யுனிவர்சல் சோம்போ டூவீலர் இன்சூரன்ஸ்
 • சிறந்த திட்டங்கள்
 • எளிதான ஒப்பீடு
 • உடனடி வாங்குதல்
PX step

பிரீமியத்தை ஒப்பிடுக

1

2

நிறுவனம்
மாற்று
ஆர்டீஓ குறியீடு
பதிவு தேதி
தொடர்ந்து

யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆனது வேகமாக வளர்ந்து வரும் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்திய வங்கிகள் (அலகாபாத் வங்கி, கர்நாடக வங்கி மற்றும் இந்திய ஓவர்சீஸ் வங்கி), தபூர் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் ஒரு ஜப்பானிய இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும். இந்நிறுவனம் 2007-ல் நிறுவப்பட்டது மற்றும் அதன் தலைமையகம் மும்பையில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் டூவீலர் இன்சூரன்ஸ் திட்டங்கள் மோட்டார் இன்சூரன்ஸ் என்ற பிரிவின் கீழ் வருகின்றன. யுனிவர்சல் சோம்போ மிகவும் மலிவான விலையில் டூவீலர் இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்குகிறது. அவை ஒரு டூவீலர் வாகனத்தின் சேதங்களை ஒரு வீரனைப் போன்று பாதுகாக்கிறது. 

சிறப்பம்சங்கள்

28-08-2020 அட்டவணை புதுப்பிக்கப்பட்டது

மூன்றாம் தரப்பு பொறுப்பு

7.5 லட்சம் வரை

நெட்வொர்க் கேரேஜ்கள்

3500+

க்ளைம் செட்டில்மென்ட் விகிதம்

88%

யுனிவர்சல் சோம்போ டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசியை எவ்வாறு புதுப்பிப்பது?

உங்களின் யுனிவர்சல் சோம்போ டூவீலர் இன்சூரன்ஸைப் புதுப்பிக்க இரண்டு வழிகள் உள்ளன - பாலிசிஎக்ஸ்.காம் மூலமாகவோ அல்லது யுனிவர்சல் சோம்போ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாகவோ புதுப்பிக்கலாம். அவற்றை கீழே விரிவாக விவாதிப்போம்.

பாலிசிஎக்ஸ்.காம் மூலம் புதுப்பித்தல்

 • இந்தப் பக்கத்தின் " டூவீலர் இன்சூரன்ஸ் மேற்கோள்களை ஒப்பிடு " எனும் பகுதிக்குச் சென்று உங்கள் டூவீலர் வாகனத்தின் விவரங்களைச் சமர்ப்பிக்கவும். மேலும், புதுப்பித்தல் விருப்பத்தை கிளிக் செய்து காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்களை வழங்கவும்.
 • " தொடர்ந்து செயல்படு " என்பதைக் கிளிக் செய்க.
 • மேற்கோள்களின் பட்டியலிலிருந்து, யுனிவர்சல் சோம்போ டூவீலர் இன்சூரன்ஸைத் தேர்வுசெய்க.
 • விவரங்களை மதிப்பாய்வு செய்து, ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டண ஆதாரத்துடன் பிரீமியத்தை செலுத்துங்கள். உதாரணமாக, கிரெடிட்/டெபிட் கார்டுகள், நெட்பேங்கிங் அல்லது இ-வல்லெட்கல் மூலமாக செலுத்துவது.
 • பாலிசி ஆவணங்களுடன் பாலிசி புதுப்பித்தலுக்கான கட்டணம் தொடர்பான மெயிலை பதிவுசெய்த இமெயில் ஐடி-க்கு வாடிக்கையாளர் பெறுவார்.

யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் மூலம் புதுப்பித்தல்

 • யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 • " உடனடி புதுப்பித்தல் " இன் பாப் அப் கிடைக்கும். மோட்டார் பிரிவின் கீழ் உள்ள " இப்போது புதுப்பிக்கவும் " என்பதைக் கிளிக் செய்க.
 • பாப்-அப் இல்லை என்றால், உங்கள் கர்சரை " மோட்டார் " இல் எடுத்து சென்று, டூவீலர் / பிரைவேட் காரின் கீழ் " புதுப்பித்தல் " என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
 • இரண்டு படிகளிலும், நீங்கள் " மோட்டார் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் பக்கத்தை " அடைவீர்கள்.
 • டூவீலர் பிரிவின் கீழ் " இப்போது புதுப்பிக்கவும் " என்பதைக் கிளிக் செய்க.
 • உங்கள் பாலிசி எண்ணைச் சமர்ப்பித்து, " இப்போது புதுப்பிக்கவும் " என்பதைக் கிளிக் செய்க.
 • உங்கள் திட்டம் மற்றும் பிரீமியத்தின் விவரங்களை சரிபார்க்கவும்.
 • டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்துங்கள்.
 • பாலிசி ஆவணங்களை நிறுவனம் உங்கள் இமெயிலுக்கு பகிர்ந்து கொள்ளும்.

