யுனைடெட் இந்தியா டூவீலர் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்ய இருசக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர். மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் பிரிவு 146 கீழ் டூவீலர் இன்சூரன்ஸ் வைத்து இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத சூழ்நிலையில் ஏற்படும் விபத்து நிகழ்வுகளில் இருந்து தனிநபரின் அதிகளவிலான பணத்தை சேமிக்க டூவீலர் இன்சூரன்ஸ் உதவி புரிகிறது. இது ஓட்டுனர் நபருக்கு மற்றும் உடன் இருக்கும் பயணிக்கான செலவினங்களை கவனித்துக் கொள்வது மட்டுமல்லாமல், மேலும் அதில் சம்பந்தப்பட்ட மூன்றாம் தரப்பினரையும் கவனித்துக் கொள்கிறது.

டூவீலர் இன்சூரன்ஸ் ஏன் வாங்க வேண்டும்?

அனைத்து இருசக்கர வாகன உரிமையாளரும் ஓர் டூவிலர் இன்சூரன்ஸ்-ஐ வைத்து இருப்பது அவசியமாகும். பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களின் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசியில் பல்வேறு அம்சங்களை வழங்குகின்றன. தங்களுக்கு மிகவும் சரியாகப் பொருந்தக்கூடிய டூவீலர் இன்சூரன்ஸ்கள் குறித்து தேடும் நபர்களுக்கு Policyx.com ஓர் சரியான இடமாகும்.

இந்நிறுவனமானது அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் டூவீலர் இன்சூரன்ஸ்களை ஒப்பீடு செய்து, அவற்றை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. Policyx.com மூலம் பல்வேறு அம்சங்கள், நன்மைகள், உள்ளடக்கம், விலக்குகள் மற்றும் டூவீலர் இன்சூரன்ஸ் பெறுவதற்கான முறைகள் போன்ற அனைத்தும் பட்டியலிடப்படுகிறது மற்றும் ஒப்பிடப்படுகிறது.

இருசக்கர வாகனத்தின் வயது மற்றும் வாகனத்தின் பயன்பாட்டை பொறுத்து சிறப்பு தேவைகளைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய தேவைகள் ஆனது வாகன உரிமையாளர் மூலம் கவனிக்கப்பட வேண்டும் மற்றும் வாகனத்தின் இன்சூரன்ஸ் ப்ளானில் உள்ளடங்கியதாகவும் இருக்க வேண்டும். பல்வேறு நிறுவனங்களின் மூலம் வெவ்வேறான உள்ளடக்கம் மற்றும் விலக்குகள் கொண்ட டூவீலர் இன்சூரன்ஸ்கள் வழங்கப்படுகிறது. வாகனத்தின் அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொள்ளும் சிறந்த இன்சூரன்ஸ்-ஐ ஓர் தனிநபர் தேர்வு செய்வது அவசியம் ஆகும்.

ஒரு டூவீலர் இன்சூரன்ஸ் ஆனது ஒரு தனிநபருக்கு மற்றும் மற்றவருக்கும் நிதி ரீதியான ஆதரவை அளிக்கிறது. எனவே, அவை கட்டாயமாகிறது. இந்த இன்சூரன்ஸ் ஆனது விபத்து மூலம் ஏற்படும் உடைமைகள் சேதங்கள், வாகன பழுதுப்பார்த்தல், மருத்துவ செலவிற்கான பில்கள் உள்ளிட்டவையை கவனித்துக் கொள்கிறது. ஆன்லைன் மூலம் டூவீலர் இன்சூரன்ஸ் வாங்குவதை தவிர, Policyx.com ஆனது தனிநபர்கள் தங்களிடம் இருக்கும் இன்சூரன்ஸ்களை புதுப்பித்துக் கொள்ளவும் உதவுகிறது.

யுனைடெட் இந்தியா டூவீலர் இன்சூரன்ஸின் நன்மைகள் மற்றும் அம்சங்கள் 

இன்சூரன்ஸ் நிறுவனங்களால் வழங்கப்படும் ஒவ்வொரு அம்சங்கள் மற்றும் நன்மைகள் ஆனது மற்ற டூவீலர் இன்சூரன்ஸ்களில் இருந்து தங்களின் டூவீலர் இன்சூரன்ஸ்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. இன்சூரன்ஸ் நிறுவனங்களால் வழங்கப்படும் பொதுவான அம்சங்கள் மற்றும் நன்மைகளில் சில,

