ராயல் சுந்தரம் டூவீலர் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

நம் பயணத்தின் போது எந்நேரத்தில் எந்த மாதிரியான விபத்துக்கள் நிகழும் என்பதற்கான உத்திரவாதம் இல்லை. ஆகையால், எந்நேரத்திலும் திடீரென எழக்கூடிய சாத்தியமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தயாராக இருத்தல் உண்மையில் சிறந்தது.

மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் போன்ற இருசக்கர வாகனங்களை சொந்தமாக மற்றும் இயக்கும் நபர்களே பொதுவாக வாகன விபத்துக்களில் அதிக ஆபத்துகளில் இருப்பதாக நம்பப்படுகிறது - இது வாகன ஓட்டுனர் மற்றும் வாகனம் ஆகிய இருவருக்கும் தீங்கு விளைவிக்கும். எனவே, ராயல் சுந்தரம் உங்கள் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கி சேதமடைந்தால் அதற்கு எதிரான அனைத்து செலவினங்களையும் கையாள ஓர் தீர்வைக் கொண்டுள்ளது. இங்கே, நீங்கள் ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் பற்றிய முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.

ராயல் சுந்தரம் ஜென்ரல் இன்சூரன்ஸ் ஆனது இன்சூரன்ஸ் தொழில்களில் நல்ல காரணங்களுடன் புகழ்பெற்று விளங்குகிறது. ஏனெனில், நிச்சயமாக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர்கள் நன்றாக அறிவார்கள். சுந்தரம் பினான்ஸ் உடைய கிளை நிறுவனமான ராயல் சுந்தரம் ஜென்ரல் இன்சூரன்ஸ் உண்மையில் 2000-ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் ஐ.ஆர்.டி.ஏ மூலம் உரிமம் பெற்ற முதல் நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனமானது, ஹெல்த் இன்சூரன்ஸ், ஹோம் இன்சூரன்ஸ்,  மோட்டார் இன்சூரன்ஸ் அதேபோல் தனிப்பட்ட விபத்துக்கள், ட்ராவல் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பரவலான வரம்புகளில் இன்சூரன்ஸ்களை வழங்குகிறது.

இந்த இன்சூரன்ஸ் ஆனது தனிப்பட்ட, கார்ப்பரேட் வணிகங்கள், குடும்ப அங்கத்தினரின் வழியாக குடும்பத்திற்கு நேரடியாக செல்வது போன்றவை ராயல் சுந்தரம் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. மக்களின் தேவை மற்றும் கோரிக்கைகளை கையாளுவதில் பத்தாண்டுகளுக்கும் மேலான சிறந்த அனுபவத்தை கொண்டிருக்கிறது. அனைவரின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்ட ராயல் சுந்தரம் மூலம் உருவான அனைத்து இன்சூரன்ஸ் பாலிசிகளும் முற்றிலும் பாதுகாப்பானது எனக் கூறப்படுகிறது.

நீங்கள் ஏன் வாங்க வேண்டும் ராயல் சுந்தரம் டூவீலர் இன்சூரன்ஸ்?

உங்களின் இருசக்கர வாகனத்திற்கான இன்சூரன்ஸ் எதிர்பாராத நிகழ்வுகளில் இருந்து உங்களை பாதுகாக்கிறது என்ற உண்மையைத் தவிர, ராயல் சுந்தரம் டூவீலர் இன்சூரன்ஸில் செய்யும் முதலீடு பல்வேறு கூடுதல் நன்மைகளை கொண்டுள்ளன. நீங்கள் முன்னோக்கி செல்வதற்கான முக்கிய காரணங்கள் சில:

 • ராயல் சுந்தரம் டூவீலர் இன்சூரன்ஸ் என்பது உங்களின் வாகனத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒரே இன்சூரன்ஸில் கவர் செய்யும் இன்சூரன்ஸ் பாலிசியாகும்.
 • வாடிக்கையாளர்கள் தங்களின் தற்போதைய இன்சூரன்ஸ் பாலிசியை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கூடுதல் காலத்திற்கு புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு ஏற்கனவே இருக்கும் பாலிசி வேறு எந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்தும் கூட இருக்கலாம். 
 • ராயல் சுந்தரம் டூவீலர் இன்சூரன்ஸ் ஆனது உங்களின் வாகனம், உதிரி பாகங்கள், மேலும், மற்றொருவரின் அல்லது ஈடுபடும் அனைத்து மூன்றாம் தரப்பினரின் வாழக்கை மற்றும்/அல்லது உடைமைகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கு எதிராக உங்களை பாதுகாக்கிறது.
 • ஒருவேளை, நீங்கள் வேறு ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ள விரும்பினால், ஆன்லைனில் உங்களால் செய்யக்கூடிய எளிதான அறிவிப்பு மூலம், உங்களின் விருப்பப்படி ராயல் சுந்தரம் இல் இருந்து பிற இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்வது மிகவும் எளிதானது ஆகும்.
 • அனைத்து க்ளைம் செட்டில்மெண்ட்களும் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து நிறுவனத்தின் வேலை நாட்களான 10 நாட்களுக்குள் கையாளப்படும் மற்றும் வெற்றிகரமாக முடித்து வைக்கப்படும். 

