நேஷனல் டூவிலர் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

இந்தியாவின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் மத்தியில்  மிகப்பெரிய மற்றும் மிக பழமையான இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக நேஷனல் டூவீலர் இன்சூரன்ஸ் இருக்கிறது. பொதுவாக, ஹெல்த் இன்சூரன்ஸ், மோட்டார் இன்சூரன்ஸ், ட்ராவல் இன்சூரன்ஸ் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஜென்ரல் இன்சூரன்ஸ் ப்ரோடக்ட்களில் ஒப்பந்தங்களை கொண்டுள்ள, அனைவராலும் நன்கு அறியப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனமாகும். உங்களுக்கு ஏதாவது ஜென்ரல் இன்சூரன்ஸ் ப்ரோடக்ட்கள் தேவைப்படும் பட்சத்தில் இந்த நிறுவனம் கருத்தில் கொள்ளக்கூடிய சிறந்தவைகளில் ஒன்றாக இருக்கும்.

மோட்டார் இன்சூரன்ஸ் ப்ளான்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ளான்ஸ், டூவீலர் இன்சூரன்ஸ் இன்சூரன்ஸ் ப்ளான்ஸ், ரூரல் இன்சூரன்ஸ் ப்ளான்ஸ், கமர்சியல் ரிஸ்க் இன்சூரன்ஸ் ப்ளான்ஸ், இண்டஸ்ட்ரியல் இன்சூரன்ஸ் ப்ளான்ஸ், பெர்சினல் அக்சிடென்ட் ப்ளான்ஸ் மற்றும் ஹோம் இன்சூரன்ஸ் ப்ளான்ஸ் போன்றவை நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கக்கூடிய மிகவும் பொதுவான மற்றும் பயனுள்ள திட்டங்களின் பட்டியலாகும். இத்தகைய உதவிகரமான இன்சூரன்ஸ் நிறுவனத்தால் மிகவும் சிறந்த, வெளிப்படையான மற்றும் எளிதாகப் பெறக்கூடிய  வகையில் நன்கு வடிவமைக்கப்பட்ட ப்ரோடக்ட்களை கொண்டிருக்கிறது. மேலும், நீங்கள் ஜென்ரல் இன்சூரன்ஸ் ப்ரோடக்ட்களை வாங்க திட்டமிட்டால் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக கருத்தில் கொள்ளலாம்.

உதாரணமாக, ஒரு நபரால் எடுக்கப்படும் டூவீலர் இன்சூரன்ஸ் போன்ற மிகவும் பொதுவான இன்சூரன்ஸ் பாலிசிகளை பற்றி இங்கே விவாதிக்கலாம். இருசக்கர வாகனத்தை வாங்கக்கூடிய எந்தவொரு நபருக்கும் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி ஆனது மிகவும் பொதுவான ப்ளான் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இன்சூரன்ஸ் இல்லாமல் சாலைகளில் பயணிப்பது சட்டத்திற்கு விரோதமானது.

நேஷனல் இன்சூரன்ஸ் பாலிசியின் அம்சங்கள் மற்றும் நன்மைகள்

 • ஒரு விரிவான பாதுகாப்பு வழங்குகிறது
 • க்ளைம் சர்வீஸ் எளிதானது மற்றும் விரைவானது
 • தொந்தரவு இல்லாத இலவச க்ளைம் உதவி மற்றும் ரொக்கப்பணமில்லா வசதி
 • மலிவான இன்சூரன்ஸ் ப்ளான்ஸ்
 • ஒவ்வொரு க்ளைம்லஸ் ஆண்டிலும் நோ க்ளைம் போனஸ் உண்டு

நேஷனல் டூவிலர் இன்சூரன்ஸ் உள்ளடக்கி 

நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் டூவீலர் இன்சூரன்ஸ் கீழ் நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய இரு விருப்பங்கள் உங்களுக்காக உள்ளன. அவை,

லியபிலிட்டி மட்டும் கவர் : இந்த வடிவிலான டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி ஆனது விபத்தில் காயமடைந்து இருந்தால் அது தொடர்பான எந்தவொரு சட்டபூர்வமான பொறுப்பு(லியபிலிட்டி) முழுமையாக கவரை(உள்ளடக்கி) வழங்குகிறது.

