ஓரியண்டல் டூவீலர் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் டூவீலர் மற்றும் பைக்குகள் மூலம் இந்திய சாலைகளில் பயணம் செய்வது எவ்வளவு கடினமாக பயணத்தை மேற்கொள்கின்றனர். அத்தகைய வாகனங்களின் எரிபொருள் திறன், விலை குறைவு மற்றும் கவர்ச்சியான ஸ்டைல் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், பிற வாகனங்களுடன் சாலைகளை பகிர்ந்து கொண்டு செல்லும் பைக் ஓட்டுனர்களுக்கு அதிகளவில் தீங்குகள் நடக்க வாய்ப்புள்ளன. புள்ளிவிவரங்களின்படி, விபத்துகளால் பைக்குகள் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகின்றார்.

எனவே, முழுப் பாதுகாப்பு பெற டூவீலர் இன்சூரன்ஸ் பெறுவது கட்டாயமாகும். நீங்களே உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். டூவீலர் இன்சூரன்ஸ் பெறுவதும் மிகவும் எளிதானது. டூவீலர் இன்சூரன்ஸ் பிரச்சாரங்களை அதிகரிக்கும் ஆன்லைனிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஓரியண்டல் டூவீலர் இன்சூரன்ஸ் ஆனது டூவீலர் ரைடர்களின் அடிப்படைத் தேவைகளை அங்கீகரிக்கிறது மற்றும் ஆரோக்கியமான பாதுகாப்பு திட்டத்தை வழங்குகிறது.

1947 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஜென்ரல் இன்சூரன்ஸ் தயாரிப்புகளின் ஓர் முன்னோடியாக அமைந்துள்ளது. இது லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் துணை நிறுவனமாக தொடங்கப்பட்டது மற்றும் இறுதியாக கிளைகளுடன் அமைந்து உள்ளது. தற்போது ஓரியண்டல் இன்சூரன்ஸ் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 1800-க்கும் மேற்பட்ட இயங்கும் அலுவலங்களை கொண்டிருக்கிறது. மேலும், இந்த நிறுவனம் நேபாளம், துபாய் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளிலும் கூட இயங்கி வருகிறது. இது மக்களுக்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்யும் விதத்தில் பல இன்சூரன்ஸ் ப்ராடக்ட்களை வழங்குகிறது.

ஓரியண்டல் டூவீலர் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்

 • ஒரு வருடத்திற்கான கவரேஜ். குறுகிய கால கவர்கள் கூட கிடைக்கின்றன.
 • இந்த நிறுவனம் ஆன்லைனில் இன்சூரன்ஸ்களை வாங்குவதற்கு, புதுப்பித்தல் அல்லது டூவீலர் இன்சூரன்ஸ் ப்ளான்களின் இடம்பெயர்வுக்கு(மைகிரேசன்) சொந்தமாக ஆன்லைன் தளத்தை கொண்டுள்ளது.
 • காகித வேலைகள் தேவைப்படுவதில்லை
 • உடன் பயணிப்பவருக்கும் கவரேஜ் கிடைக்கிறது
 • விரிவான கவரேஜ் ஆனது கட்டாய தர்டு பார்ட்டி லியபிலிட்டி கவரேஜ் மற்றும் கூடுதல் பிரீமியம் தொகையில் சொந்த சேதங்களின் கவரேஜில் கூடுதலாக சேர்ந்த கவரையும் உள்ளடக்கி உள்ளது.
 • ஐ.டி.வி அல்லது இன்ஷூர்டு டிக்லர்டு வால்யூ என்பது வாகனத்திற்கான இன்சூரன்ஸ் தொகை ஆகும்.
 • பிரீமியமில் கிடைக்கும் தள்ளுபடிகளை வகைகளாக பிரித்து உள்ளது
 • முந்தைய வருடத்தில் க்ளைம் குறித்து தாக்கல் செய்யப்படவில்லை என்றால் நோ க்ளைம் போனஸ் தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது.

ஓரியண்டல் டூவீலர் இன்சூரன்ஸ்க்கான கவரேஜ்கள்

தர்டு பார்ட்டி லியபிலிட்டி : மூன்றாம் தரப்பினருக்கு நிகழும் சேதங்களுக்கு காரணமாக ஏற்படும் செலவுகளுக்கான கவரேஜ் மற்றும் பாதிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினரின் உடைமைகளுக்கான பொறுப்பு(லியபிலிட்டி) உள்ளடக்கிய கவரேஜ்.

பெர்ஸ்னல் அக்சிடென்ட் கவர் : இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் அல்லது ஓட்டுனரின் பாதுகாப்பிற்கான இந்த கவர்ஸ்,  இறப்பு அல்லது உடல் செயலிழப்பு காரணமாக ஏற்படும் செலவினங்களையும் உள்ளடக்கியுள்ளது.