 1. மின்னல், புயல், வெள்ளம், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேராபத்துகளுக்கும், கொள்ளை, திருட்டு உள்ளிட்ட மனிதனால் உருவாகும் ஆபத்துகளுக்கு மற்றும் விபத்தின் காரணத்தால் ஏற்படும் சேதங்கள் உள்ளிட்டவைகளுக்கான பழுதுப்பார்த்தல் செலவுகள் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்திற்காக வழங்கப்படும்.
 2. தர்டு பார்ட்டி லியபிலிட்டி கவரேஜ் ஆனது இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்தின் மூலம் ஏற்படும் விபத்தில் சம்பந்தப்பட்ட மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் எவ்வித இழப்புகளை கவனித்துக் கொள்கிறது. இது வழக்கமாக எவ்வித தனிநபரின் மருத்துவ செலவுகளுக்கான பில்கள் மற்றும் உடைமைகள் சேதங்களுக்கான அனைத்து இழப்பீடுகளையும் உள்ளடக்கியுள்ளது.
 3. ஒரு டூவீலர் இன்சூரன்ஸ் ஆனது பாலிசிதாரர் மற்றும் பாலிசிதாரர் மூலம் குறிப்பிடப்பட்ட எந்தவொரு கூடுதல் இணைப்பு நபர்(அட் ஆன்) ஆகியவையே முதன்மையானவை.
 4. இன்சூரன்ஸ் மூலம் கவர் செய்யப்பட்ட கூடுதல் இணைப்பு(அட் ஆன்) பயணியையும் டூவீலர் இன்சூரன்ஸ் உள்ளடக்கியுள்ளது. டூவீலர் இன்சூரன்ஸில் கூடுதல் இணைப்பாக(அட் ஆன்) இருக்க கருதப்படும் நபரின் வயது 18 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டிய அவசியம்.
 5. ஒவ்வொரு டூவீலர் இன்சூரன்ஸின் கால அளவுகள் எந்த நிறுவனத்தின் இருந்து இன்சூரன்ஸ் வாங்கப்பட்டதோ அந்நிறுவனத்தை பொறுத்து இருக்கும்.
 6. அனைத்து டூவீலர் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் அவர்களின் பாலிசிதார்களுக்கு நோ க்ளைம் போனஸ் அம்சத்தையும் அளிக்கிறது. இந்த சிறப்பான போனஸ், பாலிசிதாரர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில் க்ளைம் பெறாமல் இருக்கும் பொழுது பயன்படுத்தப்படும். இது வாடிக்கையாளருக்கு தள்ளுபடியை அளிக்கிறது மற்றும் தனிநபர்கள் தங்களின் இன்சூரன்ஸ் பாலிசியை மீண்டும் புதுப்பிக்கும் வரை அவற்றை பயன்படுத்தலாம்.

டூவீலர் இன்சூரன்ஸின் உள்ளடக்கம் (இன்குலுஷன்)

டூவீலர் இன்சூரன்ஸ் வாங்க விரும்பும் எந்தவொரு தனி நபருக்கும் இருவகையான இன்சூரன்ஸ் பாலிசிகள் கிடைக்கின்றன. முதலில் இருப்பது மூன்றாம் தரப்பினர் பொறுப்பு (தர்டு பார்ட்டி லியபிலிட்டி) மற்றும் இரண்டாவதாக இருப்பது விரிவான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது சொந்த சேதம்.

மூன்றாம் தரப்பினர் பொறுப்பு என்பது மூன்றாம் நபருக்கு ஏற்படும் அபாயகரமான அல்லது அபாயமில்லா காயங்களை உள்ளடக்கிய டூவீலர் இன்சூரன்ஸின் ஒரு பகுதியாகும். இந்த காயங்கள் தனிப்பட்ட நபர் அல்லது சேதமடைந்த வாகனத்திற்கு நீட்டிக்கப்படலாம். இந்த வகை இன்சூரன்ஸின் பொருளானது மூன்றாம் தரப்பிருக்கு மட்டுமே மற்றும் மூன்றாம் நபரின் அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொள்ளும். ஆனால், இது இன்சூரன்ஸ் பாலிசிதாரரை உள்ளடக்கியது அல்ல.

ஒரு விரிவான இன்சூரன்ஸ் பாலிசி என்பது இன்சூரன்ஸ் எடுத்துக் கொண்டவர் மற்றும் சொந்த சேதத்திற்கான கவரையும் எடுத்துக் கொள்ளும் இன்சூரன்ஸ் ஆகும். இந்த இன்சூரன்ஸ் கவர் பாலிசிதாரர் மேற்கொண்டுள்ள காயங்களை கவனித்துக் கொள்வது மட்டுமல்லாமல், வேறுபட்ட சூழ்நிலைகளில் வாகனத்திற்கு ஏற்படும் பழுதுகளையும் கவனித்துக் கொள்கிறது. ஒரு விரிவான இன்சூரன்ஸ் பாலிசி ஆனது இயற்கை மற்றும் மனிதனால் உருவாகும் பேரழிவுகள் போன்ற பல்வேறு சூழ்நிலைகளின் கீழ் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்திற்கான பழுதுப்பார்த்தலை கவனித்துக் கொள்ளும்.