யுனிவர்சல் சோம்போ டூவீலர் இன்சூரன்ஸின் நன்மைகள்

தேவைப்படும் நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவ, நிறுவனம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சிறந்த நன்மைகளை வழங்குகிறது.

7-நாள் க்ளைம் செட்டில்மென்ட் : அனைத்து ஆவணங்களும் மற்றும் தொடர்புடைய தகவல்களும் சமர்ப்பிக்கப்பட்டு, யுனிவர்சல் சோம்போ அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், இந்நிறுவனம் 7 நாட்களில் க்ளைமை தீர்த்து வைக்கிறது. 

24/7 க்ளைம் உதவி : கடிகாரம் எந்த நேரத்தைக் காட்டினாலும் பரவாயில்லை, வாடிக்கையாளர்களை அவர்களின் கேள்விகளின் மூலம் வழிநடத்த யுனிவர்சல் சோம்போ வாடிக்கையாளர் ஆதரவு எப்போதும் கிடைக்கிறது. கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம் நீங்கள் எளிதாக தொடர்பு கொள்ளலாம்.

லாங் டெர்ம் கவரேஜ் : யுனிவர்சல் சோம்போ ஆனது டூவீலர் வாகனத்திற்கு 2-3 ஆண்டுகளுக்கு பாதுகாப்பை வழங்கவும், வாடிக்கையாளர்களை அவர்களின் பாலிசியை அடிக்கடி புதுப்பிக்கும் கடமையிலிருந்து விடுவிக்கவும் லாங் டெர்ம் டூவீலர் இன்சூரன்ஸை வடிவமைத்துள்ளது.

யுனிவர்சல் சோம்போ டூவீலர் இன்சூரன்ஸின் கூடுதல் இணைப்புகள்(ஆட்-ஆன்ஸ்)

இந்நிறுவனம் பரந்த அளவிலான கூடுதல் இணைப்புகள்(ஆட்-ஆன்ஸ்) வழங்குகிறது. இது மலிவான விலையில் அடிப்படை கவரை மேம்படுத்த உங்களை அனுமதிக்கிறது. உங்கள் குறிப்புக்கான அத்தகைய கூடுதல் இணைப்புகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பூஜ்ஜியம்/தேய்மானமில்லா கவர் : இந்த கவருடன், க்ளைம் செலுத்தும் போது நிறுவனம் தேய்மானத்தைத் தள்ளுபடி செய்யும்.

விலைப்பட்டியலுக்கு மீள்வது : இன்சூரன்ஸ் செய்யப்பட்ட டூவீலர் வாகனம் திருடப்பட்டிருந்தால் அல்லது விபத்தில் முற்றிலுமாக சேதமடைந்து விட்டால், டூவீலர் வாகனத்தின் முழுமையான கொள்முதல் மதிப்பு உரிமையாளருக்கு செலுத்தப்படுகிறது.

தினசரி பணம் அலவன்ஸ் : டூவீலர் வாகனம் பழுதுபார்ப்பதற்காக கேரேஜில் இருந்தால், தினசரி பயணத்திற்காக பாலிசிதாரருக்கு தினசரி பணம் ஒதுக்கப்படும். அதிகபட்சம் 7 நாட்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. திருட்டு வழக்குகளுக்கு, 10 நாட்களுக்கு (அதிகபட்சம்) அலவன்ஸ் வழங்கப்படுகிறது.

ஓட்டுநர் உரிமம்/ஆர்.சி தொலைந்தால் : உங்கள் தற்போதைய ஓட்டுநர் உரிமத்தை தொலைத்தால், புதிய அல்லது நகல் ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழை வாங்குவதற்கு நிறுவனம் ரூ.500 செலுத்தும்.

