் இன்சூரன்ஸ் உள்ளடக்கிய தீர்வு

பெரும்பாலான மக்கள் இருசக்கர வாகனங்களையே சார்ந்து உள்ளனர். அவர்கள் தங்களின் பணியிடங்களுக்கு தங்களின் இருசக்கர வாகனங்கள் மூலமே பயணிக்கின்றனர் மற்றும் தங்களின் முழு பணியையும் இரு சக்கர வாகனங்கள் கொண்டே முடிக்கின்றனர். பெரும்பாலான மக்களுக்கு, அவர்களின் இருசக்கர வாகனங்கள் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக மாறுகிறது. அவர்களுக்கு விரைவான, எளிதான மற்றும் மலிவான போக்குவரத்தை வழங்குகிறது.

இருசக்கர வாகனங்கள் கணிசமான தொகையைக் கொண்டு வாங்கப்படுகின்றன மற்றும் எந்தவொரு நபரின் வாழ்க்கையிலும் ஓர் மதிப்புமிக்க சொத்தாகவே கருதப்படுகிறது. இங்கு முழு மன நிம்மதியை அனுபவிக்க இருசக்கர வாகனங்களுக்கு காப்பீடு எடுப்பது அவசியம். இப்கோ டோக்யோ டூவீலர் இன்சூரன்ஸ் திட்டம் பின்வருவனவற்றை வழங்குகிறது.

 • மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மூன்றாம் தரப்பினர் பொறுப்பு இன்சூரன்ஸ்
 • தனிப்பட்ட விபத்து காப்பீட்டை உள்ளடக்கியது(பின் அமர்ந்து செல்பவருக்கும் அல்லது பிள்ளியன் சேர்த்து).
 • வாகன சேதம் உள்ளடக்கியது

தர்டு பார்டி லியபிலிட்டி இன்சூரன்ஸ்

இப்கோ டோக்யோ தனது மூன்றாம் தரப்பு பொறுப்பு இன்சூரன்ஸ் திட்டத்தை மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் விதிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க அறிமுகப்படுத்தியது. மூன்றாம் தரப்பினர் பொறுப்பு இன்சூரன்ஸ் உள்ளடக்கியவை :

 • மூன்றாம் தரப்பினர் பின்னிருக்கை பயணி அல்லது பின்னிருக்கை பயணி இல்லாமல்
 • மூன்றாம் தரப்பினர் காயங்கள் உள்ளடக்கியது
 • முற்றிலும் சொந்த விநியோகஸ்தர்கள் சேனல்கள்
 • மூன்றாம் தரப்பினர் இயலாமை உள்ளடக்கியது
 • மூன்றாம் தரப்பினர் உடமை சேதம் உள்ளடக்கியது

வாகனத்தின் மூலம் எந்தவொரு நபர் காயமடைந்தாலோ அல்லது எந்த வாகனத்தின் மூலம் அவர்களின் உடமைகள் சேதமடைந்தால் ஒரு தனிப்பட்டவர் வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக மூன்றாம் தரப்பு க்ளைம்(உரிமை கோரலை) பெற முடிகிறது. மோட்டார் வாகன சட்டத்தின்படி ஒவ்வொரு வகையான மூன்றாம் தரப்பு பொறுப்பு உள்ளடக்கும் உறையின் கீழ் குறிப்பிட்ட வரம்புகளில் மூன்றாம் தரப்பினரின் இழப்பீடுகளுக்கு அந்த உரிமையாளர் பொறுப்பேற்கிறார்.  

இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் மூன்றாம் தரப்பினர் பொறுப்பிற்காக காப்பீடு செய்து இருந்தால் மூன்றாம் தரப்பினரின் இழப்பீடுகள் பெறுவது தொடர்புடைய கோரிக்கை ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்களை காப்பீட்டாளர் பெற்றுக்கொள்வதன் மூலம் மேற்கொள்ளப்படும்.