தீ, வெள்ளம், மின்னல், நிலநடுக்கம், சூறாவளிகள், நிலச்சரிவு, புயல், தானாக பற்றிக் கொள்ளுதல், வெடிப்பு உள்ளிட்டவை இயற்கை பேரழிவுகளில் உள்ளடங்கியவை. இந்த இயற்கை ஆபத்து சூழ்நிலையில், இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்திற்கு தேவைப்படும் பழுதுப்பார்த்தலை இன்சூரன்ஸ் நிறுவனம் கவனித்துக் கொள்ளும். மனிதனால் உருவாகும் ஆபத்துக்களான விபத்து, திருட்டு, மோதல், தீங்கிழைக்கும் செயல்கள் போன்றவை இன்சூரன்ஸ் பாலிசி கீழ் கவர் செய்யப்படும்.

டூவீலர் இன்சூரன்ஸின் விலக்குகள்

எந்தவொரு டூவீலர் இன்சூரன்ஸ்-ஐ வழங்கும் எந்தவொரு நிறுவனமும், அந்நிறுவனத்தால் உள்ளடங்காத விலக்குகளின் பட்டியலைக் கொண்டுள்ளது. டூவீலர் இன்சூரன்ஸ்க்கான சில விலக்குகள்,

 • வாகனத்தில் இயற்கையான தேய்மானங்களின் காரணமாக ஏற்படும் சேதங்களுக்கு.
 • மெக்கானிக்கல் அல்லது எலெக்ட்ரிக்கல் ப்ரேக்டவுன்(சீர்குலைவு) காரணமாக ஏற்படும் எந்தவொரு இழப்புகளும்.
 • வாகனத்தின் வழக்கமான பயன்பாடுகள் மற்றும் தேய்மானங்கள் காரணமாக ஏற்படும் எந்தவொரு இழப்புகளுக்கும்
 • வாகனத்தின் வழக்கமான பயன்பாட்டின் காரணமாக வாகன வகைகளில் ஏற்படும் சேதங்கள் மற்றும் பாகம் மாற்றங்களுக்கு.
 • வேறு எந்தவொரு நோக்கத்திற்காக வாகனத்தை பயன்படுத்தும் போது ஏற்படும் இழப்புகள்
 • மது, போதைப் பொருட்களின் விளைவுகளுடன் வாகனத்தின் ஓட்டுனர் பயணிக்கும் போது ஏற்படும் அனைத்து விதமான இழப்புகள்
 • போர், கலகம் அல்லது எந்தவொரு அணுசக்தி அபாய சூழ்நிலைகளின் கீழ் வாகனத்தில் ஏற்படும் எந்தவொரு சேதங்களும்.

டூவீலர் இன்சூரன்ஸ் பெறுவதற்காக தேவைப்படும் ஆவணங்கள் 

தனிநபர் ஒருவர் தங்களின் தேவைகள் மற்றும் முறையீடுகளுக்கு எந்த டூவீலர் இன்சூரன்ஸ் சரியாக பொருந்தக்கூடியது என முடிவு செய்யும் போது அதற்கு விண்ணப்பிக்கலாம். அந்த தனிநபர்கள் நேரடியாக இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு செல்லலாம். அங்கு நேருக்கு நேராக எதிர்க்கொண்டு இன்சூரன்ஸ்-ஐ விண்ணபிக்கலாம் அல்லது நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும். policyX.com வழியாக அனைத்து டூவீலர் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இணையதளத்தின் விண்ணப்ப பக்கத்திற்கு நேரடியாக அணுகுவது தொடர்பான நன்மைகளைக் கொண்டிருக்கிறது.

விண்ணப்ப படிவங்கள் நிரப்புதல் மற்றும் படிவங்களை இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் அல்லது நிறுவனத்தில் சமர்பித்தலை தவிர, தனிநபரின் ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் செய்யப்படும் வாகனத்தின் பதிவு ஆவணங்கள், தனிநபரின் முகவரி ஆதாரங்கள் மற்றும் அவரின் வங்கி விவரங்கள் உள்ளிட்ட பிற பொதுவான ஆவணங்களும் தேவைப்படுகிறது.

 • மூன்றாம் தரப்பு பொறுப்பு கவர்
 • வாகன சேதங்களுக்கான கவர்
 • தனிப்பட்ட விபத்து கவர்
 • பின்னிருக்கை பயணிக்கான கவர்

- / 5 ( Total Rating)