உரிமையாளர்-ஓட்டுநருக்கு கூடுதல் விபத்து காயம் இழப்பீடு : இன்சூரன்ஸ் செய்யப்பட்ட டூவீலர் வாகனத்தில் பயணம் செய்யும் போது தாக்குதல் அல்லது இறப்பு/நிரந்தர மொத்த இயலாமைக்கு வழிவகுக்கும் வேறு ஏதேனும் விபத்து காயங்கள் ஆகியவற்றிற்கு எதிராக 8 லட்சம் வரை போதுமான பாதுகாப்பு கிடைக்கும்.

உரிமையாளருக்கான பிஏ நன்மை : இந்த கவரானது உங்கள் டூவீலர் வாகனத்தில் அல்லது வேறு ஒருவரின் வாகனத்தில் பயணம் செய்தாலும், விபத்தால் மரணம்/நிரந்தர இயலாமை அல்லது சாதாரண உடல் காயங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் நிதி கவரை வழங்கும்.

குடும்பத்திற்கான விபத்து மருத்துவமனையில் சேர்க்கும் கவர் : உங்கள் குடும்பம் உங்களுடன் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட டூவீலரில் பயணம் செய்து விபத்தை சந்தித்தால், உள்நோயாளிகளுக்கான சிகிச்சையின் செலவு ஆனது இன்சூரன்ஸ் வழங்குநரால் திருப்பிச் செலுத்துதல் அடிப்படையில் ஏற்கப்படும்.

மருத்துவமனை தினசரி பணம் : காயமடைந்த டூவீலர் வாகன உரிமையாளர் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டால் தினசரி பணமாக ரூ.2000 (அதிகபட்சம் 30 நாட்களுக்கு) வழங்கப்படுகிறது. விபத்துக்களால் காயம் ஏற்படும்போது இது பொருந்தும்.

கூடுதல் விபத்து காயங்கள் இழப்பீடு (குடும்பம்) : இந்த இன்சூரன்ஸ் கவரானது டூவீலர் வாகன உரிமையாளரின் குடும்பத்திற்கு நிகழும் விபத்து மரணம் அல்லது நிரந்தர/பகுதி குறைபாடுகள் ஆகியவற்றிற்கு எதிரான நிதி பாதுகாப்பை இந்த இன்சூரன்ஸ் திட்டம் உறுதி செய்யும்.

குடும்பத்திற்கான விபத்து மருத்துவமனையில் சேர்க்கும் பிரிவு : இன்சூரன்ஸ் செய்யப்பட்ட டூவீலர் வாகனத்தில் மட்டுமே பயணிக்கும் போது ஏற்படும் விபத்து காயங்களுக்காக உள்நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகளை வழங்குகிறது.

குழந்தை கல்வி ஆதரவு பிரிவு : இன்சூரன்ஸ் செய்யப்பட்ட டூவீலர் வாகனத்தின் உரிமையாளர் விபத்து காரணமாக மரணம் அல்லது நிரந்தர மொத்த இயலாமையுடன் சந்தித்தால், பாலிசிதாரரின் குழந்தை/குழந்தைகளின் கல்வி கட்டணத்திற்கு இந்த ஆட்-ஆன்ஸ் மூலம் கட்டணம் செலுத்தப்படும்.

நுகர்பொருட்களின் விலை : அடிப்படை தொகுப்பில் விலக்கப்பட்டுள்ள நுகர்பொருட்களின் விலை (ஸ்க்ரூஸ், நட்டுகள், போல்ட், பிரேக் ஆயில், லூப்ரிகண்டுகள் மற்றும் கிரீஸ்) இந்த ஆட்-ஆன்ஸ் கீழ் அடங்கும்.

சாலையோர உதவி : சாலையோர உதவித் திட்டமானது இழுத்து செல்லும் உதவி, பஞ்சர் பழுது, கேப் சேவை, எரிபொருள் விநியோகம், தங்குமிடம் மற்றும் வாகன பூட்டைத் திறப்பது போன்ற வசதிகளை வழங்குவதன் மூலம் டூவீலர் வாகன உரிமையாளருக்கு பிரேக்டவுன் சூழ்நிலைகளின் போது உதவும்.