பக்கேஜ் கவர் : இது மலிவான விலையில் பரந்த பாதுகாப்பை வழங்குகிறது. இந்த இன்சூரன்ஸ் ப்ளான் கீழ், அனைத்து பொறுப்புகளும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கவர் செய்யப்பட்டு இருக்கும். சேதங்கள் ஏற்படும் பொழுது வாகனம் மற்றும் பயணி கவரேஜ்(தொகை) பெற உத்திரவாதம் அளிக்கிறது. இன்ஷூர் செய்யப்பட்ட வாகனங்களின் சேதங்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: 

 • உடமைகள் சேதம் ( தர்டு பார்ட்டி ப்ரோபெர்ட்டி டேமேஜ் அதிகபட்சம் 7.5 லட்சம்)
 • பயங்கரவாத தாக்குதல்
 • தர்டு பார்ட்டி(மூன்றாம் தரப்பினர்) மரணம் அல்லது காயங்கள்
 • கொள்ளை, திருட்டு அல்லது வீட்டை உடைத்தல்
 • வன்முறை மற்றும் போராட்டம்
 • இயற்கை பேராபத்துகள்( வெள்ளம், சூறாவளி, கடும்புயல், நிலநடுக்கம், பனிமழை உள்ளிட்டவைகள்)
 • தீ மற்றும் நிலநடுக்கம்
 • தீ , தானாக எரிதல், மின்னல் அல்லது வெடித்தல்
 • தீங்கிழைக்கும் செயல்கள் 

நேஷனல் டூவிலர் இன்சூரன்ஸ் விலக்குகள் 

 • வாகனத்தில் இயற்கையான தேய்மானங்கள்
 • போர், உள்நாட்டு போர், ராணுவ நடவடிக்கை, அயல்நாட்டு எதிரிகளின் செயல்கள், படையேடுத்தல், கிளர்ச்சிகள் போன்றவையின் போது ஏற்படும் இழப்புகள்
 • மெக்கானிக்கல் அல்லது எலெக்ட்ரிக்கல் சீர்குலைவு (பிரேக்டவுன்)
 • மது அருந்தியோ அல்லது மதிப்பில்லாத லைசென்ஸ் அல்லது லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் கவரேஜ் பாதுகாப்பு அளிக்காது
 • அதன் விளைவான இழப்புகளுக்கும்
 • ஒப்பந்த பொறுப்பு(கான்ட்ராக்சுவல் லியபிலிட்டி) காரணமாக எந்தொரு க்ளைம் எடுத்துக் கொண்டால்.
 • வாகனம் தானாக சேதமடையும் வரை டயர் மற்றும் டியூப் சேதங்கள் கவர் செய்யப்படாது, இதுபோன்ற நிகழ்வுகளில் 50% அளவிற்கு மாற்றுதல் அல்லது பழுதுபார்க்கும் செலவுகள் காப்பீட்டார் மூலம் வழங்கப்படும்.
 • குறிப்பிடாத நோக்கங்கள் அல்லது வரம்புகளை மீறி வாகனத்தை  இயக்கினால்.
 • தன் அலட்சியத்தால் ஏற்படும் இழப்புகள்/சேதம் மற்றும் பொறுப்புகள்(லியபிலிட்டி).
 • எந்தவொரு அணு ஆற்றல் அல்லது அணுக கழிவுகள் அல்லது ரேடியோஅக்டிவ் கண்டாமினேசன் இல் இருந்து வெளியாகும் ரேடியேசன் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்படும் இழப்புகள் / சேதங்கள்.
 • இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்தை அங்கீகரிக்கப்படாத நபர்(ட்ரைவர் கிளாஸில் குறிப்பிட்ட நபர் தவிர) இயக்கினால்.
 • அணு ஆயுதங்கள் காரணமாக ஏற்படும் இழப்புகள்/சேதங்கள்
 • திருட்டு காரணமாக பாகங்களின் சேதங்கள்/இழப்புகள் 

