ரிலையன்ஸ் டூவீலர் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

நம் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நடுத்தர மக்களின் வாழ்க்கையில் வேலை செய்வது மட்டுமல்லாமல், மிகவும் வசதியான மற்றும் எளிதான பயண வழியாக இருசக்கரங்கள் பொருந்திய மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. கொடுக்கப்பட வேண்டியவர்கள் மற்றும் வைத்திருப்பவர்கள் என மிகப்பெரிய இடைவெளி மக்களிடையே உள்ள நாட்டில் போக்குவரத்திற்காக டூவீலர் பரவலாக பிரபலமாகி உள்ளது. இதனால், டூவீலர் மோட்டார் பைக்குகள் வைத்து இருக்கும் தனி நபர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவே உள்ளது.

இருப்பினும், பைக் மற்றும் பிற இருசக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்வது தொடர்பான விழிப்புணர்வுகள் முற்றிலும் ஏமாற்றத்தை அளிக்கிறது. உண்மையில், இந்த விழிப்பில்லாத பார்வை என்பது குறிப்பாக இருசக்கர வாகன இன்சூரன்ஸ் மட்டும் இல்லை, மேலும் அனைத்து பிற வாகனங்களின் உடைமைக்கும் உள்ளடக்கியது. இன்சூரன்ஸ் பத்திரத்தை குறிப்பிடத்தக்க ஆவணங்கள் என பராமரிக்க வேண்டிய கட்டாயமில்லை என இருந்தது, யாரும் நேரடியாக அதிகளவில் கவனம் செலுத்தாமலும் இருந்தனர்.

ஆனால் அறியாமை எனும் எண்ணத்தை ஒதுக்கி, பல்வேறு காரணங்களுக்காக வாகனங்கள் இன்சூரன்ஸ்-ஐ உள்ளடக்கி இருப்பது அத்தியாவசியம் மற்றும் பாதுகாப்பு கவசம் என்பதை முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டும்.

முதலில், எந்தவொரு எதிர்பாராத விபத்து உள்ளிட்டவை நிகழ்வதற்கு எதிராக ஒரு உயிர்ப்பானதாக இருக்கும் ஒன்றாக இவை செயல்படுகிறது. அத்தகைய துரதிர்ஷ்டவசமாக சம்பவங்களை யாராலும் முன்கூட்டியே அளவிட முடியாது. ஆகையால், அனைத்து முரண்பாடான நிகழ்வுகளுக்கு முன்பு தயாராக இருக்க வேண்டும் என்பது அறிவுடைமையாகும்.

ஒரு இன்சூரன்ஸ் ப்ளான் ஆனது பாதுகாப்பு மற்றும் நன்கு அறிந்ததாக இருக்க வேண்டும் என்று பேசுகையில், வசதியான அனைத்து சுற்றுகளையும் மற்றும் விரிவான டூவீலர் இன்சூரன்ஸ் தொகுப்பு கொண்ட அத்தியாவசியமானதாக இருக்க வேண்டும். அத்தகைய இன்சூரன்ஸ் உதவியை அளிக்கும் வகையில் சேவை வழங்குபவர் ரிலையன்ஸ் டூவீலர் இன்சூரன்ஸ்.

ரிலையன்ஸ் கேபிடல் லிமிட்டெடின் ஒரு அங்கமான, ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் ஆனது உயிர்கள் அல்லாத இன்சூரன்ஸ் துறையான இருசக்கர வாகன இன்சூரன்ஸ், நான்கு சக்கர வாகன இன்சூரன்ஸ் மற்றும் பிற பொது கூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பரவி வருகிறது. இது பொது காப்பீட்டு தொழிலில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும்.   

ரிலையன்ஸ் டூவீலர் இன்சூரன்ஸ் கீழ் வழங்கப்படும் கவரேஜின் விரிவாக்கம்

ரிலையன்ஸ் டூவீலர் இன்சூரன்ஸ் கீழ் ஒரு பொதுவான இன்சூரன்ஸ் ப்ளான் ஆனது விபத்துக்கள் அல்லது பிற காரணங்களால் ஏற்படும் எந்தவொரு இழப்புகள் அல்லது சேதங்களை தூண்டும் சம்பவங்களுக்கு கவரேஜ்(பாதுகாப்பு) அளிக்கிறது. மேலும், சேதங்களின் கூடுதல் செலவினங்களின் காரணங்களால் ஏற்படும் இழப்புகளுக்கு அளிப்பதற்கு மட்டுமல்லாமல், உரிமையாளர் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கும் கவரேஜ் நீட்டிக்கப்படுகிறது.