நிலநடுக்கம், வெள்ளம், புயல், நிலச்சரிவு, சூறாவளி, தீ, வெடித்தல் உள்ளிட்ட இயற்கையான அழிவுகளின் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு.

கொள்ளை, திருட்டு, விபத்து, வன்முறை, பயங்கரவாதம், சாலை போக்குவரத்து, ரயில், காற்று, நீர்வழிகள் மற்றும் பிற தீங்கிழைக்கும் நிகழ்வுகள் உள்ளிட்ட மனிதனால் உருவாகும் அழிவுகள் காரணமாக இருசக்கர வாகனத்தில் ஏற்படும் இழப்புகள் அல்லது சேதங்கள்.

தேய்மானங்கள் இல்லாத கூடுதல் கவரேஜ், தனிப்பட்ட உடமைகள் இழப்பு, மாற்றாக கார் நன்மைகள்.

ஓரியண்டல் டூவீலர் இன்சூரன்ஸின் நண்மைகள்

 • டி.வி.எஸ் மூலம் அவசரகால சர்வீஸ்களின் இலவச நன்மைகள்- இதுபோன்ற நிகழ்வுகளில் எந்த ப்ரேக்டவுன்கள் ஏற்பட்டாலும், அதற்கான அவசரகால சர்வீஸ் இலவசமாக கிடைக்கும்.
 • இந்தியா முழுவதும் உள்ள பாட்னர் கேரேஜ்களில் பணமில்லா சேவை கிடைக்கிறது.
 • தொந்தரவு இல்லாத இலவச க்ளைம் செட்டில்மெண்ட் ப்ராசெஸ் மற்றும் வாடிக்கையாளர் சேவை உதவி.
 • அதிகபட்ச பாதுகாப்புடன் விரிவான கவரேஜ்
 • உங்களின் தேவை மற்றும் கட்டாயம் பொறுத்து உங்களின் டூவீலர் இன்சூரன்ஸ் ப்ளான்ஸ்-ஐ கஸ்ட்மைஸ்(தனிப்பயனாக்கலாம்) செய்யலாம்.
 • உங்களின் பாலிசி வாங்குதல் மற்றும் புதுப்பித்தலை அவர்களின் ஆன்லைன் தளங்கள் எளிதாக்குகின்றன.
 • போட்டி விகித்தில் பிரீமியம் தொகையின் மீது ஈர்க்கக்கூடிய தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

ஓரியண்டல் டூவீலர் இன்சூரன்ஸ் மூலம் வழங்கப்படும் தள்ளுபடிகள்

 • தன்னிசையான விலக்கு – பாலிசிதாரர் எந்தவொரு க்ளைம் நிகழ்வின் போதும் குறிப்பிட்ட அளவிலான பகிர்வு தொகையை தனது சொந்த பாக்கெட்டில் இருந்து செலுத்துவதற்கு ஒப்புக் கொள்ளலாம். அதிக அளவிலான தன்னிச்சையான விலக்கு பிரீமியத்தில் அதிக தள்ளுபடிகளை அளிக்கும். 

தன்னிச்சையான விலக்கு

பிரீமியத்தில் தள்ளுபடி சதவீதம்

ரூ. 2,500

20% சொந்த சேதம் பிரீமியம் மீது, ரூ750 வரை

ரூ. 5,000

25% சொந்த சேதம் பிரீமியம் மீது, ரூ1,550 வரை

ரூ. 7,500

30% சொந்த சேதம் பிரீமியம் மீது, ரூ2000 வரை

ரூ. 15,000

35% சொந்த சேதம் பிரீமியம் மீது, ரூ2500 வரை

 • அன்டி தேஃப்ட் டிவைஸ் – நீங்கள் உங்களின் வாகனத்தில் அன்டி-தேஃப்ட் டிவைஸ்(திருட்டு எதிர்ப்பு சாதனம்) பொருத்தி இருந்தால், உங்களின் பிரீமியம் தொகையில் 5 சதவீதம் வரை தள்ளுபடி பெற தகுதி பெறுவீர்கள்.
 • ஆட்டோமொபைல் சங்க தள்ளுபடி – நீங்கள் ஆட்டோமொபைல் அஸ்சோசியேசன் ஆஃப் இந்தியாவின் உறுப்பினராக இருந்தால் உங்கள் பிரீமியம் தொகையில் தள்ளுபடி பெற முடியும்.
 • நோ க்ளைம் போனஸ் – ஒவ்வொரு ஆண்டிலும் க்ளைம் இல்லாத போது, ஒவ்வொரு ஆண்டிலும் உங்களின் புதுப்பிக்கும் பிரீமியத்தில் நோ க்ளைம் போனஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. 