அம்சங்கள் மற்றும் நன்மைகள் ராயல் சுந்தரம் டூவீலர் இன்சூரன்ஸ்

ராயல் சுந்தரம் டூவீலர் இன்சூரன்ஸ் ஆனது பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டு இருப்பது மட்டுமல்லாமல், டூவிலர் உரிமையாளருக்கான சிறந்த விஷயங்களை விட அதிக அளவிலான நன்மைகளை கொண்டிருக்கிறது. ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் பாலிசி மூலம் வழங்கப்படும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் மற்றும் நன்மைகள் :

 1. வாடிக்கையாளர்கள் ஒருமுறை பணம் செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பைப் பெறுகின்றனர். அதாவது, அவர்கள் விரும்பினால் பாலியின் தொடக்க காலத்தின் போது மாதாந்திர தொந்தரவுகளை தவிர்ப்பதற்கு பாலியின் முழு காலத்திற்கும் சேர்த்து அனைத்து கட்டணங்களையும் அவர்கள் செலுத்த முடியும்.
 2. ராயல் சுந்தரம் டூவீலர் இன்சூரன்ஸ் ஆனது ஒரே பாலிசியில் உங்கள் வாகனத்தை மூன்று ஆண்டுகள் வரை கவர் செய்கிறது. அதாவது, ஆண்டுக்கு ஒருமுறை உங்கள் வாகனத்திற்கான இன்சூரன்ஸ் புதுப்பித்தல் பிரச்சனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
 3. உங்களின் நோ க்ளைம் போனஸ் அனைத்து நேரங்களிலும் உங்களை பாதுகாக்கிறது. அதாவது, வாடிக்கையாளர் பாலிசியின் க்ளைம் தாக்கலை சரியாக  பாலிசியின் முழு காலத்திற்கும் சேர்த்து ஒருமுறை மட்டும் செய்து இருந்தால் கூட , அவர்களுக்கு எஞ்சியுள்ள பகுதிக்கு நோ க்ளைம் போனஸ் பாதிக்கப்படுவதில்லை.
 4. இருசக்கர வாகனத்திற்கான ராயல் சுந்தரம் பாலிசி ஆனது உங்களின் பாலிசி காலத்தில் ஏற்படும் பணவீக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. மூன்றாம் தரப்பினருக்கான பிரீமியம் எந்தவிதமான அதிகரிப்பு இருக்க வேண்டி இருந்தாலும், உங்கள் பாலிசியின் மீதமுள்ள காலத்திற்காக செலுத்தக்கூடிய பிரீமியம் தொகை மாறாமல் உள்ளது.
 5. உங்களின் ராயல் சுந்தரம் டூவீலர் இன்சூரன்ஸ் பாதையில் பயணிக்க லட்சக்கணக்கான ஆவணங்கள் ஏதும் வைத்திருக்க தேவையில்லை. பாலிசி துவக்க நேரத்தில் ஒரேயொரு ஆவணம் மட்டும் வழங்கப்படும். அந்த ஆவணமே உங்கள் பாலிசி காலத்தின் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

ராயல் சுந்தரம் டூவீலர் இன்சூரன்ஸ் கவரேஜ்

ராயல் சுந்தரம் டூவீலர் இன்சூரன்ஸ் மூலம் இயற்கையால் ஏற்படக்கூடிய பேரழிவுகள் மற்றும் மனிதனால் உருவாக்கப்படும் பேரழிவுகளின் போது அதற்கு எதிராக உங்களின் இருசக்கர வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்குகிறது. இந்த இயற்கை பேரழிவுகள் என்பது தீ, நிலநடுக்கம், வெள்ளம், சூறாவளி, பனி, புயல், வெடிப்பு, பனிமழை, பெருங்காற்று, நிலச்சரிவு மற்றும் பாறைச்சரிவு உள்ளிட்டவையாகும்.