எஞ்சின் பாதுகாப்பான் : பலத்த மழை/வெள்ளம்/சூறாவளி காரணமாக டூவீலர் வாகனத்தின் இதயத்தில் (எஞ்சின்) தண்ணீர் உட்புகுவதில் இருந்தும் மற்றும் லூப்ரிகேட்டிங் ஆயில் கசிவு ஏற்பட்டு இயந்திர கியர்கள், முக்கிய பாகங்கள் சேதமடைவதில் இருந்தும் பாதுகாக்கப்படும் 

என்சிபி பாதுகாப்பான் : ஒரு ஆண்டில் நீங்கள் எத்தனை க்ளைம் தாக்கல் செய்தீர்கள் என்பது முக்கியமல்ல, என்சிபி சதவீதம் பாதிக்கப்படாமல் இருக்கும் மற்றும் இந்த கவரின் கீழ் குறைக்கப்படாது.

யுனிவர்சல் சோம்போ டூவீலர் இன்சூரன்ஸின் கீழ் தள்ளுபடிகள்

 • நோ க்ளைம் போனஸ் : டூவீலர் இன்சூரன்ஸை வாங்குவதன் மூலம், நீங்கள் ஒருபோதும் நஷ்டத்தில் இருக்க மாட்டீர்கள். பாலிசியை சரியான நேரத்தில் புதுப்பிப்பதன் மூலமும், பாலிசி ஆண்டில் க்ளைம் தாக்கல் செய்யாததன் மூலமும் நிறுவனம் உண்மையாக இருப்பதற்கான நோ க்ளைம் போனஸை உங்களுக்கு எப்போதும் வழங்கும்.
 • ஆட்டோமொபைல் அசோசியேஷன் உறுப்பினர் : நீங்கள் ஆட்டோமொபைல் அசோசியேஷனின் செயல்படும் உறுப்பினராக இருந்தால், நீங்கள் 5% தள்ளுபடி பெறுவீர்கள்.
 • திருட்டு எதிர்ப்பு சாதனங்களை நிறுவுதல் : உங்கள் டூவீலர் வாகனத்தை கவனித்துக்கொள்வது மற்றும் திருட்டு எதிர்ப்பு சாதனங்களை நிறுவுவது மூலம் டூவீலர் வாகனத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் பிரீமியங்களுக்கான தள்ளுபடியையும் உங்களுக்கு வழங்கும்.
 • தன்னார்வ விலக்குகள் : டூவீலர் வாகன உரிமையாளர்கள் அதிக விலக்குகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பிரீமியங்களில் மதிப்புமிக்க தள்ளுபடியைப் பெறலாம். இது கட்டாய விலக்குக்கு பதிலாக ஒரு விருப்பமாகும், அங்கு நீங்கள் க்ளைம் தொகையைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும்.

யுனிவர்சல் சோம்போ டூவீலர் இன்சூரன்ஸ் பிரீமியத்தை எவ்வாறு கணக்கிடுவது?

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில காரணிகள் உள்ளன, அவை உங்கள் பிரீமியம் தொகையை பாதிக்கும். அத்தகைய சில முக்கிய காரணிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன -

 • உங்கள் பைக்/ஸ்கூட்டரின் மாடல்
 • மாடலின் துணை வகை
 • பைக்/ஸ்கூட்டரின் கியூபிக் கேபாசிட்டி
 • பதிவு செய்யும் நகரம்
 • பதிவு ஆண்டு
 • கூடுதல் இணைப்புகள் (ஆட்-ஆன்ஸ்), தேர்வுசெய்தால்

சிறந்த புரிதலுக்காக சில பிரீமியம் மாதிரிகளைப் பார்ப்போம்.

28-08-2020 அட்டவணை புதுப்பிக்கப்பட்டது

மாடல்

விலை

திட்ட வகை

ஐடிவி*

பூஜ்ஜிய தேய்மானம்

மதிப்பிடப்பட்ட பிரீமியம்

பஜாஜ் பிளாட்டினா 100 சிசி 

ரூ.47,763

விரிவான

ரூ.35,225

ரூ.85

ரூ.941

ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் ஏபிஎஸ் 346 சிசி 

ரூ.1,56,496

விரிவான

ரூ.1,40,790

ரூ.845

ரூ.1986

சுசுகி இன்ட்ரூடர் எஃப்ஐ-154 சிசி 

ரூ.1,19,883

விரிவான

ரூ.84,719

ரூ.238

ரூ.1611

யமஹா எம்டி15 

ரூ.1,38,900

விரிவான

ரூ.1,25,014

ரூ.675

ரூ.1953

* மதிப்புகள் நகரம் (குருகிராம்) மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆண்டு (2020) அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன.