நேஷனல் டூவிலர் இன்சூரன்ஸ் க்ளைம் ப்ராசெஸ்

மேலே விவாதிக்கப்பட்டது படி இப்புகழ்பெற்ற இன்சூரன்ஸ் நிறுவனத்தின் க்ளைம் ப்ராசெஸ்(உரிமைக்கோரல் செயல்முறை) எளிதானது மற்றும் பயனுள்ளதும் கூட. மேலும், விரைவாக மற்றும் வெளிப்படையாகவும் இருக்கும். உங்களுக்கு தேவையான எந்த நேரத்திலும் க்ளைம் தொடர்பான ஆவணங்களை சமர்பிக்கலாம். இந்த நிறுனத்தின் வாடிக்கையாளர் சேவை நாட்டிலேயே சிறந்த ஒன்றாக உள்ளது. அதே சமயத்தில், நீங்கள் உடனடியாக உதவியை பெறுவதன் மூலம் அது உங்களுக்கு முழு மன நிறைவை அளிக்கும். உங்களின் எவ்வித சந்தேகங்களுக்கும் நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ளலாம். உங்களின் க்ளைம் தொடர்பான செயல்முறையை தாக்கல் செய்ய தொடர்பு கொள்ளும் பொழுது, பின்வரும் தகவல்களை நீங்கள் தயாராக வைத்து இருக்க வேண்டும்.

 • விபத்து நடந்த நாள் மற்றும் தேதி
 • சர்வே லோகேசன்(வாகனத்தின் இழப்பை கணக்கிட மதிப்பிடும் நபர் வர வேண்டிய இடம்)
 • பாலிசி நம்பர்
 • ஓட்டுனர் பெயர், தொடர்பு எண், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட விவரங்கள்
 • காப்பீட்டாளர் தொடர்பு விவரங்கள்
 • மதிப்பிடப்பட்ட இழப்பு/விளக்கம்

க்ளைம் பெறுவது தொடர்பாக நீங்கள் தாக்கல் செய்து விட்டால், அந்நிறுவனத்தின் சார்பில் உடனடியாக உங்களை தொடர்பு கொள்வார்கள் மற்றும் அதற்கான செயல்முறைகள் விரைவாக நடைபெறும். க்ளைம் குறிப்பு எண்ணை நிறுவனத்தின் பிரதிநிதியுடன் வாங்கிக் கொள்ளுங்கள், அது உங்களின் எதிர்கால குறிப்புகளுக்கு தேவைப்படலாம். உங்களின் க்ளைம் தாக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றால், உங்களுக்கு நிறுவனத்திடம் இருந்து பயனுள்ள தகவல்களுடன் மெசேஜ் வரும். இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்தை சர்வேயர் மதிப்பீடுவார். ஒருமுறை அணுகிய பின் மற்றும் அனுமதி அளிக்கப்பட்டு விட்டால், க்ளைம் ஸ்டேடஸ் வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள் - நேஷனல் டூவிலர் இன்சூரன்ஸ்

 • பூர்த்தி செய்யப்பட்ட க்ளைம் படிவம்
 • உடற்தகுதி சான்றிதழ்( வணிக வாகனத்திற்கு மட்டும்)
 • பதிவு சான்றிதழ்(ஆர்.சி)
 • போலீஸ் எஃப்.ஐ.ஆர்
 • ஓட்டுனர் உரிமத்தின் நகல்
 • அட்டவணை மற்றும் ஒப்புதல்/சட்டவிதிமுறை உடன் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி
 • பிரீமியம் தொகைய செலுத்திய ரசீது மற்றும் பாலிசியின் நகல்கள்

புதுப்பித்தல் செயல்முறை - நேஷனல் டூவிலர் இன்சூரன்ஸ் 

டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி புதுப்பித்தல் வரும் பொழுது, பதிவு செய்யப்பட்ட பாலிசிதாரர்கள் ஆன்லைன் புதுப்பித்தல்(ரினியுவல்) செயல்முறைகளை எளிதாக பயன்படுத்தலாம். இது மிகவும் எளிதானது மற்றும் பயனுள்ளது. நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று எளிய படிநிலையை பயன்படுத்த வேண்டும்.

 • இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று உங்களின் பாலிசி எண் மற்றும் பிறந்த தேதியை என்ட்டர் செய்வதன் மூலம்  ஆன்லைன் தளத்தில் உள் நுழையலாம்.
 • நெட் பேங்கிங் அல்லது டெபிட்/கிரெடிட் கார்டு – என்ற கட்டணம் செலுத்தும் முறையை தேர்வு செய்யவும்.
 • நீங்கள் பணம் செலுத்திய பின் உங்களுக்கு மெசேஜ் வந்தடைந்த பிறகு, பிரீமியம் செலுத்திய ரசீதை பிரிண்ட்/சேவ் செய்யவும்.

- / 5 ( Total Rating)