நியூ இந்தியா டூவீலர் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

இந்தியா போன்ற நாடுகளில், பெரும்பான்மையான மக்கள் பயணம் செய்வதற்கு இருசக்கர வாகனங்களையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இருசக்கர வாகன உரிமையாளரும் சொந்தமாக பைக் இன்சூரன்ஸ் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிறது. ஓட்டுனர் மற்றும் பயணியின் பாதுகாப்பிற்கு மட்டுமின்றி திடீரென மோசமான விபத்துக்கள் ஏற்படும் பொழுது பணத்தினை சேமிப்பதற்கும் பயன்படக்கூடியது.

டூவீலர் இன்சூரன்ஸ் ஏன் வாங்க வேண்டும்

இந்தியாவில் டூவீலர் வைத்து இருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் டூவீலர் இன்சூரன்ஸ் என்பது கட்டாயம் அவசியமாகிறது. டூவீலர் இன்சூரன்ஸ் ஆனது விபத்து ஏற்படும் பொழுது தனிநபர் மற்றும் பயணிக்கான மருத்துவ செலவுகளை வழங்குவது மட்டுமல்லாமல் வாகனத்தை பழுதுப்பார்ப்பதற்கும் உள்ளடக்கிய கவரேஜ்-ஐ வழங்குகிறது.

ஒவ்வொரு இருசக்கர வாகனத்திற்கும் அதன் வயது மற்றும் டூவீலரின் பயன்பாடு ஆகியவற்றை பொறுத்து சொந்தமாக தேவைகளைக் கொண்டிருக்கிறது. எப்பொழுது ஒரு தனிநபர் தன் இன்சூரன்ஸ் வாங்குதலின் தேர்ந்தெடுப்பில் அந்த தேவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஸ்கூட்டர் மற்றும் பைக் இன்சூரன்ஸ் வைத்து இருக்கும் நபர்களுக்கு முக்கிய அம்சமாக தங்களின் வாகனத்தை எந்தவொரு நெட்வொர்க் கேரேஜ்-க்கும் சென்று மற்றும் வாகனத்திற்கு தேவைப்படும் பழுதுப்பார்த்தலை பணமின்றி இலவசமாக பெறுவதை வழங்குகிறது.

PolicyX.com இல், பல்வேறு தளங்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கக்கூடிய தகவலில் இருந்து அனைத்து டூவீலர் இன்சூரன்ஸ்களின் ஒப்பீடு மற்றும் அவற்றின் விரிவான விளக்கங்களும் வழங்கப்படுகிறது. இந்த விரிவான ஒப்பீடுகள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு எந்த இன்சூரன்ஸ் பொருந்தும் என்பதை தாங்களாகவே முடிவு செய்யலாம் மற்றும் தேர்வு செய்ய முடியும்.

பல்வேறு டூவீலர் இன்சூரன்ஸ்களின் அம்சங்கள், நன்மைகள் மற்றும் அவற்றின் குறைகள் பற்றி தெரிந்துக் கொள்வதைத் தவிர, இந்த இணையதளத்தின் வழியாக ஒருவரால் தன் டூவீலர் இன்சூரன்ஸ்-ஐ புதுப்பித்துக் கொள்ளவும் முடியும்.

டூவீலர் இன்சூரன்ஸ்க்கான கவரேஜ்கள்

இங்கு பல நிறுவனங்களால் ஆயிரக்கணக்கான டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசிகள் வழங்கப்பட்டாலும் அவை பெரும்பாலும் இரு வகையான கவரேஜ்களை மட்டுமே வழங்குகின்றன. இதில் முதல் வகை தர்டு பார்ட்டி லியபிலிட்டி கவரேஜ் மற்றும் இரண்டாவது விரிவான கவரேஜ்.

தர்டு பார்ட்டி லியபிலிட்டி – இந்த கவரேஜ் ஆனது பைக் இன்சூரன்ஸ் கீழ் இன்சூரன்ஸ் செய்த தனிநபரை மட்டும் உள்ளடக்கியது இல்லை. இது விதிமுறைக்கு உட்பட்டு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்தின் சேதங்கள் மற்றும் விபத்தில் சிக்கிய மற்றொரு தரப்பினரின் மருத்துவ செலவுகளையும் உள்ளடக்கிய மொத்த செலவுகளையும் கவனித்துக் கொள்கிறது.