தனிப்பட்ட விபத்து இன்சூரன்ஸ் உள்ளடக்கியது

இப்கோ டோக்யோ டூவீலர் இன்சூரன்ஸ் ஆனது உரிமையாளர்/ஓட்டுனர் மற்றும் பெயர் குறிப்பிடப்பட்ட பின்னிருக்கை பயணிக்கும் கூட தனிப்பட்ட விபத்து காப்பீட்டை உள்ளடக்கி வழங்குகிறது. தனிப்பட்ட விபத்து காப்பீட்டை உள்ளடக்கியதில் பின்வருபவையும் அடங்கும்.

 • உரிமையாளர்/ஓட்டுனர்/பின்னிருக்கை பயணி உள்ளடக்கியது
 • இறப்பு உள்ளடங்கும்
 • இயலாமை உள்ளடங்கும்
 • அவசர சிகிச்சை உள்ளடங்கும்

இப்கோ டோக்யோ டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசியில் உள்ளடங்கிய ஒரு நபர் விபத்துக்குள்ளாகினால், அந்த ஆண்/பெண் இப்கோ டோக்யோ மூலம் ரூ.1,00,000 வரை உரிமைக் கோர(க்ளைம்) முடியும். ஒருவேளை பாலிசிக்கு உட்பட்ட நபர் இறந்தால், அந்த தொகையானது சட்டப்படி பயனடைபவர் அல்லது பெயர் குறிப்பிடப்பட்ட பயனாளிக்கு சென்றடையும். இப்கோ டோக்யோ பைக் இன்சூரன்ஸ் பாலிசி ஆவணங்களில் உள்ள ஒவ்வொரு வகையான உள்ளடக்கத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட வரம்புகளின் படி இழப்பீடு தொகை வழங்கப்படும்.

வாகன சேதம் உள்ளடக்கியது

துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் அல்லது விபத்தின் போது வாகனத்தின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக சேதமடைவது நடக்கக் கூடியவை. இப்கோ டோக்யோ பைக் இன்சூரன்ஸ் பாலிசி ஆனது விபத்துகள், தீ , வன்முறை கும்பலால் தீப வைத்து எரிப்பது, பயங்கரவாத சம்பவங்கள், இயற்கை பேராபத்துக்கள்(நிலநடுக்கம், சூறாவளி, நிலச்சரிவு) அல்லது லிப்ட், கப்பல்கள், வண்டிகளில் ஏற்றும் பொழுது ஏற்படும் வாகன சேதங்களுக்கு எதிராகவும் உள்ளடக்கிய காப்பீடு வழங்குகிறது.

வாகனங்களின் சந்திப்பின் மூலம் விபத்துக்கள் அல்லது திடீரென நிகழும் சம்பவத்தின் காரணத்தினால் வாகனம் சேதமடைந்தால் அல்லது வாகனத்தின் உள்ளேயே சேதம் ஏற்படுவது போன்றவை நிகழும் பொழுது, இப்கோ டோக்யோ டூவீலர் இன்சூரன்ஸ் திட்டம் கீழ் வாகனம் காப்பீடு செய்யப்பட்டு இருந்தால் இப்கோ டோக்யோவில் இருந்து வாகனக் காப்பீடு உள்ளடக்கிய தொகையை உரிமைக்கோர(க்ளைம்) முடியும்.

வாகன சேதங்கள் தவிர அது திருடப்படக்கூடிய ஆபத்துகளும் கூட உள்ளன. இப்கோ டோக்யோ பைக் இன்சூரன்ஸ் அல்லது இப்கோ டோக்யோ டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி கீழ் வாகன திருட்டு சம்பவங்களையும் உள்ளடக்கி இப்கோ டோக்யோ வழங்குகிறது.

இப்கோ டோக்யோ டூவீலர் இன்சூரன்ஸ் அம்சங்கள்

 • அனைத்தும் உள்ளடக்கிய டூவீலர் இன்சூரன்ஸ் ப்ளான்
 • நாடு முழுவதும் நெட்வொர்க் மார்க்கெட்டில் ரொக்க பணமின்றி பழுது பார்க்கலாம்
 • NCB 50% வரை
 • அனைத்து நேரங்களிலும் அவசர உதவி
 • பாலிசி ஆன்லைனில் வாங்குதல்
 • பாலிசி உடன் NCB பலனை 100% பரிமாறிக் கொள்ளலாம்.