இத்தகைய, ப்ளான் ஆனது பின்வரும் காரணங்களால் ஏற்படும் சேதங்கள் அல்லது இழப்புகளுக்களில் இருந்து உங்களின் டூவீலருக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

இயற்கையான அழிவுகளான :

 • சூறாவளி
 • புயல்
 • மின்னல்
 • வெள்ளம்
 • நிலநடுக்கம்
 • இனன்டேஷன்

மனிதனால் உருவாகும் அழிவுகளான : 

 • விபத்து
 • தானாக பற்றிக்கொள்ளுதல்
 • தீங்கிழைக்கும் செயல்கள்
 • கலவரங்கள் அல்லது பிற உள்நாட்டு குழப்பங்கள்
 • வேலைநிறுத்தம்
 • திருட்டு 

இந்த திட்டத்தின் கீழ் என்ன அம்சங்கள் உள்ளடங்காது?

இன்சூரன்ஸ் சர்வீஸ் வழங்குபவரால் ஏராளமான விலக்குகள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அவை பின்வரும் நிகழ்வுகளில் நடக்கும் பொழுது, சேதங்களுக்கான எந்தவொரு க்ளைம் தொகையையும் பாலிசிதாரர் பெற முடியாது. அத்தகைய விலக்குகள்:

 • எலெக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் பிரேக்டவுன்
 • வழக்கமாக நிகழும் வாகனத்தின் தேய்மானங்கள்
 • நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட எல்லைகள் மற்றும் வரம்புகளுக்கு அப்பாற்பட்டு வாகனத்தை உபயோகித்தல்.
 • தகுதி இல்லாத ஓட்டுனர் மூலம் வாகனம் இயக்கப்படுவது. உதாரணமாக, தனிநபர் தகுதியான டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் இயக்குவது.
 • மது அல்லது போதைப் பொருட்கள் பயன்படுத்தி தன்னிலை இன்றி வாகனத்தை இயக்குவதன் காரணமாக ஏற்படும் இழப்புகள்
 • வாகனத்தின் மதிப்பு குறைவதன் காரணமாக ஏற்படும் இழப்புகள்
 • தொடர்ச்சியாக நிகழும் இழப்புகளுக்கு கவரேஜ்-ல் இருந்து விலக்கப்படுகின்றன. உதாரணமாக, அசல் இழப்புகள் காரணமாக ஏற்படும் இழப்புகள். அத்தகைய நேரத்தில், அசல் இழப்பு மட்டும் கவர் செய்யப்படும்.
 • காப்பீட்டாளரிடம் இருந்து கட்டாயம் கழித்தல் தொகையை க்ளைம் செய்ய முடியாது. இது பைக் அல்லது ஸ்கூட்டர் இன்சூரன்ஸ் க்ளைம் நேரத்தில் பெறப்படும் நிலையான தொகையைக் குறிக்கிறது.

ப்ராடேக்ட்களின் வகைகள் - ரிலையன்ஸ் டூவீலர் இன்சூரன்ஸ்

ரிலையன்ஸ் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் இரண்டு வகைகள் இங்கு உள்ளன.

ஒன்று பேக்கேஜ் பாலிசி மற்றும் மற்றொன்று தர்டு பார்ட்டி லியபிலிட்டி மட்டும் பாலிசி.

தர்டு பார்ட்டி லியபிலிட்டி(மூன்றாம் தரப்பினர் பொறுப்பு) என்ற வகை மட்டும் சட்டவிதிப்படி கட்டாயமாகிறது. இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்தின் மூலம் மூன்றாம் தரப்பினரின் வாகனம் சேதமடைவது மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் சேதங்கள் இதில் உள்ளடங்கும். இந்த மூன்றாம் தரப்பினர் இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்திற்கான சேதங்களுக்கு க்ளைம் பெறலாம். எனினும், காப்பீட்டாளர் தன் சொந்த வாகனத்திற்கு அல்லது தனக்கு ஏற்படும் சேதங்களுக்கான க்ளைம் பெற முடியாது.

பேக்கேஜ் மட்டும் என்பது தர்டு பார்ட்டி லியபிலிட்டி மட்டும் பாலிசி மற்றும் பொது இன்சூரன்ஸ் ப்ளானின் அனைத்து அம்சங்களையும் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விரிவான இன்சூரன்ஸ் ப்ளான் ஆகும். இதனால், இவை பேக்கேஜ் பாலிசி என அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், அவள்/அவன் அல்லது வாகனத்தினால் ஏற்படும் சேதங்கள் அல்லது இழப்புகள் அனைத்திற்கும் எதிராக பாலிசிதாரர் பாதுகாக்கப்படுகிறார்.  