மறுபுறம், மனிதரால் உருவாகும் பேரழிவுகளான, கொள்ளை, திருட்டு, கலவரம், பயங்கரவாத தாக்குதல், பயணிக்கும் வெளிநபர் மூலம் விபத்து, சாலையில் செல்லும் பொழுது ஏற்படும் பாதிப்புகள், உள்நாட்டு நீர்வழி, ரயில், விமானம் அல்லது எலிவேட்டர் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த பாலிசியானது மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் எந்தவொரு உடல் காயங்கள் அல்லது மரணம் போன்ற நிகழ்வுகளின் போது எல்லையற்ற பொறுப்பிற்கான பாதுகாப்பை வழங்குகிறது. மூன்றாம் தரப்பினரின் உடைமைகளில் ஒருவேளை சேதமடைந்தால் முன் காப்பீட்டில் இருந்து  பண வரம்பு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். மேலும், இந்த காப்பீட்டு நிறுவனம் தனிப்பட்ட விபத்து கவர் ஆக ரூ.1 வரை வழங்குகின்றன.

நீங்கள் ஆட்டோமொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் உறுப்பினராக இருந்தால், உங்களின் சொந்த சேத பிரீமியத்தில் 5 சதவீத அளவிற்கு தள்ளுபடி பெறுவீர்கள். மேலும், ராயல் சுந்தரம் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி வாகனத்தில் பின்னிருக்கையில் அமர்ந்து வரும் பயணிக்கும் பாதுகாப்பு வழங்குகிறது.

க்ளைம் பெறுவது எப்படி?

ராயல் சுந்தரம் டூவீலர் இன்சூரன்ஸிற்கு உட்படுத்தப்படும் ஆயத்தமான அம்சங்கள் இன்றியமையாததாக உள்ளன. எளிதாக ஒரு இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது போல், பாலிசி பணத்தின் மீது க்ளைம் பெறுவதும் எளிதாகும். ஒரு க்ளைம் தாக்கல் ஆனது ஈமெயில் அல்லது டெலிபோன் மூலம் விண்ணபிக்கலாம் மற்றும் உங்களின் இன்சூரன்ஸ் பாலிசியுடன் தொடர்புடைய அனைத்து பொருத்தமான விவரங்களையும் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும்.

 1. இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து வரும் ஏஜென்ட் ஒருவர் வாகனத்தை ஆராய்வதற்கு முன் எந்தவொரு வகையிலும் வாகனத்தில் இருக்கும் சேதங்கள் பழுதுப்பார்த்தல் செய்யப்பட மாட்டாது.
 2. பாலிசிதாரர் க்ளைம் பெறுவது தொடர்பாக கோரிக்கை தாக்கல் செய்யும் பொழுது வாகனத்திற்கான ஒரு சர்வே ஏற்பாடு செய்யப்படுகிறது. சர்வே நடத்தப்பட்டபின், தேவையான அனைத்து பழுதுப்பார்ப்புகள் மற்றும் அதற்கான செலவுகள் உள்ளிட்டவை பற்றிய விரிவான மதிப்பீடானது பாலிசிதாரருக்கு தெரிவிக்கப்படும்.
 3. க்ளைம் கோரிக்கையை சரிபார்க்க, வாகனத்தின் அசல் பதிவு சான்றிதழ்(ஆர்.சி புக்) மற்றும் உரிமையாளரின் அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வாடிக்கையாளர் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட வேண்டும். பின்னர் வாடிக்கையாளருக்கு திருப்பி அளிக்கப்படும்.
 4. பாலிசிதாரர் உடனடியாக நிரப்பப்பட்ட மற்றும் கையொப்பம் இடப்பட்ட க்ளைம் படிவத்தை நிறுவனத்திடம் மற்றும்/அல்லது சர்வேயரிடம் சமர்பிக்க வேண்டும். ஒருவேளை, அந்த வாகனங்கள் பெருநிறுவனத்தின் மூலம் வாங்கப்பட்டு இருந்தால் நிறுவனத்தின் முத்திரை படிவத்தில் இணைக்கப்பட வேண்டியது கட்டாயம்.
 5. க்ளைம் செயல்முறை நேரத்தின் போது, அதற்காக பொருந்தும் எனக் கருதப்பட்டால் எந்தவொரு கூடுதல் ஆவணங்களையும் கேட்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அங்கீகாரம் உள்ளது. மேலும், வாகனத்திற்கு தேவையான அனைத்து பழுதுப்பார்த்தலும் மேற்கொள்ளப்பட்ட உடன் மீண்டும் வாகனமானது மறு ஆய்வு செய்யப்படும்.
 6. இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிராக க்ளைம் கோரிக்கைகளுக்கு, ஒரிஜினல் கேஷ் பில் அல்லது இன்வாய்ஸ்(விலைப்பட்டியல்) ஆனது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சரிப்பார்த்தலுக்கு மற்றும் மேலும் கோரிக்கை தொடர்பான செயல்முறைகளை தொடரவும் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

- / 5 ( Total Rating)