இப்கோ டோக்யோ டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் விலக்கல்கள்

இப்கோ டோக்யோ டூவீலர் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி பின்வரும் பல சூழ்நிலைகளின் கீழ் உரிமைக்கோரலை(க்ளைம்) கொடுப்பதில்லை.

 • சட்டவிரோத அல்லது சட்டத்திற்கு புறம்பாக நடவடிக்கையில் ஈடுபடுதல்
 • அசாதாரணமான அபாயங்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் பங்கேற்பது
 • போர் அல்லது ஆணு ஆயுதத்தின் காரணமாக சேதம் அல்லது காயம்
 • ஆல்கஹால் அல்லது போதை மருந்துகளின் விளைவுகளுடன் ஓட்டுதல்
 • சாதாரணமான வரம்புகளை மீறியதன் காரணமாக சேதம் அல்லது காயங்கள்
 • வாகன உரிமையாளர்/பெயர் குறிப்பிடப்பட்ட ஓட்டுனர் தவிர்த்து பிறர் மூலம் வாகனம் இயக்கப்பட்டு இருந்தால்.
 • உரிமையாளர்/ஓட்டுனர் தகுதியான ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருந்தால்

இப்கோ டோக்யோ டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் க்ளைம் செயல்முறை

இப்கோ டோக்யோ டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் உள்ளடங்கிய துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நிகழ்ந்தால், பாலிசியில் உள்ளடங்கி இருக்கும் பாலிசிதாரர் அல்லது நபர்கள் தங்களின் மற்றும் மூன்றாம் தரப்பினரின் மருத்துவக் கவனிப்பிற்கு பிறகு உடனடியாக காப்பீட்டாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பிரதான மற்றும் தீவிர நிகழ்வுகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்.

வாகனங்கள் சேதமடைந்து இருந்தால் அருகில் இருக்கும் ரொக்க பணம் இன்றி பழுது சேவை கிடைக்கக்கூடிய நெட்வொர்க் கேரேஜிற்கு எடுத்துக் செல்ல வேண்டும். ஒருவேளை, பழுதுபார்க்கும் வேலைகள் நெட்வொர்க் கேரேஜ் இல்லாத இடங்களில் செய்தால் அந்த தொகையைப் காப்பீட்டில் இருந்து பெறுவதற்கான சமயத்தில் அந்த பணிக்கான அனைத்து பில்களை வாங்கி உரிமைக்கோரல்(க்ளைம்) படிவம் மற்றும் விண்ணப்பங்கள் மூலம் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

எப்பொழுது எல்லாம் க்ளைம் சம்பவங்கள் இப்கோ டோக்யோ உரிமைக்கோரல்(க்ளைம்) மையத்தில் அறிக்கை செய்யப்படும் பொழுது, நிறுவனமானது இயல்புத்தன்மையை மதிப்பிட மற்றும் சேதத்தின் அளவு மற்றும் காப்பீடு செய்தவர் மூலம் எழுப்பப்பட்ட உரிமைக்கோரல் அனைத்தும் இன்ஸ்பெக்டர் ஒருவரை நியமித்து அவரின்அறிக்கையுடன் பொருந்துகிறதா எனப் பார்க்கும்.

தனிப்பட்ட, பின்னிருக்கை பயணி மற்றும் மூன்றாம் தரப்பினர் மருத்துவ கவனிப்பு செலவுகள் அல்லது பிற காயத்தின் செலவுகள் தொடர்பான உரிமைக்கோரல்(க்ளைம்) ஆனது பாலிசியின் ஆவணங்களில் குறிப்பிட்ட பரிந்துரைகளின்படி செய்யப்படலாம்.

- / 5 ( Total Rating)