ரிலையன்ஸ் டூவீலர் இன்சூரன்ஸின் நன்மைகள்

இந்த பாலிசியை இன்றியமையாத ஆக்கும் ஆயத்தமான அம்சங்கள் : 

 1. பாலிசிகளை, சில திறவுகோலை க்ளிக் செய்தவன் மூலம் எளிதாகவும் மற்றும் திறமையாகவும் வாங்கிட முடியும். ப்ளான்களை ஆன்லைனில் வாங்குவதற்கான வசதியானது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இதனால், பேடிஎம், நெட் பேங்கிங் மற்றும் பிளாஸ்டிக் கார்டுகள் வழியாக பாலிசியை வாங்கவும் மற்றும் பிரீமியம் தொகையை ஆன்லைன் வழியாக செலுத்தவும் செய்யலாம். 
 2. பாலிசிகள் வாங்குவதில் ஈடுபட்டுள்ள காகித வேலைகள் ஆனது வியக்கத்தக்க வகையில் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், உங்கள் வாகன காப்பீடு செய்வதில் எந்த தடைகளும், தாமதங்களும் இல்லை.
 3. இந்த க்ளைம் செட்டில்மெண்ட் ப்ராசெஸ் ஆனது சிக்கல்கள் மற்றும் எவ்வித ஓட்டைகளில் இருந்தும் விடுபடுகிறது. இது எளிதானது மற்றும் சேதம் மற்றும் இழப்புகளுக்கு உடனடியாக ஈடுசெய்தலை வழங்குகிறது.
 4. நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் குறிப்பிட்ட நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இருக்கும் கேரேஜ்களில் பணமின்றி க்ளைம் வசதியைப் பெறலாம்.
 5. வாகனத்தின் ஐ.டி.வி உதவியுடன் பிரீமியம் கணக்கிடப்படுகிறது.  அதாவது, காப்பீட்டு விலை மதிப்பு. பல்வேறு சேவை வழங்குபவர்கள் வாகனத்தின் வெவ்வேறான ஐ.டி.விகளை கணக்கீடுகின்றனர். இதனால், பல்வேறு நிறுவனங்களுக்கு பிரீமியம் வேறுபடலாம். காப்பீடு விலை மதிப்பின்(இன்ஷூர்டு டிக்லர்டு வல்யூ) நேரடியாக விகிதாசாரத்தின் அடிப்டையில் பிரீமியம் தொகை கணக்கிடப்படுகிறது.

கவர் உடன் சேர்க்கப்பட்டவை(அட் ஆன் கவர்)

தனிப்பயனாக்கப்பட்ட(கஷ்டமைஸ்) பாலிசி உங்களின் தேவை மற்றும் பட்ஜெட்களுக்கு சாத்தியமானது. சில அம்சங்களை பாலிசி உடன் இணைப்பதன் மூலம் பாலிசியின் அடிப்படை அம்சங்களை  மேம்படுத்த முடியும். நிச்சயமாக, அத்தகைய கூடுதலாக இணைக்கப்பட்ட கவரைப்(அட் ஆன் கவர்) பெற கூடுதலாக பிரீமியம் கூட தேவைப்படலாம்.

எனவே, பாலிசியில் சேர்க்கக்கூடிய இரு விருப்பமான அட் ஆன் கவர்கள் உள்ளன.

தேய்மானம் இல்லா கவர் : ப்ரீமியம் தொகையில் சிறிதளவு அதிகரிப்பதன் மூலம், ஒரு தேய்மானம் இல்லா பாலிசிக்கு இணைக்கப்பட்ட கவரினை பெற முடியும். தேய்மான அடிப்படையில் பூஜ்ஜிய கழித்தலை இந்த அம்சம் குறிப்பிடுகிறது. இதன் அர்த்தம், காப்பீட்டின் க்ளைம் தொகை எந்தவொரு குறைப்பு இன்றியும் முழுவதுமாக கொடுக்கப்படுகிறது. ஒருவேளை மிகப்பெரிய க்ளைம் நிகழ்வில், இழப்பீட்டின் தொகை மிகப்பெரியதாக இருக்கும், அப்பொழுது இந்த அம்சம் நம்மை அளிக்கும் என நிரூபிக்கும்.