யுனிவர்சல் சோம்போ டூவீலர் இன்சூரன்ஸின் க்ளைம் செயல்முறை 

 • இன்சூரன்ஸ் வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள் : யுனிவர்சல் சோம்போ நிறுவனத்திற்கு தொலைபேசி அழைப்பு, இமெயில் அல்லது கிளைக்கு நேரடியாக வருகை மூலம் க்ளைம் குறித்து தெரிவிக்கவும்.
 • எஃப்.ஐ.ஆரை பதிவு செய்யுங்கள் : விபத்து மற்றும் திருட்டு வழக்குகளுக்கு இது பொருந்தும். சம்பவம் தொடர்பாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குத் தெரிவிக்க வேண்டும். 
 • டூவீலர் வாகனத்தை பரிசோதித்தல் : டூவீலர் வாகனத்திற்கு ஏற்பட்ட இழப்பு குறித்த முழுமையான கணக்கெடுப்பை மேற்கொள்ள நிறுவனம் ஒரு க்ளைம் சர்வேயரை நியமிக்கும் மற்றும் செலுத்த வேண்டிய மதிப்பிடப்பட்ட பழுதுபார்ப்பு அறிக்கையைத் தயாரிக்கும். அந்த அறிக்கை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.
 • ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் : க்ளைம்களை விரைவாக அங்கீகரிக்க க்ளைம் மேலாளரிடம் கேட்கப்பட்ட தொடர்புடைய ஆவணங்களுடன் க்ளைம் படிவத்தை சமர்ப்பிக்கவும். க்ளைம் படிவத்தை யுனிவர்சல் சோம்போ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது நீங்கள் அதை நேரடியாக கிளையிலிருந்து எடுக்கலாம்.
 • க்ளைமின் ஒப்புதல் : ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு, நிறுவனம் தொலைபேசி அழைப்பு, மெசேஜ், இமெயில் அல்லது தபால் மூலம் க்ளைம் ஒப்புதல் அல்லது நிராகரிப்பைத் தெரிவித்துக் கொள்ளும்.
 • க்ளைம் செலுத்துதல் : க்ளைம் அங்கீகரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தப்படுகிறது. பாலிசி எண்ணைச் சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் க்ளைம் நிலையை இணையதளத்தின் மூலம் கண்காணிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்

 • பாலிசி ஆவணங்கள்
 • விபத்து மற்றும் திருட்டு வழக்குகளுக்கான எஃப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை)
 • ஓட்டுநர் உரிமம்
 • வாகன பதிவு சான்றிதழ்
 • பாலிசிதாரரின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள்
 • இழப்பு/உடல் காயங்கள் ஏதேனும் இருந்தால், அதன் சுருக்கமான விளக்கம்
 • டூவீலர் வாகனம் ஆய்வு செய்யக்கூடிய இடத்தின் முகவரி
 • விபத்து ஏற்பட்டால், விபத்தின் மற்றும் சேதமடைந்த டூவீலர் வாகனத்தின் புகைப்படங்கள் 
 • பழுதுபார்ப்பு பில்கள் / விலைப்பட்டியல் பில்கள்

தொடர்பு விவரங்கள்

யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

கட்டணமில்லா எண் : 1800 22 4030 | 1800 200 5142

இமெயில் ஐடி : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

பதிவு செய்யப்பட்ட முகவரி : யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், ப்ளாட் எண்- இஎல் -94, கே.எல்.எஸ் டவர், டிடிசி இண்டஸ்ட்ரியல் ஏரியா, எம்ஐடிசி, மஹாபே, நவி மும்பை 400710.

பாலிசிஎக்ஸ்.காம் இன்சூரன்ஸ் வெப் அக்ரிகேட்டர்

தொடர்பு எண் : 1800-4200-269 / 1800-4203-180

இமெயில் ஐடி : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

பதிவுசெய்யப்பட்ட முகவரி : பாலிசிஎக்ஸ்.காம் இன்சூரன்ஸ் வெப் அக்ரிகேட்டர் பிரைவேட் லிமிடெட், 1 வது மாடி, லேண்ட்மார்க் டவர், ப்ளாட் எண்-2, சவுத்சிட்டி-1, சி-113 க்கு எதிரே, அசோக் மார்க், பிரிவு-41, குருகிராம்-ஹரியானா-122001 இந்தியா.

28-08-2020 புதுப்பிக்கப்பட்டதுு