ஓரியண்டல் டூவீலர் இன்சூரன்ஸில் சேர்ந்த கவர்கள் 

 • தேய்மானம் இல்லாத கவர் : இந்த தேய்மானம் விகிதமானது எந்தவொரு க்ளைம் செயல்முறையின் நேரத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத வாகனத்தின் வயதினை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், தேய்மான காரணிகளுக்கு இந்த கவரேஜ் விலக்கு அளிக்கிறது மற்றும் இதனை தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் உங்களின் பாக்கெட்களில் இருந்து  பணத்தை செலவழிப்பதை தவிர்க்கிறது.
 • தனிப்பட்ட உடைமைகளின் இழப்புகளுக்கு கவர் : ஒருவேளை உங்களின் தனிப்பட்ட உடைமைகளான செல்போன், கம்ப்யூட்டர், டேப்லேட்ஸ், ஐ-பாடு முதலியவற்றை இழக்க நேர்ந்தால், நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளின் படி ரூ.5000 முதல் ரூ.10,000 வரையிலான விலை அளவிற்கு இழப்பீடுகளை பெறலாம்.
 • மாற்றாக கார் நன்மைகள் : உங்கள் வாகனத்தை குறிப்பிட்ட கால பகுதிக்கு பழுதுப்பார்த்தல் செலவுகளுக்கு பயன்படுத்தவில்லை என்றால் ஓரியண்டல் இன்சூரன்ஸ் உங்களுக்கு மாற்று வாகனத்திற்கு 15 நாளைக்கு வீதம் நாள் ஒன்றுக்கு ரூ.400 அல்லது ரூ.600 வரை வழங்குகிறது. 

ஓரியண்டல் டூவீலர் இன்சூரன்ஸ் க்ளைம் செட்டில்மெண்ட்

விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய க்ளைம் செயல்முறைகள் பின்வருமாறு,

 • விபத்தில் சம்பந்தப்பட்ட அல்லது சாட்சியின் வாகன எண் மற்றும் அலைபேசி தொடர்பு எண்ணை வாங்கிக் கொள்ளவும். சேதங்கள் ஏற்படும் பொழுது இந்த தகவல்களுடன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும்.
 • ஓரியண்டல் இன்சூரன்ஸின் வாடிக்கையாளர் சேவை துறையுடன் தொடர்பில் இருக்கவும். அந்த ஊழியர் க்ளைம் தாக்கல் செய்ய சரியான விதிமுறைகளை மேற்கொள்ள உங்களுக்கு உதவுவார்.
 • பணமில்லா க்ளைம்களுக்கு, உங்களின் அனைத்து ஆவணங்களையும் கேரேஜில் சமர்பிக்க வேண்டும். க்ளைம்க்கான தொகை கணக்கிடப்பட்டு, அதற்கான அனுமதி அளிக்கப்பட்ட உடன் நேரடியாக கேரேஜ்க்கு செலுத்தப்படும். ஏதேனும் கூடுதல் தொகை மட்டும் இருந்தால் அதனை பாலிசிதாரர் செலுத்த வேண்டும்.
 • பிற க்ளைம்களுக்கு, கேரேஜில் இருந்து உங்களின் வாகனத்தின் அனைத்து பழுதுப்பார்த்தல் மற்றும் சேதத்திற்கான பில்களை பெற்றுக் கொள்ளவும். அனைத்து பில்கள் மற்றும் பிற ஆவணங்களையும் நிறுவனத்திடம் சமர்பிக்கவும். இந்த நிறுவனம் செலவினங்களை திருப்பி அளிப்பதோடு, உங்களுக்கான தொகையையும் அளிக்கிறது. 

கீழ்காணும் குறிப்பிட்ட விலக்குகளுக்குள் நுழையும் பட்சத்தில் உங்களின் கவரேஜ்கான க்ளைம் மறுக்கப்படலாம் 