இந்த கவரின் அம்சங்கள் 

 1. ரப்பர், நைலான் மற்றும் பைபர்கிளாஸ் ஆகியவற்றை தவிர்த்து கட்டப்பட்ட வாகனத்தின் பாகங்கள் பாதுகாக்கப்படும்.
 2. இரண்டு வருடங்கள் அல்லது இரண்டு வருடங்களுக்கு குறைவான வாகனங்களுக்கு கவரேஜ் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 3. ரப்பர் உதிரிபாகங்களான டியூப் மற்றும் டயர் ஆகியவை இணைக்கப்பட்ட கவருடன் கவர் செய்யப்படாது 
 4. திருட்டு க்ளைம் மற்றும் ஆக்கபூர்வமான மொத்த இழப்புகள் விலக்கப்பட்டது.
 5. இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நபரின் வாகனத்திற்கு மட்டுமே க்ளைம் செட்டில்மெண்ட் செய்யப்படும்.
 6. நிறுவனத்தால் குறிப்பிடப்பட்ட நெட்வொர்க் கீழ் உள்ள கேரேஜ்களில் ஏதோ ஒன்றில் சேதங்களுக்கான பழுதுப்பார்த்தல் மேற்கொண்டால் மட்டும் தொகை செலுத்தப்படும்.
 7. காப்பீட்டாளரால் அங்கீகரிக்கப்படாத வாகன உதிரி வாகனங்கள் நிராகரிக்கப்படும் மற்றும் பாலிசியின் விதியில் சேர்க்கப்படாது.  

பெர்ஸ்னல் அக்சிடென்ட் பண்டேல் கவர் : இறப்பு மற்றும் நிரந்தர மொத்த உடல் இயலாமைகளுக்கு எதிராக பொருளாதார பாதுகாப்பை இந்த கவரேஜ் வழங்குகிறது. யார் வாகனத்தை இயக்கி இருந்தாலும் மற்றும் விபத்து நடந்த இடம் எதுவாக இருந்தாலும் கூட க்ளைம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

வாகனத்தில் ஏற்படும் சேதங்களின் வரம்புகளின் படி இழப்பீடுகள் வேறுபடுகிறது.

உறுதியளிக்கப்பட்ட மூலதன தொகை ரூ.5 லட்சம். இறப்பு அல்லது நிரந்தரமான மொத்த இயலாமை, இரு பார்வை திறன் குறைப்பாடு அல்லது மூட்டுகள் இழப்பு மற்றும் ஒரு கண் இழப்பு மற்றும் ஒரு மூட்டு இழப்பு நிகழ்வின் போது 100 சதவீதம் இழப்பீடுகள் வழங்கப்படும். ஒரு கண் இழப்பு அல்லது ஒரு மூட்டு இழப்பு ஏற்படும் பொழுது 50 சதவீத இழப்பீடுகள் வழங்கப்படும்.

எந்தவொரு அடிப்படை இன்சூரன்ஸ் கவரிலும் ஓர் பகுதியாக இல்லை என்பதால் இது அதிகம் பரிந்துரைக்கும் அட் ஆன் கவர்(இணைக்கப்பட்ட கவர்) ஆகும்.

நோ க்ளைம் போனஸ் மற்றும் தள்ளுபடிகள்

ஒரு ஆண்டில் க்ளைம் பெறப்படாத போது தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தள்ளுபடி அட்டவணை அளிக்கப்படும்.

ஆண்டுகளின் எண்ணிக்கை

தள்ளுபடிகள்

 1. க்ளைம் இல்லாத ஆண்டு

20%

 1. தொடர்ச்சியான க்ளைம் இல்லாத ஆண்டு

25%

 1. தொடர்ச்சியான க்ளைம் இல்லாத ஆண்டு

30%

 1. தொடர்ச்சியான க்ளைம் இல்லாத ஆண்டு

35%

 1. தொடர்ச்சியான க்ளைம் இல்லாத ஆண்டு

40%

தன்னிச்சையாக குறைத்துக் கொள்ளுதல் என்ற வசதியும் அளிக்கப்படுகிறது. இது குறைந்த அளவு தொகை இன்சூரன்ஸ் செய்யப்பட்டவர் அளிக்க, மீதமுள்ளதை காப்பீடு செய்யப்பட்ட நிறுவனம் அளிப்பதை குறிக்கிறது. இன்சூரன்ஸ் செய்தவரின் அதிகபட்ச தன்னிச்சையான குறைத்தல், டூவீலர் ப்ரீமியம் தொகையை குறைக்கச் செய்யும். எனவே திறம்பட, பிரீமியம் தொகை தள்ளுபடி செய்யக்கூடும். தொகை குறைத்தல் மற்றும் தள்ளுபடிகள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தன்னிச்சையாக குறைத்தல்

தள்ளுபடி சதவீதம்

ரூ.500

5%  (ரூ.50 வரை வரையறுக்கப்பட்டது)

7ரூ.501

10% (ரூ.75 வரை வரையறுக்கப்பட்டது)

ரூ.1000

15% (ரூ.125 வரை வரையறுக்கப்பட்டது)

ரூ.1500

20% (ரூ.250 வரை வரையறுக்கப்பட்டது)

- / 5 ( Total Rating)