இன்சூரன்ஸ் செய்யும் நிறுவனத்தைப் பொறுத்து, இன்சூரன்ஸ் தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையானது தர்டு பார்ட்டி லியபிலிட்டி(மூன்றாம் தரப்பினர் பொறுப்பிற்கு) என ஒதுக்கி வைக்கப்படுகிறது. இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்தில் இருந்து காயமடைந்த மூன்றாம் தரப்பினரின் அனைத்து மருத்துவ செலவுகளும் கூட கவர் செய்யப்பட்டு இருக்கும். இந்த கவர் மூலம் உடமைகளின் சேதத்தை பழுதுப்பார்ப்பதற்கு தேவையான தொகையும் வழங்கப்படுகிறது.

விரிவான கவர் – ஒரு விரிவான கவரேஜ்(காம்ப்ரீஹென்சிவ் கவர்) ஆனது இயற்கை பேராபத்துக்கள் மற்றும் மனிதன் உருவாக்கும் விபத்துகளின் காரணமாக இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்தில் ஏற்படும் அனைத்து சேதத்திற்கான பழுதுப்பார்த்தலையும் கவனித்துக் கொள்கிறது. வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு மற்றும் பல இயற்கை பேரழிவுகள் இந்த கவரேஜ்-ல் உள்ளடங்கி உள்ளன. மேலும், மனிதனால் உருவாக்கப்படும் ஆபத்துகளான திருட்டு, கொள்ளை போன்றவையும் உள்ளடக்கி உள்ளது.

டூவீலர் இன்சூரன்ஸின் நன்மைகள் மற்றும் அம்சங்கள்

நிறுவனங்களால் வழங்கப்படும் அனைத்து விதமான டூவீலர் இன்சூரன்ஸ்களிலும் ஒரேமாதிரியான அம்சங்களை உள்ளடக்கி உள்ளன. அதன் அம்சங்கள் பின்வருமாறு,

 1. வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை ஆபத்துகள் மற்றும் மனிதனால் உருவாக்கப்படும் கொள்ளை, திருட்டு போன்ற ஆபத்து உள்ளிட்ட இரண்டிலும் உருவாகும் சேதங்களில் இருந்து வாகனத்திற்கு பாதுகாப்பு அளிக்கலாம்.
 2. இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்தின் மூலம் ஏற்பட்ட விபத்தில் சம்பந்தப்பட்ட தர்டு பார்ட்டியின்(மூன்றாம் தரப்பினர்) மருத்துவ செலவுகள் மற்றும் உடமை(ப்ரோபர்டி) சேதங்களை கூட தர்டு பார்ட்டி லியபிலிட்டி கவரேஜ் கவனித்து கொள்ளும்.
 3. வாகனத்தின் உரிமையாளர் மற்றும் வாகனத்தை ஒட்டிய நபருக்கும் அக்சிடென்ட் கவர் இருக்கும். விபத்தில் இயலாமை உள்ளாகும் நபருக்கும் குறிப்பிட்ட தொகையானது ஒதுக்கி வைக்கப்படும்.
 4. டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளை குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு எடுத்துக் கொள்ளலாம். மேலும், இன்சூரன்ஸ் புதுப்பிப்பை எளிதாக ஆன்லைன் தளத்தின் மூலமும் மேற்கொள்ளலாம்.
 5. ஒவ்வொரு டூவீலர் ப்ளான்களுக்கும் இருக்கும் ஒரு சிறப்பான அம்சம் என்னவென்றால் நோ க்ளைம் போனஸ் அம்சமாகும். ஒரு ஆண்டில் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில் இன்சூரன்ஸ் செய்தவர் இன்சூரன்ஸ் க்ளைம் தொகையை விண்ணப்பிக்கவில்லை என்றால் இந்த அம்சமானது பயன்படுத்தப்படும். அவர்களுக்கான நேரத்தில் இன்சூரன்ஸ் பாலிசிகளை புதுப்பிக்கும் நபர்களுக்கு மட்டும் இந்த அம்சம் அளிக்கப்படும் மற்றும் நோ க்ளைம் போனஸ் அம்சத்தின் மூலம் தங்களின் இன்சூரன்ஸ்க்கான இன்க்ரிமென்ட்-ஐ அதிகரிக்கச் செய்யலாம்.
 6. இந்த டூவீலர் இன்சூரன்ஸ மேலும் ஒரு சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது, அதில் வாகனத்தில் உடன் பயணிக்கும் பயணியையும் சேர்ந்து இந்த இன்சூரன்ஸ் கவர் செய்கிறது. இவ்வாறு சேர்க்கப்பட்ட பாலிசிதாரர் வாகனத்தின் ஓட்டுனர் அல்லது பாலிசிதாரர் குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக இருக்கலாம். சரியான ஓட்டுனர் உரிமம் வைத்து இருப்பவர்கள் மற்றும் சட்டப்படி 18 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தக்கூடியதாக இருக்கும்.