 1. உங்களின் ஓட்டுனர் ஏதாவது சேதத்தை ஏற்படுத்திய போது சரியான ஓட்டுனர் உரிமம் பெறவில்லை என்றால்.
 2. மெக்கானிக்கல் அல்லது எஞ்சின் பழுது காரணமாக ஏற்படும் விபத்துகள்
 3. ஓட்டுனர் எந்தவிதமான போதையில் வாகனம் ஓட்டியது  கண்டுபிடிக்கப்பட்டால்
 4. உங்களின் வாகனம் சரியான சூழ்நிலையில் பயன்படுத்தப்படவில்லை என்றால், வாடகைக்கு பைக் எடுத்து செலுத்தல், சோதனைகள் அல்லது பந்தயத்தில் பயன்படுத்துதல்.
 5. வாகனம் திருடப்பட்டதை தவிர்த்து வாகனத்தை திருட முயற்சிக்கும் போது வாகனம் சேதமடைந்தால்
 6. போர், அணுசக்தி அல்லது பயங்கரவாதம் காரணமாக பைக்கிற்கு ஏற்படும் சேதங்கள் அல்லது இழப்புகள்
 7. நேபாளம், பூட்டான், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா மற்றும் மாலத்தீவுகள் போன்ற இந்தியாவிற்கு வெளியே உள்ள பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு, கூடுதல் பிரீமியம் செலுத்தப்படாத வரை
 8. படிப்படியாக டயர் அல்லது டியூப்களில் ஏற்படும் சேதங்கள்( விபத்தில் இந்த சேதங்கள் ஏற்பட்டால் 50% அளவிலான மதிப்பிற்கு க்ளைம் தொகை ஏற்றுக் கொள்ளப்படும்)
 9. வாகனத்தின் வயதின் காரணமாக தேய்மான இழப்புகள் அல்லது அதன் விளைவாக ஏற்படும் பிற இழப்புகளின் போது வாகனத்தின் மதிப்பு குறையலாம். 

ஆன்லைனில் ஓரியண்டல் இன்சூரன்ஸ் வாங்குவது எப்படி?

அனைத்து வாடிக்கையாளர்களின் வசதிக்காக, ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆன்லைன் மூலம் கிடைக்கப் பெறுகிறது மற்றும் அவர்களின் இணையதளத்தின் வழியாக அனைத்து பாலிசிகளை புதுப்பிக்கவும் முடிகிறது. பின்வரும் படிநிலைகளின் மூலம், வாடிக்கையாளர்கள் நேரத்தை சேமிக்கலாம் மற்றும் உங்களின் வீட்டில் அமர்ந்தப்படியே பாலிசியை பெறலாம். இதில் எந்தவொரு இடைத்தரகர்கள் அல்லது ஏஜென்ட்கள் இல்லாமல் உங்களுக்கு விருப்பமான ப்ளான்களை தேர்வு செய்து உங்களுக்கென தனிப்பயனாக்கலாம்(கஸ்ட்மைஸ்). ஆன்லைனில் இருக்கும் கருவிகளின் உதவியுடன் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையை நீங்களே கணக்கிட முடியும்.

 1. முதலில் வாங்க வேண்டிய பாலிசியை நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து தேர்வு செய்யுங்கள்
 2. உங்களின் தனிப்பட்ட விவரங்களை சரியாக டைப் செய்ய வேண்டிய இன்சூரன்ஸ் விவரங்கள் பக்கத்தில் நீங்கள் வழிநடத்தப்படுவீர்கள்.
 3. உங்களின் விவரங்களுடன், உங்களின் பிரீமியம் தொகை கணக்கிடப்படும் மற்றும் உங்களை பிரீமியம் கணக்கிடும் பக்கத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள்.
 4. கணக்கிடுதல் முடிவடைந்த பிறகு, இறுதியான செலுத்த வேண்டிய தொகை அறிவிக்கப்படும்
 5. இப்பொழுது பணம் செலுத்தும் முறையைத் தொடர வேண்டும் மற்றும் விசா/மாஸ்டர் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் நீங்கள் பணம் செலுத்த முடியும்.
 6. பாதுகாப்பான பணம் செலுத்தும் கேட்வே வழியாக பணம் செலுத்திய பிறகு, நீங்கள் உறுதிச்செய்யவும் பக்கத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள். வாழ்த்துக்கள்! நீங்கள் டூவீலருக்கான இன்சூரன்ஸ் பாலிசியை சிறப்பாக வாங்கியுள்ளீர்கள்.
 7. நீங்கள் பதிவு செய்ய உங்களின் முகவரிக்கு இன்சூரன்ஸ் பாலிசியின் காகித வடிவிலான நகல் பதிவு அஞ்சலக அனுப்பப்படும்.
 8. பாலிசி வாங்கியதை குறிக்க நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அறிவிப்பின் வடிவில் தகவல் அனுப்பப்படும்.
 9. இணையதளத்தில் உங்களின் கணக்கிற்கு சொந்தமாக உள்நுழையவும் சான்றுகளை வைத்திருப்பீர்கள். ஆகையால், அடுத்தமுறை பாலிசியை எளிதாக புதுப்பிக்க முடியும்.

ஓரியண்டல் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்குவதில் விரைவானது மற்றும் பயனுள்ளது, மேலும் தொந்தரவு இல்லாமல் இலவசமாக மற்றும் மென்மையான செயல்முறை உடன் உள்ளது.

- / 5 ( Total Rating)