டூவீலர் இன்சூரன்ஸில் இருக்கும் விலக்குகள்

இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனங்களில் குறிப்பிட்ட சில காரணமாக மற்றும் சூழ்நிலைகளில் ஏற்படும் பழுதுகள் மற்றும் சேதங்கள் உள்ளிட்டவைக்கு டூவீலர் இன்சூரன்ஸில் இருந்து விலக்குகள் அளிக்கப்படும். உதாரணத்திற்கு, வயதின் காரணமாக வாகனத்தில் ஏற்படும் இயற்கையான தேய்மானங்கள்(வியர் அண்ட் டியர்) உள்ளிட்டவை கவர் செய்யப்படாது.

ஒருவேளை, இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்தை லைசென்ஸ் இல்லாத நபர் இயக்கி அதன் மூலம் நிகழும் விபத்தில் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களும் அடங்கும். அதன்பின், அந்த சேதத்தை பழுதுப்பார்த்தலும் இன்சூரன்ஸ் கவர் கீழ் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. அதேபோல், மது அருந்தி அல்லது போதை மருந்துகள் பயன்படுத்தி வாகனத்தை இயக்கி ஏற்படுத்தும் விபத்துகள் காரணமாக வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் இன்சூரன்ஸ் கீழ் கவர் செய்யப்படாது.

வாகனத்தின் தேய்மானத்தின் காரணமாக ஏற்படும் இழப்புகள். அணுசக்தி அபாயங்கள், போர் அல்லது கிளர்ச்சி உள்ளிட்டவை மூலம் வாகனத்தில்  ஏற்படும் சேதங்கள் டூவீலர் இன்சூரன்ஸ் கீழ் கவர் செய்யப்படாது. இதில் வாகனத்தின் டயரை மாற்றுதல் அல்லது சரி செய்தல் உள்ளிட்டவைக்கான செலவு உள்ளிட்டவையும் அடங்காது. இறுதியாக, இந்தியாவிற்கு வெளியே உள்ள பகுதியில் வாகனத்தில் ஏற்படும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கான பராமரிப்பிற்கு தகுதி இல்லை. அவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

டூவீலர் இன்சூரன்ஸ் விண்ணபிக்க தேவையான ஆவணங்கள்

இந்தியாவில் சொந்தமாக இருசக்கர வாகனங்களை வைத்து இருக்கும் நபர்கள் தங்களின் வாகனத்திற்கான பைக் இன்சூரன்ஸிற்கு விண்ணபிக்க வேண்டியது அவசியம். அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புவர்கள் பல்வேறு நிறுவனங்களால் வழங்கப்பட்ட பல டூவீலர் இன்சூரன்ஸ்களில் இருந்து தங்களுக்கு விருப்பமானவையை தேர்வு செய்யலாம். அவ்வாறான செயல்முறையில் சிறந்த ஒரு இன்சூரன்ஸ் மற்றும் பயனாளருடன் அதிகம் நட்புடன் இருக்கும் ஒன்றை தேர்வு செய்ய, PolicyX.com சந்தையில் கிடைக்கக்கூடிய அனைத்து டூவீலர் இன்சூரன்ஸ்களையும் ஒப்பீட்டுகளை பார்க்கலாம்.

ஒரு வாடிக்கையாளர், பல்வேறு வகையான இன்சூரன்ஸ் பாலிசிகள், அவற்றின் அம்சங்கள், உள்ளடக்கம், விலக்குகள் மற்றும் அவற்றின் நன்மைகளையும் கூட காண முடியும். இறுதியாக, தனக்கு விருப்பமான இன்சூரன்ஸ்-ஐ தேர்வு செய்து விட்டால், அவர்கள் அந்த இன்சூரன்ஸ்க்கான படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இன்சூரன்ஸ் படிவத்துடன் சேர்த்து இணைக்கப்பட வேண்டிய மற்ற ஆவணங்கள் பின்வருமாறு:

 • தனிப்பட்ட ஓட்டுனர் உரிமம்
 • இன்சூரன்ஸ் செய்ய வேண்டிய வாகனத்தின் பதிவு ஆவணங்கள்(ஆர்.சி)
 • தனிநபரின் முகவரி ஆதாரங்கள்
 • தனிநபரின் வங்கி விவரங்கள்

- / 5 ( Total Rating)